தமிழ் சினிமா பார்த்து நிஜத்துல என்னலாம் பண்ணியிருக்கீங்க?

நம்ம மக்கள் தமிழ் சினிமா-வைப் பார்த்து கெட்டுப் போய்ட்டாங்கனு அடிக்கடி சொல்லுவாங்க. அதெல்லாம் இல்லைனு விவாதம் பண்ணாலும், அப்பப்போ நடக்குற செய்திகளை பார்க்கும்போது, அடேய் என்னங்கடா சீரியஸாவே சினிமாவைப் பார்த்து இப்படிலாம் பண்றீங்கனு தோணும். சினிமா எதார்த்தத்தை நோக்கி நகர்ந்தா, எதார்த்தம் சினிமாவை நோக்கி நகருது. இந்த வீடியோல சினிமாவைப் பார்த்து நிஜத்துல சிலர் பண்ன சம்பவங்களைதான் பார்க்கப்போறோம்.

Singam Surya
Singam Surya

போலீஸ் ஆகணும்னு நிறைய பேர் ஆசைப்படுறதே படங்களைப் பார்த்துதான், அப்படி ஆசைப்பட்டு நிறைய பேர் வந்துருப்பாங்க. கொடுமை என்னனா, தீரன் அதிகாரம் ஒன்று படத்துலயே அதை கிண்டல் பண்ணி சீன் ஒண்ணு ஹெச்.வினோத் வைச்சிருப்பாரு. சாமி, சிங்கம், வல்லரசு படங்கள்லாம் அதுக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம். சிங்கம் படத்தைப் பார்த்துட்டு போலீஸ் ஒருத்தர் மீசை வைச்சிட்டுப் போய் நீதிபதிக்கிட்ட திட்டு வாங்கிட்டு வந்த சம்பவம்லாம் அல்டிமேட். நீலகிரில ஊட்டி நீதிமன்றத்துக்கு வழக்கு சம்பந்தமா ராஜேஷ் கண்ணான்ற காவலர் போய்ருக்காரு. இவரு அம்பலமூலான்ற ஸ்டேஷன்ல வேலை பார்த்துட்டுருந்துருக்காரு. நீதிபதி முன்னாடி போய் சல்யூட் அடிச்சு நின்னதும், அவர் இவரோட சிங்கம் சூர்யா ஸ்டைல் மீசையைப் பார்த்துட்டு காண்டாகி, என்ன மீசை? முதல்ல போய் சரி பண்ணிட்டு வாங்கனு அனுப்பிவிட்ருக்காரு. அவர் பதற்றப்பட்டு மீசையை சரி பண்ணிட்டு திரும்ப போய்ருக்காரு. போலீஸ்காரங்க வேலைல சேரும்போது கொடுக்குற ஃபோட்டோலதான் கடைசி வரை இருக்கணும், மொட்டை அடிச்சாலோ இல்லைனா மீடை பெருசா வளர்த்தாலோ தகவல் தெரிவிக்கணும். இதை மீறுனதுனாலதான் நீதிபதி சொன்னாருனும் தகவல்கள் வெளியாச்சு. எதுக்கு இந்த வம்பு?

சென்னை அரும்பாக்கத்துல இருந்த தனியார் வங்கிக்கிளைல கடந்த ஆகஸ்ட் மாசம் பகல்ல ஒரு கொள்ளை சம்பவம் நடந்துச்சு. அங்க வேலை பார்க்குறவங்களுக்கு கூல் டிரிங்ஸ்ல மயக்க மருந்து கலந்து கொடுத்து, கட்டிப் போட்டு, வங்கில இருந்த சுமார் 20 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடிச்சிட்டு போனாங்க. பட்டப்பகல்ல நடந்த இந்த சம்பவம் தொடர்பான கடுமையான விசாரணைகள் நடந்துச்சு. அந்த சமயத்துல வங்கி மண்டல மேலாளரா இருந்த முருகன்தான் இதை பண்ணியிருக்காருனு எல்லாரையும் கண்டு பிடிச்சாங்க. இந்த சம்பவத்துல ஜிம்.முருகன் கொடுத்த வாக்குமூலம்தான் அதிர்ச்சியே. அவருக்கு சினிமால நடிக்கணும், படங்களை தயாரிக்கணும்னு ஆசை இருந்துருக்கு. வங்கியில வேலை பார்த்துட்டு இருந்துருக்காங்க. கட்டுக்கட்டா பணத்தை பார்த்ததும், அதை கொள்ளையடிக்கணும்னு ஆசைபட்ருக்காங்க. ஜிம்ல கூட உடற்பயிற்சி செய்ற ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொன்னதும், அவங்களும் ஓகே சொல்ல. எல்லாரும் சேர்ந்து நிறைய படங்களை பார்த்து கொள்ளையடிக்க பிளான் பண்ணியிருக்காங்க. குறிப்பா ஷங்கர் எடுத்த ஜெண்டில்மேன் படத்தை பத்து தடவைக்கு மேல பார்த்துட்டு கொள்ளையடிக்க கிளம்பியிருக்காங்க. அதைப் பார்த்துதான் பிளானும் பண்ணியிருக்காங்க. குளுக்கோஸ் அள்ளி வாய்ல போட்டுட்டு எனர்ஜியா கிளம்பினாகூட பரவால்ல, பழங்காலத்துல வந்த அந்த படத்தை பார்த்துட்டு கிளம்புனதுலாம் கொஞ்சம் ஓவர் லொள்ளு. அதுலயும் எப்படியும் என்னை போலீஸ் புடிச்சிருவாங்க. நகையை விற்ற பணத்துல என்னை ஜாமீன் எடுங்கணும் ஃப்ரண்ட்ஸ்கிட்ட ஜிம் முருகன் சொல்லியிருக்காரு. என்னென்ன பண்றாங்க பாருங்க!

Also Read – பழைய பாபா.. புதிய பாபா.. எது பெஸ்ட்?

திரிஷ்யம் படம் பார்த்துட்டு நிறைய பேர் கெட்டு போய்ருக்காங்க. அந்த பாதிப்பால கேரளால ஒரு சம்பவம், மகாராஷ்டிரால ஒரு சம்பவம்னு தெரிஞ்சு நடந்துருக்கு. ஜார்ஜ் குட்டி மாதிரி எத்தனை பேர் தெரியாமல் கொலை பண்ணியிருக்காங்களோ! மகாராஷ்டிரால 2020-ல நடந்த சம்பவம். நாக்பூர்ல கிராம்கார்ன்றவர், அவரோட மனைவியோட தொடர்பில் இருந்த தாகூர் என்பவரை எச்சரிக்க அவரோட ஹோட்டலுக்கு போய்ருக்காரு. அங்க ரெண்டு பேருக்கும் கைகலப்பு ஆகி, ஒரு கட்டத்துல கிராம்காரை, தாகூர் ஹோட்டல்ல போட்டு தள்ளிடுறாரு. அவரை வெளிய கொண்டு போனால் மாட்டிப்போம்னு நினைக்கும்போது, திரிஷ்யம் படம் நியாபகம் வந்துருக்கு. ஹோட்டல் ஊழியர்கள் உதவியோட 10 அடிக்கு ஹோட்டல் பின்னாடியே குழி தோண்டி, அதுல உப்பைக் கொட்டு புதைச்சிருக்காரு. அவரோட ஃபோனை ராஜஸ்தான் செல்லக்கூடிய லாரி ஒண்ணுல போட்ருக்காங்க. கிராம்கார் காணாமல் போனதைத் தொடர்ந்து புகார் கொடுத்துருக்காங்க. அதை விசாரிக்கும்போது இந்த விஷயங்கள் எல்லாமே வெளிய வந்துருக்கு. அப்போ அவரே திரிஷ்யம் படம் பார்த்துட்டு இப்படி பண்ணதா சொல்லியிருக்காரு. இதேமாதிரி, கேரளால ஃப்ரெண்ட்ஸ் சிலர் சேர்ந்து சக நண்பனை கொன்றுக்காங்க. அவனோட மொபைலை லாரில தூக்கி போட்ருக்காங்க. திருநெல்வேலில ஒரு சம்பவம் இதே போல நடந்துச்சு. ஆனால், அவங்க கொலை பண்ணல. மின்வேலில சிக்கி இறந்த நபரை, குடும்பமா சேர்ந்து தோட்டத்துலயே புதைச்சிருக்காங்க. 7 வருஷம் கழிச்சு அந்த விஷயத்தை அதிகாரிகள் கண்டுபிடிச்சிருக்காங்க. ஏன்னு பார்த்தா, மின்வேலியால மாட்டிப்போம்னு பயந்து அப்படி பண்ணாங்கனும் செய்திகள் அப்படி வெளியாச்சு.

வடிவேலு
வடிவேலு

வடிவேலு ஒரு படத்துல டீம் ஒண்ணை செட் பண்ணி வண்டிகள் மேல விழ வைச்சு பணம் பறிப்பாரு, அந்த மாதிரி பெங்களூர்ல நிறைய இடங்கள்ல சம்பவங்கள் நடந்துருக்கு, புஷ்பால பால் வேனுக்கு அடில சந்தன மரக்கட்டைகளை வைச்சு கடத்துவாங்கள்ல, அந்த மாதிரியும் சிலபல சம்பவங்கள் கடந்த சில மாதங்கள்ல நடந்துருக்கு, அவங்களும் சந்தன மரம், குட்கா இதெல்லாம்தான் கடத்தியிருக்காங்க. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் பார்த்துட்டு போலீஸ் ஆஃபீஸர் ஷபீர், ஐ.ஏ.எஸ் தேர்வுல காதுல புளூடூத் மாட்டிட்டு தேர்வு எழுதி மாட்டியிருக்காரு. இப்படி திரைப்படங்களை பார்த்து நிறைய சம்பவங்களை பண்ணியிருக்காங்க.  திரைப்படங்களை மிஞ்சுற அளவுக்கு இன்னைக்கு தங்கம்லாம் கடந்திட்டு வர்றாங்க. இப்படிலாம் எப்படி யோசிக்கிறாங்கனு நமக்கே ஆச்சரியமா இருக்கும். சரி, திரைப்படத்தை பார்த்து கெட்டது மட்டும்தான் பண்ணியிருக்காங்களா அப்டினு நீங்க கேக்கலாம். இல்லை, நிறைய நல்ல விஷயங்களும் பண்ணியிருக்காங்க. வாரணம் ஆயிரம் படம் பார்த்துட்டு தியேட்டர்விட்டு வெளிய வந்ததுக்கு அப்புறம் இயக்குநர் வெற்றிமாறன் இனிமேல் நமக்கு சிகரெட் வேணாம்னு முடிவு பண்ணிருக்காரு. அதுக்கு முன்னாடி இருந்தே சிகரெட் பிடிக்கிறதை கைவிடவும் முயற்சி பண்ணிட்டு இருந்துருக்காரு. சர்கார் படம் வந்தப்போ 49 பி பத்தி எல்லாரும் பேசுனாங்க. அதைத் தொடர்ந்து தேர்தலும் வந்துச்சு. அப்போ, திருச்சியைச் சேர்ந்த ரமேஷ் அபுதாபில இருந்து ஓட்டு போட வந்துருக்காரு. ஆனால், அவர் ஓட்டை ஏற்கனவே போட்ருக்காங்க. ஆனால், ரமேஷ் விடாமல் புகார் கொடுத்து அந்த ஓட்டை திரும்ப போட்ருக்காரு. சதுரங்க வேட்டை படம் வந்த பிறகுதான் நிறைய பேருக்கு விழிப்புணர்வு கிடைச்சுது. ஆர்.டி.ஐ தொடர்பான விஷயங்களும் படங்கள் வந்த பிறகுதான் மக்கள் மத்தில பிரபலமாச்சு. ஜெய் பீம் படம் வந்த பிறகுதான் ஹேபியஸ் கார்பஸ் பத்தின தெளிவு மக்கள் மத்தில ஏற்பட்டுச்சு. இப்படி படங்கள் பல நல்ல விஷயங்களையும் பண்ணியிருக்கு.

சமூகம், தமிழ் சினிமா ரெண்டுமே ஒண்ணோட ஓண்ணு கலந்துதான் இருக்கு. அதாவது, சமூகத்தோட பிரதிபலிப்பு சினிமாலயும், சினிமாவோட பிரதிபலிப்பு சமூகத்துலயும் இருக்கு. அதனால், எதையும் குறிப்பிட்டு குற்றம் சொல்ல முடியாது. இந்த லிஸ்ட்ல நிறைய விஷயங்களை மிஸ் பண்ணியிருப்பேன். நீங்க அதுல ஷாக்கான விஷயம் என்னன்றதை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top