ஆர்.எம்

பி.டி.எஸ் டீமின் கேப்டன் ஆர்.எம் பற்றிய 21 சுவாரஸ்ய தகவல்கள்!

உலக அளவில் மிகப்பெரிய ஃபேன் பேஸைக் கொண்டுள்ள பி.டி.எஸ் குழுவின் லீடராகவும் அந்தக் குழுவின் ராப்பராகவும் அறியப்படுபவர், ஆர்.எம். இவரின் உண்மையான பெயர், கிம் நாம் ஜூன். இவரைப் பற்றிய 21 சுவாரஸ்ய தகவல்கள் இங்கே…

RM
RM
 • பி.டி.எஸ் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் ஆர்.எம்தான்.
 • பிக் ஹிட் என்டர்டெயின்மென்டில் சேருவதற்கு முன்பு ஆர்.எம் அன்டர்கிரவுன்ட் ராப்பராக இருந்தார். அப்போது அவரின் பெயர் ரன்ஞ் ரான்டா என்று அறியப்பட்டது.
 • 2007-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே பாடல்களை ஆர்.எம் எழுதத் தொடங்கினார். அவற்றை ஆன்லைன் ஹிப் ஹாப் தளங்களில் பகிர்வார்.
 • ஆர்.எம்-ஐ சந்தித்த பிறகுதான் பிக் ஹிட் என்டர்டெயின்மென்டின் சி.இ.ஓ பேங் சி ஹியூகின் பி.டி.எஸ் குழுவை உருவாக்க முடிவு செய்தார்.
 • குழந்தையாக இருக்கும்போது ஆர்.எம் அப்பார்ட்மெண்டின் பாதுகாப்பு காவலராக விரும்பினாராம்.
 • ஆர்.எம் 181 சென்டிமீட்டர் உயரம் உடையவர். பி.டி.எஸ் குழுவின் மிக உயரமான உறுப்பினர் இவர்தான்.
 • ஆர்.எம் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல.
 • ஆர்.எம்மின் ஐ.க்யூ லெவல் மிகவும் அதிகம். அவரது ஐ.க்யூ லெவல் 148.
 • `நோ மோர் ட்ரீம்’ என்ற பாடலை ஆர்.எம் எழுதினார். ஏனெனில், அவர் பள்ளியில் படிக்கும்போது அவருக்கு எந்த கனவுகளும் இல்லை.
 • ஆர்.எம் `The god of destruction’ என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில், தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை சீக்கிரம் உடைத்துவிடுவாராம்.
 • ஆர்.எம்மின் ஃபேவரைட் நம்பர் 1.
 • கடல் உணவுகளை ஆர்.எம் விரும்பமாட்டார். அதுமட்டுமல்ல சிகரெட்டும் அவருக்கு பிடிக்காது.
 • எல்.ஜி.பி.டி உரிமைகளுக்கு ஆதரவாக தனது கருத்துகளை வெளிப்படுத்தக்கூடியவர்.
 • ஆர்.எம்மின் செல்ல நாயின் பெயரும் ஆர்.எம் தான். ஆம்! ராப் மான்.
 • கருப்பு, ஊதா மற்றும் பிங்க் ஆகிய நிறங்கள் ஆர்.எம்மின் ஃபேவரைட். அடிக்கடி அவரது ஃபேவரைட் நிறத்தை மாற்றவும் செய்வார்.
 • பி.டி.எஸ் குழுவில் ஆர்.எம் சேரவில்லை என்றால் அவர் ஒரு எழுத்தாளராகவோ அல்லது கவிஞராகவோ ஆகியிருப்பார் என்று ஆர்.எம் கூறியுள்ளார்.
 • டைரி எழுதும் பழக்கம் உடையவர் ஆர்.எம். அப்போதுதான் முன்னாடி உள்ள நாள்களை ஒப்பிட்டு புதிய வழியில் வாழ்க்கையை திட்டமிட முடியும் என்று நம்புகிறார்.
 • ஒரு வேளை பெண்ணாக பிறந்திருந்தால் பி.டி.எஸ் குழுவின் மற்றொரு உறுப்பினரான ஜே-ஹோப் உடன் டேட் செய்ய விரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.
 • தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் உடையவர் ஆர்.எம்.
 • ஆர்.எம், சன் ரைஸை விட சன் செட்டை அதிகம் விரும்பக்கூடியவர்.
 • தன்னுடைய பெயரை மாற்ற விரும்பினால் `ரியான் மான்ஸ்டர்’ என்று மாற்றுவாராம்.

Also Read : `உலகையே கலக்கும் பி.டி.எஸ் இசைக்குழு!’ – யார் சாமி இவங்க?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top