12 வயது கனவு… விமான பணிப்பெண் இலக்கை எட்டிப் பிடித்த கோபிகா!

கேரள மாநிலத்தில், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தரப்பன்குன்னு எனும் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் – பிஜி தம்பதியின் மகள்தான் கோபிகா. பழங்குடியின மக்களைச் சேர்ந்த கோபிகா தன்னுடைய 12 வயதிலிருந்தே தான் கண்ட கனவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும் கண்ணூரில் உள்ள எஸ். என் கல்லூரியில் வேதியியல் பயில ஆரம்பித்தார். பெற்றோர்கள் தினசரி சம்பளம் வாங்கும் கூலி வேலைகள் செய்து வந்ததால் தனியார் கல்லூரியில் சேர்த்து அவரை படிக்க வைக்க இயலாத நிலை இருந்துள்ளது. இந்த நிலையில், கோபிகாவுக்கு அவர் வாழும் பகுதியில் உள்ள பழங்குடிகள் முன்னேற்ற அதிகாரி மூலம் சர்வதேச ஏர் ட்ரான்ஸ்பர் அசோஷியேஷனில் அரசு உதவியுடன் கஸ்டமர் சர்வீஸ் கோர்ஸ் பயில முடியும் என்ற விஷயம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அதற்கு விண்ணப்பித்து படிக்க தொடங்கியுள்ளார். தற்போது, ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் தேர்வாகி விரைவில் பணியில் சேர உள்ளார்.

கோபிகா
கோபிகா

கேரளாவில் பழங்குடியின பெண் ஒருவர் விமான பணிப்பெண்னாக பணிபுரிய போவது இதுவே முதன் முறையாகும். கேரள அரசு, பழங்குடியின மக்கள் கல்வி அறிவும் வேலைவாய்ப்பும் பெறவேண்டும் என்பதற்காக தீவிரமாக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகின்றது. ஆனால், பழங்குடியின மக்கள் இடையே இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு பெரிதாக சென்றடையவில்லை என்பது கேரள அரசிற்கு சற்று வருத்தம் அளிப்பதாகவே இருந்து வந்தது.

Also Read: முதல் ஆசியக் கோப்பை எப்போ நடந்தது… Asia Cup வரலாறு தெரியுமா?

தற்போது கேரள அரசின் முயற்ச்சிக்கு பலன் தரும் வகையில் பழங்குடியின பெண்ணான கோபிகா இத்திட்டங்களின் மூலம் விமான பணி பெண்ணாக பணிபுரிய பயிற்சியில் சேர்ந்துள்ளார் என்பது அரசு அதிகாரிகள் உள்பட பலரையும் மகிழ்ச்சியில் ஆள்த்தியது. இதனை விட கோபிகாவின் விமான பணிப்பெண்ணாகும் கனவு தோன்றிய விதம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.

கோபிகா
கோபிகா

கோபிகா தன்னுடைய 12 வயதில் வானில் பறக்கும் விமானத்தை பார்க்கும் பொழுதே தானும் அதில் பறந்துக்கொண்டே பணிபுரிய வேண்டும் என்ற ஆசை அவருக்குள் தோன்றியது. அதனைத் தொடர்ந்து, கோபிகா தனது பள்ளிப்படிப்பை முடித்தப்பின் கல்லூரி படிப்பை தொடரும் தருவாயில் அவருடைய கனவான விமான பணிப்பெண் ஆவதற்கான படிப்பை பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அத்தகைய படிப்பை மேற்கொள்வதற்கு பணத்திற்கான தேவை அதிகமாகும் என்பதனை உணர்ந்து தினக்கூலி செய்யும் தன் பெற்றோரால் அது இயலாது என்பதையும் உணர்ந்து படித்து வந்துள்ளார். இறுதியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னுடைய கனவை நிறைவேற்றியுள்ளார். தற்போது கோபிகாவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top