ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே… 90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் மிட்டாய்கள்!

பாட்டி வடை சுட்ட கதையை நாம அம்மா சொல்லி  கேட்ருப்போம். காலம் காலமா இருக்குற கதை இது. ஆனால், பாட்டி இலந்தை மிட்டாய், தேன் மிட்டாய், சூட மிட்டாய்லாம் வித்த கதையை நாம சொல்லிதான் நம்மளோட சந்ததிகள் கேக்கப் போறாங்க. அம்மா, அப்பா, பாட்டி கிட்ட இருந்துலாம் 50 பைசா, 1 ரூபாய் வாங்கிட்டு போய் ஸ்கூல் இண்டர்வெல் டைம்ல கூட்டாளிகளோட ஸ்கூலுக்கு வெளிய வந்த அந்த மிட்டாய் எல்லாம் வாங்கி சாப்பிட்ட காட்சிகளையெல்லாம் மனசுல ஓட்டிப் பார்க்கும்போது ஒரு ஃபீல் வரும்ல, அது முதல் காதல் தர்ற ஃபீலைவிட ரொம்ப நல்லாருக்கும். அந்த வகையில் நம்ம ஃபேவரைட் மிட்டார்கள் பத்தி தான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.  

90s Mittai
90s Mittai

90’ஸ் கிட்ஸ் எப்பவும் பழசை மறக்கவே மாட்டாங்க. இன்னைக்கு வரைக்கும் அதே குழந்தை மனசோடதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. எனக்கு அந்த பாக்கெட் வேணாம் இந்த பாக்கெட் தான் வேணும் இதுல தான் நிறைய மிட்டாய் இருக்கு அப்டினு அடம் புடிச்சு அழுது பார்த்து பார்த்து வாங்கி சாப்பிட்ட 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே  முதல்ல ரொம்பவே புடிச்சதுனா அது கலர் அப்பளம் தான். கடைக்குள்ள நுழையும் போதே நம்ப கண்ணுல பட்ற மாரி கலர் கலரா மாட்டிவிட்ருப்பாங்க. அந்த அப்பளத்த வாங்கி அப்டியே உடச்சி வாயில போடும் போது இருக்க இடமே தெரியாம கரஞ்சி போய்டும். வீட்டுல மீன்லாம் வளர்ப்போம்ல, நான்லாம் அந்த மீனுக்கு சாப்பிட்ட அப்பளத்துல இருந்து கொஞ்சம் எடுத்து வைச்சு வீட்டுக்கு போய் அந்த கண்ணாடி தொட்டில போட்டு பார்த்து ரசிப்பேன்.

இலந்த அடை சொல்லும் போதே அப்படியே வாயில எச்சி ஊரும். அந்த இலந்த அடை பாக்கெட்ட வாங்கி அத அப்டியே வாயில வச்சி வாயலயே இழுத்து இழுத்து சாப்டுற சொகம் இருக்கே. சொன்னா புரியாது, சாப்பிட்டா தான் புரியும். அதே மாதிரிதான் ஜாம் மிட்டாய். அதை கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுற பொறுமைலாம் நமக்கு கிடையாது. அப்படியே பாக்கெட்டோட வாங்கி அலேக்கா வாயில போட்டு மென்னு சாப்பிட்டுட்டு கவரை வெளிய சுத்துறதுதான். எப்படி? இந்த மாதிரி ஏகப்பட்ட வித்தைகளை 90’ஸ் கிட்ஸ் கத்து வைச்சிருக்கோம்.

கரண்டி புளி மிட்டாய். இன்னைக்கும் இது எங்கயாவது கண்ணுல பட்டுச்சுனா. அதை ரெண்டு பேர் வாங்கிட்டு இருப்பாங்க. அவங்களை கூப்பிட்டு கேட்டா நம்ம 90’ஸ் கிட்ஸாதான் இருப்பாங்க. குச்சி ஐஸ்கிரீம் மாதிரி சாப்டுட்டு கரண்டியெல்லாம் சேர்த்து வைச்சிப்போம். அதை சேர்த்ததுக்கு கொஞ்சம் சேர்த்து வைச்சிருந்தாங்க இந்நேரம் கோவாவுக்காவது போய்ருக்கலாம். அப்றம் ரொம்பவே  முக்கியமான மிட்டாய் இதுதான். அதாங்க, மம்மி டாடி மிட்டாய். இப்போ இருக்குற பாஸ் பாஸ் மிட்டாய்க்குலாம் மம்மி டாடி இந்த மம்மி டாடிதான். அதை சரம் சரமா வாங்கி இரண்டு பாக்கெட்லயும் அமுக்கி வைச்சிட்டு ஒவ்வொரு பாக்கெட்டா சாப்டுட்டு அந்த கவரை திருப்பி திருப்பி பாத்து விளையாடுனா சும்மா அமுக்கு டுமுக்கு அமால் டுமாலா இருக்கும்.

90s Mittai
90s Mittai

 சிகரெட் மிட்டாய். இந்த மிட்டாய வாங்கி அத அப்டியே ஸ்டைலா சந்திரமுகில வர ரஜினி மாரி தூக்கி போட்டு வாய்லயே கேட்ச் புடிச்சி போஸ் குடுத்துட்டு இருப்போம். அப்போனு பாத்து நம்ப அம்மா பாத்துடுவாங்க அத ஒரிஜினல் சிகரெட்னு நினச்சு மொத்து வாங்குன அனுபவமும் நம்மல்ல நிறைய பேருக்கு இருக்கும். அதுலாம் ஒரு அழகிய காலம். கல்கோனாவ வாங்கி கடிக்க முடியாம கடிச்சி தின்னுட்டு இருக்கும்போதே சைட்ல சவ்வு மிட்டாய வாங்கி அத இழுத்து மீசயா ஒட்டிட்டு இருப்போம். டு இன் ஒன் மிட்டாய் தெரியுமா? அதாங்க விளையாடிட்டே சாப்பிடுற மிட்டாட். கயிறு மிட்டாய வாங்கி பாதி சாப்டுட்டு பாதி விளையாடிட்டு இருக்கும் போதே அது கைதவறி கீழ விழுந்துடும் அத பாத்து மனசு தவிக்கும் பாருங்க அழுதுட்டே போயி உடன் பிறப்புகள்கிட்ட சண்டைப் போட்டு அவங்க வைச்சிருக்குறதை ஆட்டையைப் போட நினைப்போம்.  

எடக்கல் மிட்டாய் நியாபகம் இருக்கா? அதை வாயில போட்டா ரொம்ப நேரத்துக்கு கரையவே கரையாது. அதுலயும் இந்த மிளகாய் மிட்டாய வாங்கி அத ஒருஜினல் மிளகாய சாப்பிட்ற மாரி சீன் போட்டு கெத்தா சாப்டுட்டு இருப்போம். அதே மாறி பாக்கு மிட்டாயலாம் வாங்கி பிரண்ட் கிட்டலாம் பெட் கட்டி ஸ்கூல்ல ஒரு பீரியட் முடியுற வரைக்கும் வாய்லயே வைச்சிட்டு இருக்குற அனுபவமும் நம்மள்ல நிறைய பேருக்கு இருக்கும். அப்புறம் ஆசை ஆசையாய் வாங்கித் தின்ன ஆசை மிட்டாய், இன்னும் விலை ஏறாத பூமர், ஐஸ்கிரீம்க்கே டஃப் கொடுக்கும் ஐஸ்க்ரீம் மிட்டாய், உண்மைலயே கோல்ட்னா இவ்வளவு டேஸ்டா இருக்கும்னு நம்மள ஏமாத்துன கோல்ட் காயின் மிட்டாய், கடிச்சா தேன் சிந்தும் தேன் மிட்டாய், ஹார்லிக்ஸ் மிட்டாய், கோகோகோலா மிட்டாய் இப்டினு 5 ரூபாய்க்குள்ள எல்லாத்தயுமே வாங்கி ஏதோ பெருசா சாதிச்ச மாதிரி உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருப்போம். காலைல எழும்பி வேலைக்குப் போனும், நைட்டு டிப்ரஷன் ஆகணும், சம்பாதிக்கணும் இப்டிலாம் எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்ந்த காலம் அது.

இளமை திரும்புமே புரியாத புதிராச்சேனு பாடுற மாதிரி குழந்தை பருவம் திரும்பிச்சுனா மஜாவா இருக்கும். டைம் மிஷனை சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, சொல்லும்போதே வெறி ஆகுது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top