Actors

ஓப்பனிங்லாம் ஓ.கே.. ஆனால், என்னதான் ஆச்சு இவங்களுக்கு?

சச்சின் படத்துல வடிவேலு, தாடி பாலாஜிகிட்ட.. ‘ஏண்டா தூரத்துல வர்றப்போ நல்லா வந்துக்கிட்டிருந்த கிட்டக்க வந்ததும் திடீர்னு காணாமப் போய்ட்டன்னு’ கேப்பாரு. அது மாதிரி இன்டஸ்ட்ரில ஏற்கெனவே சக்ஸஸ்ஃபுல்லா இருக்குற தங்களோட உறவுகளை வைச்சு தாங்களும் ஹீரோவா ஆகி, அடுத்த சில வருசங்களுக்கு சக்ஸஸ்ஃபுல்லா படங்களும் கொடுத்து அப்புறம் அப்படியே ஃபேட் அவுட் ஆன ஹீரோக்களைப் பத்திதான் இப்போ நாம பார்க்கப்போறோம்.

நகுல்

முதல்வன் ப்ளாக்பஸ்டருக்கு அப்புறம் டைரக்டர் ஷங்கர் புதுமுகங்களை வெச்சு பாய்ஸ்னு ஒரு படம் ஆரம்பிக்கிறாரு. அதுக்கு சான்ஸ் டிரை பண்ணி நடிகை தேவயானி வீட்டு ஆளுங்க, தேவயானியோட இன்னொரு தம்பி மயூர்ங்கிறவரு ஃபோட்டோஸை ஷங்கர் ஆபிஸுக்கு அனுப்புறாங்க. ஆனா அந்த ஃபோட்டோக்கள்ல ஒண்ணுல ஒரு மூலையில இருந்த நகுலைப் பார்த்த ஷங்கர் அஸிஸ்டெண்ட்ஸ் ஷங்கர்ட்ட நகுலைக் காட்ட அவருக்கும் நகுலைப் பிடிச்சுப்போச்சு. இப்படிதான் 19 வயசுலேயே நகுலுக்கு பாய்ஸ்ங்கிற ஒரு மிகப்பெரிய ப்ராஜெக்ட்ல நடிக்கிற வாய்ப்பு அமைஞ்சுது. பெரிய எதிர்பார்ப்புல உருவான பாய்ஸ் படம் ரிலீஸாகி மிகப்பெரிய ஃபிளாப் ஆனாலும் படத்தோட வீச்சு பெருசா இருந்ததால நகுலுக்கு தமிழ்நாடு முழுக்க ரீச் கிடைச்சுது. ஆனாலும் தமிழ்ல்ல அவருக்கு பெருசா வாய்ப்புகள் எதுவும் தேடிவரலை. தெலுங்குல மட்டும் ‘கீலு குர்ரம்’ ங்கிற ஒரு சின்ன பட்ஜெட் படத்துல காமெடியனா ஒரு வாய்ப்பு வந்துச்சு. ஆனா அந்தப் படமும் பெரிய ஃபிளாப். அப்புறம் அடுத்த சில வருசங்கள் நடிப்புல இருந்து பிரேக் எடுத்துக்கிட்டாரு நகுல்.

பேஸிக்கா அவர் ஒரு மியூசிசியன்ங்கிறதால இந்த இடைப்பட்ட காலத்துல ஹாரிஸ் ஜெயராஸ் மியூசிக்ல அந்நியன், வேட்டையாடு விளையாடு, கஜினி படத்துலலாம் பாடல்கள் பாட ஆரம்பிச்சாரு. கற்க கற்க.. பாட்டுலகூட நர வேட்டைகள் வேட்டைகள் ஆட.. அப்படினு தொடங்கி வர்ற வரிகள் நகுல் பாடுனதுதான். இந்த காலகட்டத்துலதான் நகுலுக்கு ‘காதலில் விழுந்தேன்’ படம் கிடைக்குது, அந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி போட்ட நாக்கு முக்க பாட்டு ரிலிஸுக்கு முன்னாடியே மிகப்பெரிய வைரல் ஆகி அப்போ ஃபேமஸா இருந்த கொரியன் செட் போன் எல்லாத்துலயும் ஒலிக்க ஆரம்பிச்சுது. போதாதுன்னு சன் பிக்சர்ஸ் வேற இந்த படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணதும் படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிரியேட் ஆச்சு. ப்ரோமோசன் கிளிப்பிங்க்ல வந்த செம்ம ஃபிட்டா வந்த நகுலைப் பாத்து, பாய்ஸ்ல வந்த அந்த குண்டுப்பையனா இந்த பையன்னு தமிழ்நாடே ஆச்சர்யப்பட்டுச்சு. பாய்ஸ் மாதிரியே இந்தப் படத்துலேயும் அவர் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் கொடுத்திருந்தாலும் அவரை எல்லோரும் ரசிக்கதான் செஞ்சாங்க. அடுத்தடுத்து ‘மாசிலாமணி’, ‘கந்தகோட்டை’, ‘வல்லினம்’ னு நிறைய நல்ல டீம் கொண்ட படங்கள் அவருக்கு அமைஞ்சுது. ஆனா அந்தப் படங்கள் எதுவுமே சரியா போகாததால அவரால நிலையா காலூன்ற முடியலை. கடைசியா அவர் ஹிட் கொடுத்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்துலகூட தன்னோட வழக்கமான அலட்டல் நடிப்புலாம் இல்லாம நல்லாவே நடிச்சிருந்தாரு நகுல். ஆனாலும் ஏனோ அவருக்கு அதுக்கப்புறம் பெருசா சொல்லிக்கிற மாதிரி எந்த படமும் வரலை.

ஜித்தன் ரமேஷ்

வழக்கமா ஒரு குடும்பத்துலேர்ந்து அண்ணந்தான் முதல்ல ஹீரோவாங்க, அப்புறம் அவங்க தம்பி மெதுவா பின்னாடியே வருவாங்க. ஆனா இவருக்கு உல்டாவா நடந்துச்சு. இவரோட தம்பி ஜீவா ஹீரோவாகி ஒரு சக்ஸஸ்ஃபுல் ஆக்டரா மாறுனதுக்கு அப்புறம்தான் ரமேஷ் ‘ஜித்தன்’ படம் மூலமா ஹீரோவா அறிமுகமானாரு. ஹாலோமேன் படத்தோட பாதிப்புல ஹிந்தியில உருவாகி பெரிய ஹிட்டான ‘காயப்’ படத்தோட தமிழ் ரீமேக்தான் ஜித்தன். அதுல கொஞ்சம் தடுமாற்றமான நடிப்பைக் கொடுத்திருந்தாலும் அந்த படத்தோட ஹீரோ ஒரு இண்ட்ரோவர்ட்ங்கிறதால அதுக்குத் தேவையான நடிப்பைக் கரெக்டா இவர் கொடுத்ததாலயும் படமும் ஒரு டீசண்ட் ஹிட்டைக் கொடுத்ததாலயும் திரைத்துறையில இவருக்குன்னு ஒரு மார்க்கெட் கிரியேட் ஆச்சு. ஆனா அதை அழகா கொண்டு போக தெரியாம, ‘ஜெர்ரி, மது, நீ வேணும்ண்டா செல்லம், புலி வருதுன்னு கண்ட கண்ட படத்துலலாம் நடிக்க ஆரம்பிச்சு ஹீரோவான நாலே வருசத்துல படம் இல்லாம கேப் விடுற நிலைமைக்கு போனாரு ஜித்தன் ரமேஷ். அப்புறம் சிம்புவுக்கு தம்பியா ஒஸ்தி படத்துல நடிச்சது, டிரெண்டுன்னு நினைச்சு ஒரு அடல்ட் காமெடி படத்துல நடிச்சது, பிக் பாஸ் வீட்டுக்கு போய் பார்த்ததுன்னு அதுக்கப்புறம் அவரும் என்னென்னமோ பண்ணி பாத்துட்டாரு.. ம்கூம் எதுவும் வேலைக்கு ஆகலை.

கிருஷ்ணா

அஞ்சலி, இருவர்னு தொடர்ந்து மணிரத்னம் படங்கள்ல மட்டும் சைல்ட் ஆர்டிஸ்டா நடிச்சுக்கிட்டு வந்த கிருஷ்ணா டைரக்டர் விஷ்ணுவர்தனோட தம்பின்னு நம்ம எல்லோருக்குமேத் தெரியும். 2008-ல வெளியான அலிபாபா படம் மூலமா ஹீரோவா அறிமுகமான கிருஷ்ணாவுக்கு அவரோட தோற்றமும் டயலாக் மாடுலேசனும் ரொம்ப ப்ளஸ்ஸா இருந்துச்சு. யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் அமையாத ஒரு ஆண்டி-ஹீரோ லுக் அவருக்கு இயல்பிலேயே இருக்கவும் அதுக்கேத்த கதைகள் அவரைத் தேடி வர ஆரம்பிச்சுது. ஆனா அதுல சோகம் என்னன்னா அவர் ஹீரோவாகி இப்போ வரைக்கும் நடிச்சுக்கிட்டுதான் இருக்காரு. ஆனா அதுல ஒரு படம்கூட ஒரு மிகப்பெரிய ஹிட் ஆகலை. அதனாலயோ என்னவோ அவரால நெக்ஸ்ட் லெவல் போகவே முடியலை. அவரோட கரியர்ல ஹிட்டடிச்ச கழுகு, யாமிருக்க பயமேன் படங்கள்கூட ஆவ்ரேஜ் ஹிட்ஸ்தான்.

ரவிகிருஷ்ணா

ரெண்டு பெரிய ஹிட் கொடுத்துட்டு செல்வராகவன் அடுத்து தன்னோட தம்பி தனுஷை மைண்ட்ல வெச்சு எழுதுன 7ஜி ரெயின்போ காலனி படக் கதையில தன்னோட அப்பாவும் அப்போ ரொம்ப பிஸி ப்ரோடியூசராவும் இருந்த ஏ.எம்.ரத்னம் தயாரிப்புல, யுவன் மியூசிக், சோனியா அகர்வால் ஹீரோயின்னு யாருக்குமே கிடைக்காத செம்ம பொறாமையான ஒரு காம்பினேசன்ல ஹீரோவா லாஞ்ச் ஆனாரு ரவிகிருஷ்ணா. அந்தப் படத்துல கதிர்ங்கிற கேரக்டர்ல தமிழ்நாட்டு இளைஞர்களை Representate பண்ற மாதிரி ஒரு மாதிரி தயங்கி தயங்கி அவர் பேசி நடிச்சிருந்த விதமும் தோற்றமும் எல்லோருக்கும் பிடிக்கதான் செஞ்சுது. படமும் அதுக்கேத்த மாதிரி மிகப்பெரிய சென்சேசனல் ஹிட் ஆக, அடுத்தடுத்து விஜய்கூட சுக்ரன், ராதா மோகன் டைரக்சன்ல பொன்னியின் செல்வன், தன்னோட அண்ணன் ஜோதி கிருஷ்ணா டைரக்சன்ல கேடி –னு அடுத்தடுத்து படங்கள் பண்ண ஆரம்பிச்சாரு ரவி கிருஷ்ணா. அப்புறம்தான் தெரிஞ்சுது 7ஜி படத்துல அவர் நடிச்சது நடிப்பு இல்ல, அவருக்கு அது மட்டும்தான் தெரியும்னு. இடையில மிஷ்கின் டைரக்சன்ல நந்தலாலா படத்துல முதல்ல ரவிகிருஷ்ணாதான் நடிக்கிறதா இருந்துச்சு. சரி சூர்யாவுக்கு ஒரு நந்தா மாதிரி இந்தப் படம் இருக்குன்னு எல்லோரும் நினைச்சுக்கிட்டிருந்தப்போ அதுவும் ட்ராப் ஆகி அப்புறம் மிஷ்கினே அதுல நடிச்சாரு. தொடர்ந்து ரவிகிருஷ்ணாவுக்கு எந்தப் படமும் சரியா அமையாம இருந்தப்ப 2011-ல தியாகராஜன் குமாரராஜா டைரக்டரா அறிமுகமான ‘ஆரண்யம் காண்டம்’ படத்துல ‘சப்பைங்கிற ரோல்ல செம்மயா க்ரூம் ஆகி நல்லாவே நடிச்சிருந்தாரு இவரு. அந்தப் படமும் அந்த கேரக்டரும் இன்னைக்கும் மக்கள் மனசுல அதே ஃப்ரெஷ்னஸ்ஸோட பதிஞ்சிருந்தாலும் ரவிகிருஷ்ணாவுக்கு மட்டும் ஏனோ அதுக்கப்புறமும்கூட எந்தப் படமும் அமையல.

சரி.. நீங்க சொல்லுங்க இதுல யாரோட சறுக்கலை உங்களால தாங்கிக்கவே முடியல.. இவங்கள்ல யாரோட கம்பேக்குக்காக நீங்க வெறித்தனமா வெயிட் பண்றீங்கன்னும் கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top