விஜய்

இந்தியாவின் மோஸ்ட் பாப்புலர் ட்விட்டர் ஸ்பேசஸ்… விஜய் பற்றி செலிபிரட்டிகள் பகிர்ந்துகொண்ட தகவல்கள்!

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். அவர் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாள் தொடர்பாக வெளியான `பீஸ்ட்’ போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டர் ஸ்பேசஸில் தி ரூட் நிறுவனம் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அனிருத், கீர்த்தி சுரேஷ் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. இதில் கலந்துகொண்ட அனைவரும் விஜய்யுடனான தங்களது மெமரிகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த ஸ்பேசஸ் நிகழ்ச்சி உலக அளவில் அதிக நபர்கள் கலந்துகொண்ட இரண்டாவது நிகழ்ச்சி என சாதனை ஒன்றையும் படைத்தது. இதில் 27,500 பேர் கலந்துகொண்டனர். இந்தியாவில் முதலிடத்தில் இந்த ட்விட்டர் ஸ்பேசஸ் நிகழ்ச்சி உள்ளது. இதனை பிரபல டிவி ஆங்கரான டிடி தொகுத்து வழங்கினார். விஜய்யின் பிறந்தநாள் தொடர்பாக நடத்தப்பட்ட ட்விட்டர் ஸ்பேசஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் என்னவெல்லாம் பேசினாங்கனு தெரிஞ்சுக்கலாமா?!

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் - விஜய்
லோகேஷ்விஜய்

“ஒவ்வொரு படத்துல இருந்தும் எதாவது ஒரு பொருள் ஞாபகார்த்தமா எடுத்துட்டு வர்றது வழக்கம். முன்னாடியே விஜய் அண்ணாகிட்ட படம் முடியும்போது காப்பு எடுத்துட்டு போய்டுவேன்னு சொல்லியிருந்தேன். அவரு முடியாதுனு சொல்லிட்டே இருந்தாரு. அப்புறம் நீங்களே வச்சிக்கோங்க அளவு சரியா இருக்குதானு பாத்துட்டு கொடுத்துட்றேன்னு சொல்லி வாங்கி கையில மாட்டிட்டு ஓடிட்டேன். ஷூட்டிங் அப்போ நெய்வேலி கூட்டம் மறக்கவே முடியாது. அவ்வளவு பேரை முதன்முதலா பார்த்தேன். பயங்கரமான கூட்டம். செமயான எக்ஸ்பீரியன்ஸ் அது. ஷூட்டிங் அப்போதான் கைதி படம் மொத்த டீமும் சேர்ந்து பார்த்தோம். தூரமா உட்கார்ந்து தளபதியோட ரியாக்‌ஷன பார்த்துட்டே இருந்தேன். படம் முடிஞ்சதும் கொஞ்ச நேரம் கட்டிப்பிடிச்சாரு. மாஸ்டரோட ஸ்டார்டிங்ல இருந்து என்ட் வரைக்கும் நிறைய ஃபேவரைட் மூமண்ட்ஸ் இருக்கு. ரிலீஸ்க்கு முன்னாடி சில மினிட்ஸ் லீக் ஆன சமயத்துல ரொம்ப டல்லா இருந்தேன். `எதுவும் பெருசா யோசிக்காதடா. கரெட்க்டா எல்லாம் நடந்துரும்’ அப்டினு அட்வைஸ் பண்ணாரு. `ஃப்ரீயா விட்றா பாத்துக்கலாம்’ – இதுதான் மேக்ஸிமம் அட்வைஸா சொல்லுவாரு. அது மறக்கவே முடியாது.”

அனிருத்

அனிருத் - விஜய்
அனிருத் – விஜய்

“விஜய் சார் எப்பவுமே ஹேப்பி வைப்ஸ்தான். எப்ப அவரோட டைம் ஸ்பென்ட் பண்ணும்போது ஹேப்பியாவே இருக்கும். கத்தி ஆல்பம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் என்னோட பிறந்தநாள் வந்துச்சு. அப்போ பியானோ ஒண்ணு பிரசண்ட் பண்ணாரு. அவ்ளோ பெரிய ஸ்டார் நம்மள மதிச்சு மியூசிக் இன்ஸ்ரூமெண்ட் ஒண்ணு கிஃப்ட் பண்ணாரு. இன்னைக்கு வரைக்கும் மோஸ்ட் ஆஃப் தி சாங் அதுலதான் கம்போஸ் பண்றேன். அந்த மெமரி லைஃப் லாங் இருக்கும். விஜய் சார் எப்பவுமே என்னை கலாய்ச்சுட்டே இருப்பாரு. எல்லாரையும் ஒரே மாதிரி ட்ரீட் பண்ணுவாரு. ஃபஸ்ட் குட்டி ஸ்டோரி சாங் ரெடி பண்ணி அனுப்பினப்போ கோல்ட் செயின் ஒண்ணு கிஃப்ட் பண்ணாரு. மார்னிங் ஃப்ரஷ் வாய்ஸ்ல பாடுறது சார்க்கு ரொம்பவே புடிக்கும். விஜய் சார் பாடும்போது மட்டும்தான் எங்க ஸ்டுடியோல மார்னிங்கே ஆபரேஷன ஸ்டார்ட் பண்ணிடுவோம். சாங் பாடுறாருனா செம பிரிபரேஷன்ல வருவாரு. எல்லா வேலையும் சீக்கிரம் முடிஞ்சுரும். விஜய் சார் படத்துலயே கில்லி எனக்கு ரொம்ப புடிச்ச ஆல்பம். அர்ஜூனரு வில்லு சாங் எனக்கு ரொம்ப புடிக்கும். அந்த சாங்கை ரீமிக்ஸ் பண்ணனும்னு ஆசை இருக்கு.”

நெல்சன் திலீப்குமார்

நெல்சன் - விஜய்
நெல்சன் – விஜய்

“ஷாஜகான் படம் தியேட்டர்க்குபோய் 18 தடவை பார்த்திருக்கேன். எப்படி எவ்வளவு சீக்கிரம் போனாலும் ஃபஸ்ட் டே ஷோ டிக்கெட்லாம் கிடைக்காது. பூவே உனக்காக, போக்கிரி இதெல்லாம் எப்ப போட்டாலும் பார்ப்பேன். ரொம்ப புடிக்கும். அவரோட சாங்க்ல ஆல்தோட்ட பூபதி, ஊதாப்பூ, ஆடுங்கடா என்ன சுத்தி இந்த பாட்டு எல்லாம் புடிக்கும். நிறைய தடவை கேட்ருக்கேன். போக்கிரி முன்னாடி வரைக்கும் அவரோட லவ் சைட் பிடிக்கும். அதுக்கு அப்புறமா ஆக்‌ஷன் சைட் பிடிக்கும். எல்லாத்துக்குமே ரொம்ப கம்மியாதான் ரியாக்ட் பண்ணுவாரு. நம்மள கன்ஃபியூசன்லயே வச்சிருப்பாரு. நான் ரெண்டு, மூணு தடவை கேட்டாதான் `நல்லாதான்யா இருக்கு’ அப்டினு சொல்லுவாரு. பீஸ்ட் லுக்கும் நல்லா இருக்குனு சொன்னாரு. அவரோட காமெடி படத்துல ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப புடிக்கும். ஃப்ரெண்ட் மாதிரிதான் அவரும் பேசுவாரு. அவர் இருக்குற இடமே ஹேப்பி வைப்ஸா இருக்கும். ரொம்ப ஒரு மாதிரி இருந்துச்சுனா கால் பண்ணலாமா கேப்பேன். `யெஸ்’னு சொல்லுவாரு. கொஞ்சம் நேரம் பேசிட்டு ஃபோன வைப்பாரு. பயங்கரமான பாஸிட்டிவிட்டி கொடுப்பாரு. அவரால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியாது. சம்பவங்களை எல்லாம் ரீ கலெக்ட் பண்ணி சிரிப்பாரு.”

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் - விஜய்
கீர்த்தி சுரேஷ் – விஜய்

“ஒரு தடவை தீபிகோ படுகோனோட சாங்க பத்தி பேசிட்டு இருந்தோம். அப்போ `நீங்க தீபிகாவோட பேர் பண்ணா செமயா இருக்கும்னு சொன்னேன்’. அதுக்கு அவரு, `அட போம்மா.. தீபிகா படுகோன்ல ஆரம்பிச்சு அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில கீர்த்தி சுரேஷ்லதான் வந்து முடிப்பாங்க’ அப்டின்டாரு. அவரு நம்மளயே கிண்டால் பண்ணாலும் சிரிக்காம இருக்க முடியாது. அப்படி இருக்கும் அவரோட டைமிங். ஆல் தோட்ட பூபதி, மெர்சல், கில்லி, அப்படி போடுனு எல்லாத்துலயுமே டான்ஸ் கலக்கியிருப்பாரு. விஜய் சார்க்கு சைனீஸ் சமையல் புடிக்கும்னு நினைக்கிறேன். அவருக்கு அதான் சமைச்சு குடுப்பேன். அவரு எங்கிட்ட ஃபன்னா, ஜாலியாதான் பேசுவாரு. அட்வைஸ்லாம் பெருசா பண்ணமாட்டாரு. எப்பவும் பாஸிட்டிவ் தாட்ஸோட இருப்பாரு.”

மாளவிகா மோகனன்

மாளவிகா - விஜய்
மாளவிகா – விஜய்

“மாஸ்டர் படத்தின் பூஜையின் போதுதான் முதன்முதலாக அவரைப் பார்த்தேன். நிறைய பேசல. அப்புறம் ஷீட்டிங்லதான் ப்ராப்பரா பார்த்தேன். ரொம்ப நெர்வஸா இருந்தேன். ஆனால், என்னை கம்ஃபர்டபிளாக உணர வைத்தார். அவரைப் பற்றி நன்றாக தெரிந்த பிறகு அவரின் மற்றொரு பக்கம் தெரிந்தது. சூப்பரான ஃபன்னான ஆள் அவரு. நான் உங்களுக்கு என்ன கிஃப்ட் வேணும்னு விஜய் சார் கிட்ட கேட்டேன். அவரு கிஃப்ட்லாம் புடிக்காதுனு சொன்னார். அவருக்கு நியூயார்க்னா ரொம்ப புடிக்கும். கொரோனாவால் கடந்த இரண்டு வருஷமா அவரால போக முடியல. சான்ஸ் கிடைச்சா நான் அவரை கூட்டிட்டு போவேன். மாஸ்டர் ஷூட்டிங் முடிஞ்சப்புறம் ஒருநாள் மும்பைல Baaghi 3 படம் பார்க்க தியேட்டருக்கு போனோம். டைகர் ஷெராஃபை தலைவா என்று கத்தி கூப்பிட்டார். ரொம்ப எஞ்சாய் பண்ணாரு. சின்ன விஷயங்களுக்கும் எக்ஸைட் ஆவாரு.”

Also Read : விஜய், அஜித்துக்கு முன்னரே ஹிட்களைக் குவித்த பிரசாந்த் சறுக்கியது எங்கே… ஏன்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top