தமிழர்கள் தங்களது உணவுகளில் தவறாது பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று மஞ்சள். அந்த மஞ்சள் உணவுப் பொருள்களில் மட்டுமின்றி கிருமி நாசினியாகவும், நாட்டு வைத்தியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மஞ்சள் என்றதும் மஞ்சள் நிறம்தான் நம்முடைய நினைவுக்கு வரும். ஆனால், கறுப்பு மஞ்சள் பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? கறுப்பு மஞ்சள் என்ற ஒன்று இருப்பது பலருக்கும் தெரியாது. இது இஞ்சியின் குடும்ப வகையைச் சேர்ந்தது. பெரும்பாலும் இந்த கறுப்பு மஞ்சள் மருத்துவ குணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கறுப்பு மஞ்சளை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
கறுப்பு மஞ்சள் வலி நிவாரணியாக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பல் வலி, சொறி, வயிற்றுப் பிரச்னைகள் மற்றும் கீல் வாதம் ஆகியவற்றுக்கு இந்த கறுப்பு மஞ்சள் மிகச்சிறந்த நிவாரணி. ஆனால், இதனை மிகவும் கவனமாக குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கறுப்பு மஞ்சள் அதிகம் உதவுகிறது. செரிமானப் பிரச்னைகளைப் போக்கவும் கல்லீரல் பிரச்னைகளை சரி செய்யவும் இந்த கறுப்பு மஞ்சள் உதவுகிறது. உடலில் இன்சுலின் அதிகளவு சுரப்பதையும் கட்டுப்படுத்துகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும் இந்த கறுப்பு மஞ்சளை பயன்படுத்தலாம்.
கறுப்பு மஞ்சளானது மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆக பயன்படுகிறது. இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
கறுப்பு மஞ்சளில் உள்ள Curcuma caesia நுரையீரலை பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் மூச்சுக்குழல் அழற்சி, நிமோனியா மற்றும் ஆஸ்துமாபோன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது.
தோல் அரிப்புத் தன்மை உடையவர்கள் இந்த கறுப்பு மஞ்சளை அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவினால் அரிப்பு குணமாகும்.
கறுப்பு மஞ்சள் மிகவும் அரிதாகக் கிடைக்கும் ஒருவகை மூலிகையாகும். இதனை உரித்து சிறு துண்டுகளாக்கி முட்டைக்கோஸ், எலுமிச்சை, வெள்ளரிக்காய் சேர்த்து காலை உணவுடன் எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் அதிகமாகும்.