சம்யுக்தா

கேரளாவில் செம கில்லி… யார் இந்த சம்யுக்தா?!

மலையாள சினிமாவைப் பொறுத்தவையில், நடிகர்கள் தங்கள் பெயருடன் சாதிப் பெயர்களை வைத்துக்கொள்வது மிகவும் இயல்பான ஒன்றுதான். மஞ்சு வாரியார், நவ்யா நாயர், நித்யா மேனன் எல்லாம் அப்படித்தான். அதில் சிலர் விதிவிலக்கு. நமக்குத் தெரிந்து முதலில் பெயரில் சாதியைத் துறந்தவர் பார்வதி. இப்போது சம்யுக்தா. ஆக்சுவல்லி, ‘வாத்தி’ படம் தமிழில் சம்யுக்தாவுக்கு செகண்ட் இன்னிங்ஸ். அவருடைய இதுவரையிலான ஃபிலிமோகிராஃபி ஷார்ட்டானதுதான் என்றாலும், ரொம்பவே வெயிட்டானது. போல்ட் அண்ட் ப்யூட்டிஃபுல் ஆனது. அது எப்படி என்பதையும், இன்ஸ்பையரிங்கான சம்யுக்தாவின் ஜர்னி பத்தியும் இந்த வீடியோ ஸ்டோரில பார்ப்போம்.

சம்யுக்தா
சம்யுக்தா

பெரும்பாலான ஃபீமேல் ஆக்டர்கள் போலவே சம்யுக்தாவின் ஜர்னியும் மாடலிங் டூ சினிமாதான். ஆனா, இங்கே மாடலிங்ன்றது வெறும் போட்டோ ஷூட் அண்ட் போர்ட் ஃபோலியோ மட்டும்தான். இந்த ஜர்னி தொடங்குறதுக்கு அடித்தளமான அமைந்தது, இன்ட்ரஸ்டிங்கான சம்பவம்.

அது என்னன்னா, கல்லூரி வயதில் ஒரு குடும்ப ஃபங்ஷனுக்கு முதல் முதலா புடவை கட்டிட்டுப் போயிருக்காங்க. அந்த டிரஸ் உடன் எடுத்த டிபியை ஃபேஸ்புக்ல வெச்சிருக்காங்க. அது நடந்த சில நாட்களில், தான் ரெகுலராக செல்லும் ப்யூட்டி பார்லரை நடத்தும் ஆன்ட்டியிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்திருக்கு. அவங்க பாலக்காடுல ஏற்பாடு பண்ணின ஒரு பியூட்டி பார்லர் செமினாருக்கு மொத்தம் மூணு செலிபிரிட்டி வரணும். அதுல ரெண்டு பேருதான் வந்திருக்காங்க. ஒருத்தர் ஆப்சன்ட் அந்த ஒருத்தருக்கு பதிலா சம்யுக்தாவை அழைச்சுப் போயிருக்காங்க. அங்கே அவருங்கு புரொஃபஷனல் மேக்கப் போடவும், அழுகு அள்ளியிருக்கு. அங்க எடுத்த இமேஜைஸையும் ஃபேஸ்புக்ல அப்டேட் பண்ணியிருக்காங்க. அதை கவனிச்ச ‘வனிதா’ மேகஸின் போட்டோகிராஃபர், ஓணத்துக்கு ஸ்பெஷல் போட்டோ ஷூட் எடுத்து பப்ளிஷ் பண்ண விரும்புறோம்னு கேட்டிருக்கார்.

கேரளாவில் மிகவும் பிரபலமான பெண்கள் மேகஸின் தான் வனிதா. அதுல அட்டைப்படம் வந்தாலே செம்ம ரெஸ்பான்ஸ் இருக்கும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பாப்புலரான – தான் சிறு வயதில் இருந்து பார்த்து வரும் வனிதா இதழில் தன் படம் வரப்போகிறது என்றால் அந்த வாய்ப்பை விட்டுவிடுவாரா என்ன? – அங்கிருந்துதான் மாடலிங் – சினிமா ஜர்னி எல்லாம் ஆரம்பித்தது.

மாடலிங்னா ஜஸ்ட் போட்டோஸ் மட்டும் எடுத்துட்டு வைச்சிருந்துக்காங்க. வனிதால வந்த போட்டோஸ், மற்ற இடங்களில் பரவிய போட்டோஸை பார்த்துட்டுதான் இவருக்கு சினிமால ஆஃபர் வந்திருக்கு. அப்படி வரும்போது, ‘உங்க போர்ட் ஃபோலியோ அனுப்புங்க’ன்னு பலரும் சொல்லியிருக்காங்க. அப்போதான் அவங்க கூகுள் பண்ணி போர்ட் ஃபோலியோன்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டு அதை ரெடி பண்ணாங்க. அப்புறம்தான் சின்னச் சின்ன வாய்ப்புகள் சினிமால வர ஆரம்பிச்சுது.

உண்மையைச் சொல்லணும்னா, மலையாள திரைத்துறையில் வலுவான எந்தப் பின்புலமும் இல்லாமலேயே ஸ்டெப் பை ஸ்டெப் எடுத்து வெச்சு, இப்போ இந்த டாப் பொசிஷனுக்கு வந்திருக்கார் சம்யுக்தா.

2016-ல் வெளிவந்த ‘பாப்கார்ன்’ எனும் ரொம்ப சுமாரான படம்தான் சம்யுக்தாவின் முதல் படம். அதில் சின்ன ரோல்தான் என்றாலும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் சூப்பரா இருந்துச்சு. ஆனா, சுத்தமா நடிப்பே வரலைன்னே சொல்லலாம். சம்யுக்தாவுக்கே தனது பெர்ஃபாரமன்ஸ் பிடிக்கலை. சரி, காலேஜுக்குப் போலாம்னு பார்த்தா, எஜுகேஷன் இயர் வர்றதுக்கு பல மாதங்கள் இருந்துச்சு.

சம்யுக்தா
சம்யுக்தா

அந்த கேப்புலதான் ரெண்டு தமிழ்ப் பட வாய்ப்புகள் அவருக்கு வருது. ஒண்ணு, கிருஷ்ணா நடிச்ச ‘களறி’ன்ற படம், இன்னொன்னு ‘ஜூலை காற்றில்’ன்ற ரொமான்ட்டிக் படம். களறி அப்பவே ரிலீஸ் ஆகி காணாம போச்சு. 2017-லேயே ஒர்க் ஸ்டார்ட் பண்ண ‘ஜூலை காற்றில்’ 2019-ல்தான் ரிலீஸாச்சு. அதுவும் இங்கே சுத்தமா பேசப்படலை.

இந்த மூன்று படங்கள் மூலமா சம்யுக்தா கத்துக்கிட்ட பாடங்கள்: சான்ஸ் கிடைக்குதேன்றதுக்காக நடிக்க ஒப்புக்கொள்ளக் கூடாது; நம்மால நல்லா நடிக்க முடியும்ன்ற தன்னம்பிக்க இருந்தா மட்டும் களத்துல இறங்கணும், கதையோ அல்லது தனது கதாபாத்திரமோ உருப்படியா இருந்தா மட்டும்தான் ஒரு படத்துல நடிக்கணும்ன்றதை மைண்டல ஏத்திக்கிடாங்க. அதைத்தான் இப்போ வரைக்கும் ஃபாலோ பண்றாங்க.

தமிழ்ல சக்சஸ் ஆக முடியாத நேரத்துலதான் ‘லில்லி’ (Lilli) பட வாய்ப்பு வந்துச்சு. இயக்குநர் Prasobh Vijayan-க்கு இவர் மேல நம்பிக்கை இருந்துச்சு. தன்னோட எக்ஸ்பிரிமென்ட் படத்துக்கு இவர்தான் சரியான சாய்ஸ்னு நம்பினார். அது ஒரு க்ரைம் த்ரில்லர் படம். ப்ரொட்டாகனிஸ்டே சம்யுக்தா தான். படம் முழுக்க போராடுற ஒரு பிரெக்னட் வுமனா பட்டைய கிளப்பியிருப்பாங்க. திரையில் வயலன்ஸை ரசிக்கிறவங்களுக்கு செம்ம தீனியா அமைஞ்சாலும் இந்தப் படம் சரியா போகலை. ஆனால், ஒரு பெர்ஃபார்மரா சம்யுக்தாவுக்கு ரொம்ப நல்லை பேர இந்தப் படம் சம்பாதிச்சு கொடுத்துச்சு.

அந்தக் காலக்கட்டத்துல சம்யுக்தா ரொம்பவே நொடிஞ்சி போயிருந்தாங்க. படிப்பை பாதியிலேயே முடிச்சிட்டு எந்த சப்போர்ட்டும் இல்லாம சினிமாவை கரியரா ச்சூஸ் பண்ணவங்களுக்கு பயங்கர பண நெருக்கடியும் இருந்துச்சு. சர்வைவலுக்காக ரெண்டு மூணு தடவை பாட்டியோட நகைகளை அடமானம் வைக்க வேண்டிய சூழல் வந்துச்சு. கையில சுத்தமா காசு இல்லாம போனாலும் சினிமாவுல சாதிக்கணும்ன்ற வெறி மட்டுமே அப்படியே இருந்துச்சு. கடுமையான பயிற்சிகள் எடுத்துகிட்டாங்க.

அந்த ஜர்னியும் அதுக்கு கிடைச்ச ரிசல்ட்டும் அற்புதமானதுன்னே சொல்லலாம். யெஸ்… போட்டோக்கு போஸ் கொடுக்கும்போது பற்களைக் காட்டி புன்னகைப்பதற்கு தயங்கின சம்யுக்தா, பின்னாளில் ஸ்மைலிங் குயின்னு சொல்ற அளவுக்கு மாற்றங்களை வசப்படுத்திக்கிட்டாங்க.

2018-ல் மலையாளத்துல வெளிவந்த ‘தீவண்டி’ன்ற படம் ‘யார்றா இந்தப் பொண்ணு’ன்னு எல்லாரையும் கவனிக்க வைக்கிற அளவுக்கு ப்ரேக் கிடைச்சுது. டொவினோ தாமஸ் ஹீரோவா நடிச்ச அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட். அந்தப் படம் புகைப்பழக்கத்தோட எக்ஸ்ட்ரீமை பேஸ் பண்ணின ஒரு சட்டையர் மூவி. அதுல ரொமான்ஸும் ஹைலைட். அதுல வந்த ரொமான்டிக் காட்சிகள் மூலமாவே அதிகம் கவனம் ஈர்த்தாங்க சம்யுக்தா. அதேநேரத்துல, தன்னால ஸ்டார்களுக்கு ஈடுகொடுத்து நடிக்க முடியும்ன்ற நம்பிக்கையும் அவங்களுக்குக் கிடைச்சுது. எந்தப் பிசிரும் இல்லாம கச்சிதமா நடிச்சிருப்பாங்க. ‘தீவண்டி’ படத்துல வர்ற ‘ஜீவாம்ஷமாய்’ பாடல் யூடியூப்ல கிட்டத்தட்ட 8 கோடி வியூஸ். ரசிகர்களின் பார்வையும் சம்யுக்தா மேல விழுந்துச்சு.

அப்புறம், துல்கர் சல்மான் நடிச்ச Oru Yamandan Premakadha படத்துல சின்ன ரோல் பண்ணாங்க. இவரோட ஒர்த் என்னன்னு டொவினோவுக்கு ரொம்ப நல்லாவே தெரிஞ்சுது. அவர் படங்களில் சம்யுக்தாவுக்கு நல்ல கேரக்டர்ஸ் கிடைக்க ஆரம்பிச்சுது. பார்வதி – டொவினோ நடிச்ச ‘உயரே’ படத்துல ஒரு கேமியோ ரோலும் பண்ணாங்க. அதே 2019-ல்தான் சம்யுக்தாவுக்கு இன்னொரு முக்கியமான படமா அமைஞ்சுது ‘கல்கி’. அந்த ஆக்‌ஷன் க்ரைம் டிராமா படத்துல டாக்டர் சங்கீதான்ற வெயிட்டா வில்லத்தனமான கேரக்டர்ல மிரட்டினாங்க. ‘தீவண்டி’ல வந்த தேவியா இது?-ன்னு ரசிகர்கள் மிரண்டாங்க.

அதுக்கு அப்புறம் 2021, 2022 ஆகிய ரெண்டு வருஷமும் சம்யுக்தாவோட கரியர் கிராஃபை அடுத்த லெவலுக்கு எத்துட்டுப் போச்சு. ஒரு பக்கம் தன்னோட நடிப்பாற்றலுக்குத் தீனி போடுற மாதிரியான சின்ன பட்ஜெட் படங்கள், இன்னொரு பக்கம் வெகுஜன மக்களையும், தன்னோட மாநிலத்தைத் தாண்டிய பிரசன்ஸையும் கொடுக்கக் கூடிய படங்கள்னு ஒரே நேரத்துல ரெண்டு விதமான பாதையை பேலன்ஸ் பண்ண ஆரம்பிச்சாங்க.

ஜெயசூர்யா ஆல்கஹாலிக்கா நடிச்ச ‘வெள்ளம்’ (Vellam) படத்துல ரொம்ப ரொம்ப முக்கியமான கேரக்டர் பண்ணாங்க. குடிநோயாளியான ஜெயசூர்யாவை மீட்கும் மனைவி கதாபாத்திரம். அவங்களோட திறமைக்கு செம்ம தீனியா அமைஞ்சுது. அதேபோல, ‘ஆணும் பெண்ணும்’ என்கிற ஆந்தாலாஜி படத்துல இவர் ஒரு கதைக்கு ப்ரொட்டாகனிஸ்ட். சாவித்ரின்ற கேரக்டர்ல அவர் நடிச்ச செக்மண்ட் ரொம்பவே பேசப்பட்டது.

இந்த ரெண்டு படங்கள் தவிர, இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிச்ச எரிடா (Erida) என்கிற க்ரைம் ட்ராமாவும், வூல்ஃப் (Wolf) என்ற மிஸ்ட்ரி த்ரில்லரும் ஓடிடில கவனம் ஈர்த்துச்சு. குறிப்பாக, எரிடாவை பத்தி சொல்லியே ஆகணும். இது மலையாளம் – தமிழ்ல வந்த பைலிங்குவல் படம். வி.கே.பிரகாஷ் எனும் மலையாளத்தின் முக்கியமான டைரக்டர் இயக்கியது. இதுல மூணு கேரக்டரை வெச்சு மட்டும் படம் முழுக்க நகரும். சம்யுக்தா, நாசர், ஆடுகளம் கிஷோர். படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இல்லாட்டியும், இந்த மூணு பேரும் போட்டி போட்டுட்டு பெர்ஃபார்மன்ஸ்ல பிரிச்சி மேஞ்சிருப்பாங்க. நடிப்பைத் தாண்டி, இந்தப் படத்துல சம்யுக்தா ஒரு ஸ்டன்னிங் ப்யூட்டியா அவரோட ரசிகர்களுக்கு தரிசனம் காட்டியிருப்பாங்க.

அப்புறம், கேரளாவைத் தாண்டி வெளிமாநிலத்துல சம்யுக்தா சுவைத்த முதல் வெற்றின்னா, அது ஆந்திராவில் ஹிட்டான Bheemla Nayak படம்தான். யெஸ், அய்யப்பனும் கோஷியும் படத்தோட ரீமேக். ராணாவோட மனைவி கேரக்டர். அதுலயும் ஆக்டிங்ல நல்லா ஸ்கோர் பண்ணி அக்கடே தேசத்து ரசிகர்களை ஈர்த்திருப்பாங்க. குறிப்பாக, கடைசி சண்டைக் காட்சிக்கு அப்புறம் வர்ற அந்த எமோஷனல் சீன்ல கலங்கடிச்சிருப்பாங்க. தெலுங்குல இப்போ டிமாண்ட் உள்ள ஆக்டர்களில் ஒருத்தரா சம்யுக்தா எமர்ஜ் ஆகியிருக்காங்க. அதுக்கு 2022-ல் வெளிவந்த Bimbisara படத்தோட சக்சஸும் இன்னொரு காரணம். இடையில், Gaalipata 2 படம் மூலமாக கன்னடத்துல தன்னோட கால் தடத்தைப் பதிச்சிருக்காங்க.

சம்யுக்தா
சம்யுக்தா

அதோட, மலையாளத்தில் ஷாஜி கைலாஷ் இயக்கி பிருத்விராஜ் நடிச்ச சூப்பர் ஹிட் கமர்ஷியல் படமான ‘கடுவா’விலும் இவங்கதான் ஹீரோயின்.

இந்தப் பேக்ரவுண்டலதான் தனுஷின் ‘வாத்தி’ படம் மூலமாக தமிழ்ல ரொம்பவே ஸ்ட்ராங்கான செகண்ட் இன்னிங்ஸ் ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க. படம் ரீலீஸாவதற்கு முன்னாடியே ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்திருக்காங்க.

தமிழ்ல மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவுலயே ஒரு ரவுண்ட் வர்றதுக்கான அத்தனை குவாலிட்டீஸும் சம்யுக்தா கிட்ட இருக்குன்றதைதான் அவரோட இன்ஸ்பையரிங்கான திரைப் பயணமும், அவரோட ஃபிலிமோகிராஃபியும் காட்டுது.

Also Read – மெலினா to தி ரீடர்… எதையெல்லாம் நினைவூட்டுகிறார் ‘கிறிஸ்டி’ மாளவிகா?

வாத்தி படம் கூட தமிழ்ல ஒரு டாப் ஹீரோவுக்கு ஜோடின்றதுக்காக அவர் ஒத்துக்கலை. அந்தப் படத்தோட கதையும், அதுல அவரோட அழுத்தமான கேரக்டரும்தான் வாத்திக்கு ஓகே சொல்ல காரணம்னு அவங்களே சொல்லியிருக்காங்க. இந்தத் தெளிவுதான் அவங்களைத் தன்னைத்தானே செதுக்கிக்க சப்போர்ட் பண்ணுதுன்னே சொல்லலாம்.

இதுவரைக்குமான அவங்களோட ஃபிலிமோகிராஃபில ஹீரோயின், வில்லி,  நல்ல சப்போர்ட்ட்டி கேரக்டர், சின்ன கேமியோ கேரக்டர், கிராமத்து கேரக்டர், மார்டன் கேரக்டர்… இப்படி எதுவா இருந்தாலும் எதோ ஒரு விதத்துல ஒர்த்தா இருக்கிற படங்களில் நடித்திருக்கிறார். இந்த அப்ரோச் தான் இனியும் தொடரும்னு சொல்லியிருக்கார். தன்னை ஒரு ஹீரோயின்னு சொல்லிக்கிறதை விட, ஆக்டர்னு சொல்றதைதான் விரும்புகிறார்.

சினிமாவில் ‘ஸ்டீரியோ டைப்’பை ப்ரேக் பண்றதையே தன்னோட பாலிஸியா வெச்சிருக்குற சம்யுக்தாவை பற்றிய உங்களோட பார்வையை கமெண்ட்ஸ்ல பதிவு பண்ணுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top