சினேகா

#20YearsofSneha: 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ஹீரோயின் லிஸ்டில் சினேகாவுக்கு ஸ்பெஷல் இடம்… ஏன் – 5 காரணங்கள்!

மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும் என்று சொல்லிக்கொண்டிருந்த இளைஞர்களை சினேகா மாதிரி பொண்ணு வேணும் என்று கேட்க வைத்த சம்பவம் நடந்து 20 வருடங்கள் ஆகிறது. எப்படி நடந்துச்சு இந்த மேஜிக்? ஏன் சினேகாவை எல்லாருக்கும் பிடிச்சதுங்குறதுக்கான 5 காரணங்களைத் தான் நாம பார்க்கப்போறோம்.

சினேகா
சினேகா

பல்லாங்குழி சிரிப்பு

சினேகானாலே சிரிப்புதான். தமிழ்சினிமாவில் எம்.ஜி.ஆர் காலத்து ஆட்களுக்கு புன்னகை அரசி கே.ஆர். விஜயா என்றால் விஜய், அஜித் காலத்து ஆட்களுக்கு சினேகா. 16 பற்களும் தெரியும் அந்தச் சிரிப்புக்கு தமிழ்நாடே அடிமையப்பா..!

மிரட்டும் கூர்விழி

ஒரு ரூபாயைக் கையில் திணித்துவிட்டு பிரிந்து போன காதலையோ, தன் முன்னாலேயே இன்னொருத்திக்கு தாலிகட்டிய கொக்கி குமாரின் துரோகத்தையோ கண்களிலேயே சொல்லிவிட முடிவதுதான் சினேகாவின் பெரிய ப்ளஸ். “கடவுள் பூமி வந்தால் உன் கண்ணை பார்க்க வேண்டும் மனிதன் பாவம் என்று அவன் மறைந்து போக வேண்டும்” அப்டினு பா. விஜய் சும்மாவா எழுதுனாரு.

சினேகா
சினேகா

வாஞ்சையான குரல்

ரொம்பவே ஸ்ட்ரெஸ்டா நீங்க உணரும்போதோ இல்லாட்டி என்னடா வாழ்க்கை இதுனு நீங்க முழுமையா சோர்ந்து போயிருக்கப்பவோ, வானத்தில் இருந்து ஒரு அசரீரீ டைப் குரல் இதெல்லாம் ஒண்ணுமில்லை கண்ணா.. இதுவும் கடந்துபோகும்னு ஒரு நம்பிக்கை கொடுத்தா எப்படி இருக்கும்… அந்த மாதிரியான வாஞ்சையான குரலுக்குச் சொந்தக்காரி நம்ம சினேகா. இந்த பாயிண்டை கரெக்டா புடிச்சு அதை ஆட்டோகிராஃப் படத்துல பயன்படுத்திருப்பாரு இயக்குநர் சேரன். தோல்விகள் துரத்தும் சூழலில் சினேகா கொடுக்கும் நம்பிக்கையில், மெல்ல மெல்ல அதிலிருந்து மீள்வார் ஹீரோ. அப்படி எனர்ஜி கொடுக்கும் வாய்ஸ் சினேகாவுடையது.

சினேகா
சினேகா

எதிர்வீட்டு ஏஞ்சல்

நம்மள்ல சிலபேருக்கு எதிர்வீட்டில் ஏஞ்சல்கள் குடியிருக்கும் வரம் கிடைக்கப்பெற்றிருக்கும். சேலையோ, சுடிதாரோ தினமும் அந்த ஏஞ்சல் தரிசனம் எப்போ கிடைக்கும்னு காத்துக் கிடக்குற பசங்களை நாம கடந்து போயிருக்கலாம். அப்படியான எதிர்வீட்டு ஏஞ்சல்தான் நம்ம சினேகா. டிரெடிஸ்னல் டிரெஸ்ஸோ… மாடர்ன் டிரெஸ்ஸோ எந்த டிரெஸ்ஸா இருந்தாலும் சினேகாவுக்கு பெர்ஃபெக்ட்தான். ஒரு சிலரைப் பார்த்தா ரொம்ப நாள் பார்த்து, பழகுன ஒரு ஃபீல் வரும்ல.. அதுதான் `The girl next door’-னு இங்கிலீஷ்ல சொல்ற பதத்துக்கு முக்கியமான குவாலிட்டி. அந்த வகையில் பார்த்தால் நம்ம புன்னகை இளவரசி சினேகாவுக்கு நூத்துக்கு நூத்தம்பைது மார்க் கொடுக்கலாம் மக்களே…

90s Girl Bestie

சினேகா
சினேகா

புன்னகை தேசம்ல தொடங்கி, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, ஏப்ரல் மாதத்தில், ஆட்டோகிராஃப் வரைக்கும் அன்பான கேர்ள் பெஸ்ட்டீ என்றால் அது சினேகாதான். இப்படி ஒரு ஃப்ரெண்டு நமக்கு இல்லையே என்று ஏங்கித் தவித்தார்கள் 90ஸ் கிட்ஸ்.

இந்த 5 காரணங்களால்தான் சினேகா 90s கிட்ஸ் எல்லாருக்கும் ஃபேவரைட் ஹீரோயினா இருந்திருக்காங்க.

Also Read – `மென்குரல் அரசன்’ ஹரிஹரன் ரசிகர்களே… உங்களுக்கான சின்ன டெஸ்ட்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top