ஃப்யூல்

Fuel Usage: மாதம் ரூ.2,000 கார் பெட்ரோல் பில்லில் மிச்சம் பிடிக்கலாம்… ஈஸியான 10 வழிகள்!

பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தில் நிற்கிறது. உலகம் மெல்ல மெல்ல எலெக்ட்ரானிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், ஏற்கனவே பெட்ரோல், டீசல் கார்கள் வைத்திருப்பவர்கள் சில குட் பிராக்டீஸஸ் மூலம் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்.

உங்கள் ஃப்யூல் யூஸேஜை மிச்சம் பிடிக்க 10 ஈஸி டிப்ஸ்

டயரின் காற்றழுத்தம்

எப்போதும் உங்கள் கார் டயரின் காற்றழுத்தம் பரிந்துரைக்கப்பட்ட அளவில் இருப்பதை உறுதி செய்யுங்கள். சரியான அளவில் காற்று இருக்கும்போது டயரின் உராய்வழுத்தம் குறையும். இதன்மூலம் உங்கள் ஃப்யூல் யூஸேஜைக் குறைக்க முடியும். அதேநேரம், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட உங்கள் கார் டயரின் காற்றழுத்தம் 10 psi அளவுக்குக் குறைவாக இருந்தால், அது உங்கள் மைலேஜை 10% அளவுக்குக் குறைக்குமாம்.

ஸ்பீடோ மீட்டர்
ஸ்பீடோ மீட்டர்

தேவையில்லாத லக்கேஜ்களுக்கு நோ!

காரில் அதிகப்படியாக எவ்வளவு லக்கேஜ்கள் இருக்கிறதோ.. அந்த அளவுக்கு உங்களுக்குக் கூடுதலாக எரிபொருள் செலவாகும். அதனால், ஒரு பயணத்துக்குத் திட்டமிடும்போது லக்கேஜ் விஷயத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். அதேபோல், நீண்ட தூர பயணங்களின்போது காரின் மேல் லக்கேஜ்களைக் கட்டிக் கொண்டு செல்வதைத் தவிர்ப்பது நலம். காரில் ஏற்றப்படும் ஒவ்வொரு 50 கிலோ எக்ஸ்ட்ரா லக்கேஜூம் எரிபொருள் செலவை 2% அளவுக்குக் கூட்டும்.

ஏசி… மாத்தி யோசி..!

ஏ.சி பயன்பாடு எரிபொருள் செலவை அதிகப்படுத்தும் என்பது உண்மைதான் என்றாலும், நெடுஞ்சாலைகளில் மணிக்கு 80 கி.மீ வேகத்துக்கு மேல் பயணிக்கும்போது ஏ.சியை ஆன் செய்தபடி பயணிப்பதுதான் சிறந்தது. ஏன்னு கேக்குறீங்களா… காரின் கண்ணாடிகள் திறந்த நிலையில் வேகமாகப் பயணிக்கும்போது வேகமாக வீசும் காற்றும் காரின் வேகத்தைக் குறைக்கும். இதை சமாளிக்க காரின் என்ஜின் கூடுதல் சக்தியைப் பயன்படுத்த வேண்டி வரும்.

Also Read:

இயர் எண்டில் கார் வாங்குவது சிறந்ததா… பிளஸ், மைனஸ் என்னென்ன?

வேகமும் வேண்டாம் ஸ்லோவும் வேண்டாம்!

காரில் பயணிக்கையில் அதிவேகமாகச் செல்வதையும், ரொம்பவே மெதுவாகச் செல்வதையும் தவிர்ப்பது நல்லது. வேகமாகப் பயணிக்கும்போது காற்றின் வேகத்தை எதிர்த்துச் செல்ல கார் என்ஜின் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும். உதாரணமாக, மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்லும்போது கூடுதலாக 15% எரிபொருளும், 110 கி.மீ வேகத்தில் கூடுதலாக 25% எரிபொருளும் செலவாகும். அதேநேரம், மணிக்கு 50 கி.மீ-க்கும் குறைவான வேகத்தில் பயணிக்கையிலும் எரிபொருள் செலவு அதிகமாகும். அதனால், 50 – 90 கி.மீ வேகத்தில் நிதானமாகப் பயணிப்பது எரிபொருளை மிச்சப்படுத்தும்.

ஸ்டெடி முக்கியம் பாஸ்!

சாலைகளில் காரின் வேகத்தை அதிகரிக்கும்போது நிதானமாகக் கூட்டுங்கள். திடீர் ஆக்ஸிலேஷனைத் தவிர்ப்பது உங்கள் பாக்கெட்டுக்கு நல்லது. நீங்கள் திடீரென ஆக்ஸிலேட்டரை அதிகமாக அழுத்தும்போது, உங்கள் என்ஜினின் ஆர்பிஎம் வேகமும் கூடும். இதனால், எரிபொருள் செலவும் கூடும் என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டீயரிங்
ஸ்டீயரிங்

சடன் பிரேக் வேண்டாமே!

அடிக்கடி பிரேக்குகளைப் பயன்படுத்தினால், மீண்டும் வேகமெடுக்க ஆக்ஸிலேட்டரை மிதிக்க வேண்டி வரும். எரிபொருளும் கூடுதலாகச் செலவாகும். ஒரு வாகனத்தை ரொம்ப குளோஸாக நீங்க ஃபாலோ செய்து கொண்டிருக்கையில், இது அடிக்கடி நிகழும். டெயில்கேட்டிங் (Tail gating) என்பது ஆபத்தானது மட்டுமல்ல; தவிர்க்க வேண்டியதும் கூட.

குரூஸ் கண்ட்ரோல்

நீங்கள் ஆட்டோமெட்டிக் வாகனத்தை ஓட்டினால், நெடுஞ்சாலைகளில் உங்களின் வேகம் சீராக இருக்க குரூஸ் கண்ட்ரோல் வசதியைப் பயன்படுத்தி ஓட்டுங்கள். அதேநேரம், மேனுவல் வாகனம் என்றால் வேகத்தை சீராக வைத்துக் கொள்வதோடு, எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் டாப் கியரில் ஓட்டுங்கள் மக்களே… இது எரிபொருள் சிக்கனத்துக்கு ரொம்ப முக்கியம்.

கணிப்பு

சாலைகளில் பயணிக்கும்போது, உங்கள் அடுத்த மூவ் என்ன என்பதைக் கணித்து ஓட்டுங்கள். இது சடன் பிரேக் அடிக்கும் நிகழ்வுகளைத் தவிர்க்க உதவும். உதாரணமாக, ரெட் சிக்னல் விழுந்த நிலையில் ஆக்ஸிலேட்டரில் இருந்து காலை எடுத்துவிட்டு, மெதுவாக அணுகி பிரேக் பிடித்து காரை நிறுத்துவது நல்லது. காரை நிறுத்தும் இடத்துக்கு அருகில் சென்றுவிட்ட நிலையில் மெதுவாகச் சென்று நிறுத்தலாம். இது எரிபொருள் செலவைக் குறைக்கும்.

ரஷ்-ஹவர் ரூட்!

சென்னை போன்ற பெரு நகரங்களில் அலுவலக நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கை. அதுபோன்ற ரஷ் -ஹவர் நேரங்களில் நீங்கள் செல்ல வேண்டிய வழி குறித்து கொஞ்சம் சிந்தித்து முடிவெடுங்கள். அடிக்கடி சிக்னல், சடன் பிரேக், மெதுவான மூவிங் என இப்படியான போக்குவரத்து நெரிசல் டைமில் உங்கள் என்ஜினுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதால், எரிபொருள் செலவும் அதிகரிக்கும். திங் வைஸ்லி பாஸ்!

ஃப்யூல் கேஜ்
ஃப்யூல் கேஜ்

உலை வைக்கும் ஐடிலிங்!

டிராஃபிக் சிக்னல்களில் நிற்கும்போதோ அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய நிலை வந்தாலோ கார் என்ஜினை ஆஃப் செய்துவிடுவது நலம். உங்கள் கார் வேண்டுமென்றால் நகராமல் இருக்கலாம், என்ஜின் ஆனில் இருக்கும் வரை எரிபொருள் செலவாகிக் கொண்டேதான் இருக்கும். அப்படியான சமயங்களில் நீண்ட நேரம் உங்கள் காரை ஐடிலிங்கில் வைத்திருந்தால் ஃபியூல் யூஸேஜ் கன்னாபின்னாவென எகிறும்.

ஃபியூல் யூஸைக் குறைக்க மற்றொரு முக்கியமான ஒரு விஷயத்தையும் நாம கவனத்துல வைச்சிருக்கணும். காரை சரியான டைமில் சர்வீஸ் கொடுத்து, பழுதடைந்த பார்ட்ஸையும் கரெக்டா மாத்திடுங்க. சர்வீஸும், ஸ்பேர் பார்ட்ஸும் நல்லா இருந்தா, நிச்சயம் உங்க கார் சரியான மைலேஜைக் கொடுக்கும்.

Also Read – Electric Car: எலெக்ட்ரிக் கார் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 7 அம்சங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top