எஸ்.ஜே.சூர்யா

`நடிப்பு அரக்கன்’ எஸ்.ஜே.சூர்யா – தமிழ் சினிமாவுக்கு ஏன் முக்கியம்?

‘நீயெல்லாம் நடிகனாகப்போற’, ‘ஆளாளுக்கு கிளம்பி வந்துடுறாங்க’, ‘நடிச்சு நீ என்ன பண்ண போற’ என ஏராளமான வசைவுகளுடன், நடிக்கிறதுக்கு என்ன செய்யலாம் என யோசித்து, இயக்குநர் பாதையை தேர்வு செய்து, அதில் வெற்றிக் கொடி நாட்டி, அதன்பின்னர் தானே தயாரித்து, இயக்கி ஹீரோவாகி, இன்று வெர்சடைல் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார், எஸ்.ஜே.சூர்யா. அவர் பாணியிலேயே சொல்ல வேண்டுமானால், “வந்தான், நடிச்சான், அவார்டு வாங்கினான்.. ரிப்பீட்டு” என நடிக்கும் படங்களுக்கு விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா

இன்னைக்கு ஒரு படம் ஆரம்பிக்கணும் அப்படின்னா முதல்ல எஸ்.ஜே சூர்யா கால்ஷீட் வாங்கிட்டு வாங்கனு சொல்ற ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் ரொம்ப அதிகம். அந்த அளவுக்கு இன்னைக்கு நடிப்பு அரக்கனா உயர்ந்து நிற்கிறார். இது இன்று நேற்று நடந்ததல்ல, சினிமாவுக்காக சுமார் 30 வருடங்கள் உழைத்திருக்கிறார். இப்போ வரப்போற மார்க் ஆண்டனிக்கு மிகப்பெரிய பில்லரா எஸ்.ஜே சூர்யா இருப்பார் என அடித்துச் சொல்லலாம். இதற்கான உழைப்பு மார்க் ஆண்டனி டிரெய்லரிலேயே தெரிகிறது. மார்க் ஆண்டனிக்கு எஸ்.ஜே சூர்யா ஏன் முக்கியம்?, தமிழ் சினிமாவுக்கும் அவர் ஏன் முக்கியம்னுதான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.

நியூ படத்தை அஜித்தை வைத்து இயக்கத் திட்டமிட்டார். கடைசி நேரத்தில் அஜித் அதிலிருந்து விலக, தானே நடிப்பதென முடிவு செய்தார், எஸ்.ஜே சூர்யா. இதுவரை தான் சினிமாவில் சம்பாதித்த அனைத்து பணத்தையும் முதலீடாக போட்டு நியூ படத்தை தயாரித்திருந்தார். குஷி ஹிந்தி ரீமேக்கில் ஏ.ஆர் இசையமைத்திருந்தார். அதனால், நியூ படத்துக்கும் அவரே இசையமைத்தார். படம் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அன்பே ஆருயிரே படமும் வெளியாகி நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. இதையடுத்து மற்ற இயக்குநர்களின் படங்களில் நாயகனாக நடிப்பதில் கவனம் செலுத்தினார். ‘கள்வனின் காதலி’, ‘திருமகன்’, ‘வியாபாரி’, ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ என அவர் அப்படி நடித்த எந்தப் படமும் வெற்றிபெறவில்லை. 2010-ல் பவன் கல்யாணை நாயகனாக வைத்து சூர்யா இயக்கிய தெலுங்கு திரைப்படமான ‘புலி’ படுதோல்வியைச் சந்தித்தது. அதோடு சிலகாலம் சினிமாவிலிருந்தே விலகி இருக்க நேரிட்டது.

எஸ்.ஜே.சூர்யா

தான் கமிட்டாகும் கதாபாத்திரங்களின் தன்மை சற்றும் குறையாமலும், வித்தியாசம் இருக்கும்படியும் பார்த்துக் கொள்வார், எஸ்.ஜே சூர்யா. எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கிறார் என்றால் படம் ஹிட்டுதான் என்ற மோடில்தான் இன்ற கோலிவுட்டே இருக்கிறது. ஆனால், ஒரு காலத்தில் தான் டைரக்ட் செய்த படங்களைத் தவிர, மற்ற இயக்குநர்கள் இயக்கும் படங்களில் நடிக்க ஆரம்பித்த நேரம் அது. படத்தில் இவரது கேரெக்டர் தேர்வு கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்தாலும், ஏதோ ஒரு சறுக்கல் இருந்து கொண்டே இருந்தது. அதனாலயே 3 வருடங்கள் வரிசைகட்டிய படவாய்ப்புகளை ஏற்காமல் கோலிவுட்டை கவனிக்க ஆரம்பித்தார்.

அடுத்ததாக நண்பன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் வந்தாலும் கவனிக்க வைக்கும் பெர்ஃபார்மராக மக்களை கவர்ந்தார். இதுதான் அவருடைய பாதையை மாற்றிய கோடு என்று சொல்லலாம். இங்கிருந்துதான் பெர்பார்மராக பல படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். தனக்கான அந்த கெட்டியான வாய்ப்பு கிடைக்கும் வரைக்கும் காத்திருந்தார். இனி ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதை கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும் என காத்திருந்தார். கோலிவுட்டின் சிறந்த கதைச் சொல்லிக்கு சொல்லியா கொடுக்க வேண்டும். இறைவி என்ற கதையுடன் கார்த்திக் சுப்பராஜ் வந்தார். அந்த கதாபாத்திரம் பிடித்துப்போக, அதில் நடித்து கோலிவுட்டையே வியக்க வைத்தார். மக்கள் கொண்டாடும் பெர்பார்மராக மாறினார். இறைவி படம் தோல்வி அடைந்தாலும், எஸ்.ஜே சூர்யா மட்டும் ஆறுதலளித்தார். க்ளைமாக்ஸ் சிங்கிள்டேக் காட்சியே அதற்கு சாட்சி. அதுவரைக்கும் ஓவர் ஆக்டிங்காக பார்க்கப்பட்ட எஸ்.ஜே சூர்யா நல்ல நடிகனாக மாறினார். அதைவிட தன் இயல்பான நடிப்புக்கு ரசிகர்களை இழுத்துச் சென்றார்.

எஸ்.ஜே.சூர்யா

இதற்குப் பின்னர் இவரது கெரியரில் ஸ்பைடர் சுடலை, மெர்சல் டேனியல், மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை என வெரைட்டி காட்டியவர், மாநாட்டில் தனது கொடியை நாட்டினார். எஸ்.ஜே சூர்யாவின் என்ட்ரியே இன்னொரு ஹீரோவுக்கான எண்ட்ரி மாதிரித்தான் இருக்கும். இவர் நடிப்புக்கு வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு என அந்த 3 நிமிட டேபிள் காட்சியே உதாரணம். மாநாடு வெற்றிக்கு எஸ்.ஜே சூர்யாவும் ஒரு முக்கியமான காரணம். அதேபோல டான் படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு ஹீரோ என்றால், இன்னொரு ஹீரோ எஸ்.ஜே சூர்யாதான். ஸ்ரிக்டான கல்லூரி டீன் டூ ப்ரெண்ட்லியான பிரின்சிபால் என இருவேறு பரிமாணங்களை ஒரே படத்தில் வெரைட்டியாக கொடுத்திருப்பார். தான் நடித்து வந்த அத்தனை படங்களிலும் இந்த கேரெக்டரை இவர் பண்ணியிருக்கலாம் என்று சொல்ல முடியும். ஆனால், எஸ்.ஜே சூர்யா கேரெக்டரின் நடிப்பைப் பார்த்த பின்னர், யாரையும் அந்த கதாபாத்திரத்துக்கு நினைத்துப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருப்பார், எஸ்.ஜே.

Also Read – அட்லீ…இந்த 6 விஷயங்கள்ல கில்லி – ஏன் தெரியுமா?

அப்படித்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மார்க் ஆண்டனி என படங்கள் வரிசைகட்டி நிற்கிறது. இப்போது மார்க் ஆண்டனி வெளியாகி வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா புகுந்து விளையாடியிருக்கிறார். `ஏது லேடீஸ் மேட்டரா?’ என இழுத்து பேசும்போதே ஜாலியான மனநிலைக்கு கூட்டிப்போகிறார், எஸ்.ஜே.சூர்யா. நடிகர் விஷாலே இயக்குநர் ஆதிக்கிடம் ‘இந்த படம் பண்ணனும்னா எஸ்.ஜே.சூர்யா கால்ஷீட்டை வாங்கணும்’ என சொல்கிறார் என்றால் அந்த கேரக்டர் எவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கும். அவ்ளோ வெயிட்டை தன் தலையில் தூக்கிவைத்தாலும் அதை அசால்ட்டாக தாங்குகிறார், எஸ்.ஜே. என்ன வெரைட்டி கொடுத்தாலும் நான் நடிப்பேன்டா என காலரை தட்டிவிட்டு கெத்தாக தனக்கென சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார். இங்குதான் ஒரு விஷயத்தை தவற விடுறோம். தமிழில் நடிகர் எஸ்.ஜே சூர்யா அளவுக்கு இன்னொரு கேரக்டர் ஆர்டிஸ்ட்டை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மார்க் ஆண்டனிக்கும் சரி, தமிழ் சினிமாவுக்கும் சரி எஸ்.ஜே சூர்யா ரொம்பவே முக்கியமானவர்.

எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா கரியரில் ஆச்சர்யமான விஷயம் தமிழில் இதுவரை 5 படங்களை இயக்கியிருக்கிறார். அதில் மூன்றுமுறை அவரே நடித்து இயக்கி இருக்கிறார். வெளி நடிகர்களில் அஜித்குமார் மற்றும் விஜய் ஆகியோரை மட்டும்தான் இயக்கியிருக்கிறார். இந்த இருவரைத் தவிர வேறு யாரையும் வைத்து இயக்கியதில்லை. எஸ்.ஜே சூர்யாவின் இசை படத்தின் இசை வெளியீட்டுவிழா நடந்தது. அப்போது நடிகர் விஜய் பேசும்போது, “விக்ரமன் சார் ஒருமுறை என்கிட்ட எப்படி விஜய் குஷி படம் ஒத்துக்கிட்டீங்க. அதுல கதைனு என்ன இருக்குனு கேட்டார். அதுக்கு நான் சொன்னேன், எஸ்.ஜே சூர்யானு ஒருத்தர் இருக்காரு சார், நீங்க அவர் கதை சொல்லும்போது கேட்கணுமே. ஒவ்வொரு சீனா சொல்றப்பவே நான் மயங்கிட்டேன். அப்படித்தான் அந்த படம் பண்ணேன்னு சொன்னேன். அந்த அளவுக்கு யுனிக்கான டைரக்டர்” என்றார்.

எஸ்.ஜே சூர்யா-வோட மாநாடு எனக்கு ரொம்ப பிடிக்கும், உங்களுக்கு என்ன படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top