ஆன்லைன் உணவு ஆர்டர்

ஆன்லைன் உணவு; 5% ஜி.எஸ்.டி… புதிய நடைமுறை – வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

ஐந்து சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விகிதம் எப்படி வசூலிக்கப்படும் என்பது குறித்து அரசிடம் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, ஜொமாட்டோ ஆகியவை விளக்கம் கேட்டிருக்கின்றன. புதிய வரி விதிப்பு பயனாளர்களை எப்படி பாதிக்கும்?

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்றவைகளின் சேவைக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. உணவு டெலிவரி நிறுவனங்கள் 5% வரியை டெலிவரியின்போது வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும், இந்த புதிய நடைமுறை 2022 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

இதுகுறித்து மத்திய வருவாய்த் துறை செயலாளர் தருண் பஜாஜ் கூறுகையில், `இந்த விவகாரத்தில் புதிய வரி எதுவும் விதிக்கப்படவில்லை. நீங்கள் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மூலன் உணவை ஆர்டர் செய்யும்போது, அதற்கான வரியை உணவகங்கள் செலுத்துகின்றன. ஆனால், சில உணவகங்கள் இவ்வாறு வரியை அரசுக்கு முறையாகச் செலுத்துவதில்லை என்பது தெரியவந்திருக்கிறது. உணவகங்கள், அந்த வரியை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்தே, அரசுக்கு செலுத்திவருகின்றன. இந்த புதிய வரி விதிப்பு முறையில், உணவு டெலிவரி நிறுவனங்கள் அதை வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும். நடைமுறை மட்டுமே மாறியிருக்கிறது. புதிதாக எந்தவொரு வரியும் விதிக்கப்படவில்லை’’ என்று விளக்கமளித்திருந்தார். இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர 3 மாதங்கள் இருக்கும் நிலையில், வரி விதிப்பு முறை எப்படி செயல்படுத்தப்படும் என்றும், இதனால் மொத்த செலவு அதிகரிக்கும் என்றும் ஸ்விக்கி, ஜொமாட்டோ நிறுவனங்கள் கவலை தெரிவித்திருக்கின்றன.

ஆன்லைன் உணவு ஆர்டர் – இரட்டை வரி!

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

தற்போதைய நடைமுறையில் உணவகங்கள் ஜி.எஸ்.டி வரியை ஆன்லைன் உணவு நிறுவனங்களுக்கு செலுத்தும்போது, Input Tax Credit (ITC) எனப்படும் குறிப்பிட்ட தொகையைத் திரும்பப் பெற முடியும். ஜி.எஸ்.டி வரி செலுத்தும் அனைவரும் இரட்டை வரி விதிப்பில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ITC நடைமுறை அமலில் இருக்கிறது. உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர், உணவகத்துக்கு ஜி.எ.ஸ்டியாக ரூ.10 செலுத்துகிறார் என்று வைத்துகொள்வோம். அந்த உணவகம் உணவு டெலிவரி நிறுவனத்துக்கு ரூ.7 ஜி.எஸ்.டி வரியாகச் செலுத்துகிறது. அரசிடமிருந்து உணவகம் ITC-யாக ரூ.7-ஐத் திரும்பப் பெற முடியும். இந்த நடைமுறையால், அரசுக்கு ரூ.3 மட்டுமே வரியாகச் செலுத்தப்படும்.

உணவகம், உணவு டெலிவரி நிறுவனம் என இரண்டு இடங்களில் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டால், உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலமாகவே அரசுக்கு வரி செலுத்தப்படும். இதில், உணவகங்கள் ITC வாயிலாகக் கட்டப்பட்ட வரி எதையும் திரும்பப் பெற முடியாது.

உணவகம் – உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு?

இதை ஒரு எளிமையான உதாரணம் மூலம் நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு வாடிக்கையாளர் ரூ.129 மதிப்பிலான உணவை ஆன்லைனில் டெலிவரி நிறுவனம் மூலம் ஆர்டர் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதில் வரி, உணவுக்கான விலை எப்படிக் கணக்கிடப்படும் என்றால்,

உணவின் விலை – ரூ.100

உணவகத்துக்கு வாடிக்கையாளர் செலுத்தும் வரி – ரூ.5 (5% வரி)

டெலிவரி கட்டணம் – ரூ.24 (ரூ.20+4 ரூபாய் (கமிஷனுக்கான 18% வட்டி) உணவகத்திடமிருந்து வசூலிக்கப்படும்)

ஸ்விக்கி, ஜொமாட்டோ
ஸ்விக்கி, ஜொமாட்டோ

மேற்கண்ட நடைமுறையில், ITC வாயிலாக உணவகங்கள் உணவு டெலிவரி நிறுவனங்களிடம் செலுத்திய தொகையான 4 ரூபாயை அரசிடமிருந்துத் திரும்பப் பெற முடியும். இதனால், அவை அரசுக்கு ஒரு ரூபாயை மட்டுமே வரியாகச் செலுத்துகின்றன. மீதமிருக்கும் 4 ரூபாயை உணவு டெலிவரி நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தும். இப்படியாகவே, அரசு மொத்தமாக ரூ.5 வரியைப் பெறுகிறது.

சமீபத்திய ஜி.எஸ்.டி வரி விதிப்பு மாற்றம் மூலம், ஜி.எஸ்.டி வரி செலுத்தும் மொத்த நடைமுறையையும் ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற நிறுவனங்களே செய்ய வேண்டும் என்கிறது அரசு. இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில் மேற்கண்ட நடைமுறையில் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய ரூ.5+ரூ.4 என மொத்தம் 9 ரூபாயையும் டெலிவரி நிறுவனங்களே செலுத்த வேண்டும். அவை ITC-க்குத் தகுதியானவையா, எந்த அளவுக்கான தொகையைத் திரும்பப் பெற முடியும் போன்றவை குறித்து அரசு இதுவரை விளக்கவில்லை.

ஜொமாட்டோ
ஜொமாட்டோ

புதிய நடைமுறையில் ஜி.எஸ்.டி வரியை மொத்தமாக டெலிவரி செய்யும்போது வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கும் நபராக ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற டெலிவரி நிறுவனங்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. உணவக சேவைகளாக அவை வகைப்படுத்தப்பட்டு 5% வரி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. புதிய வரி விதிப்பு நடைமுறை அமலுக்கு வந்தால், மேற்கண்ட உதாரணத்தில் 6 ரூபாயை ரூ.120 (உணவு ரூ.100 + 100 ரூபாய்க்கு மேலான டெலிவரி கட்டணம் ரூ.20) என்ற மொத்தத் தொகையோடு கட்டணமாக ஸ்விக்கி வசூலிக்க வேண்டி வரும். அதேநேரம், உணவகங்கள் ITC வழியாக எந்தவொரு தொகையையும் திரும்பப் பெற முடியாது. இது அவர்களுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தும்.

வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

உணவு டெலிவரி
உணவு டெலிவரி

புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை வாடிக்கையாளர்களை எந்தவகையிலும் பாதிக்காது. வரி வசூலிப்பு முறையில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் முறையில் சின்ன மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறது மத்திய அரசு. ஆனால், உணவகங்கள், டெலிவரி நிறுவனங்களுக்கு இதன்மூலம் பாதிப்பு ஏற்படும் நிலையில், அந்த சுமையை வாடிக்கையாளர்களிடமே இவை இறக்கி வைக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால், எப்படிப் பார்த்தாலும் புதிய நடைமுறை அமலுக்கு வரும்பட்சத்தில் ஆன்லைன் ஆர்டர்கள் விலை அதிகமாகவே வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உணவுக்கு 50 ரூபாய் ஜி.எஸ்.டியாக செலுத்தப்படும் பட்சத்தில், மொத்தத் தொகையான ரூ.1050-க்கும் 5% வரி கூடுதலாக விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக டெலிவரி நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. ITC வாயிலாக வரியைத் திரும்பப் பெறாத நிலையில், உணவகங்களால் 5% வரி, டெலிவரி நிறுவனங்களால் 5% என 10% வரி வாடிக்கையாளர்கள் செலுத்தும் நிலை ஏற்படும் சூழல் இருப்பதாகவும் கூறுகிறார்கள்

விளக்கம் கேட்கும் ஸ்விக்கி, ஜொமாட்டோ!

இந்த புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை எப்படி செயல்படுத்தப்படும் என்பது குறித்து அரசு தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என்று ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்றவை வலியுறுத்தியிருக்கின்றன. கூடுதல் சுமையால் ஆன்லைன் டெலிவரியில் வாங்கப்படும் உணவு வகைகளின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், இதனால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Also Read – கூட்டுறவு சங்க நகைக்கடன் மோசடி: `நகையே இல்லை; போலி நகைகள்’ – எந்தெந்த மாவட்டங்களில் சர்ச்சை?

41 thoughts on “ஆன்லைன் உணவு; 5% ஜி.எஸ்.டி… புதிய நடைமுறை – வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?”

  1. top 10 pharmacies in india [url=https://indiapharmast.com/#]indian pharmacy[/url] online shopping pharmacy india

  2. canadianpharmacy com [url=https://canadapharmast.com/#]legitimate canadian pharmacy online[/url] legitimate canadian pharmacies

  3. legit canadian online pharmacy [url=https://canadapharmast.online/#]best online canadian pharmacy[/url] canadian pharmacy ltd

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top