ஒரு விஷயத்தை ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி நமக்கு அதை பத்தி பெருசா எதுவும் தெரியாம இருக்குறது தப்பு இல்லை, ஆனா அதுல நம்ப எவ்ளோ ஆர்வமாகவும், விருப்பத்தோடும் இருக்கோம் அப்படிங்குறது ரொம்ப முக்கியம். முக்கியமா திரையில் நடிக்கும் நடிகர்கள் இது மாதிரியான முடிவுகளை தைரியமா எடுத்தா மட்டும் தான் அவங்க வெற்றியடைய முடியும். இங்க ஒருத்தவங்க அப்படி எடுத்த முடிவு தான் அவங்களுக்கான அடையாளத்தை இப்போ உருவாக்கி கொடுத்து இருக்கு.
அது வேற யாருமில்லை நம்ப பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோயின் வினுஷா தேவி தான். இவங்க நடிக்க வரும்போது அவங்க அம்மா என்ன சொன்னாங்க? விஜய் டிவியில் என்ன அவார்ட் வாங்க இருக்காங்க? சீரியல் இல்லாம இவங்க என்ன வேலை செய்யுறாங்க? இதெல்லாம் பத்தி வீடியோல பார்ப்போம்.

சின்ன வயசுலையே அப்பா-வை இழந்த வினுஷா, மொத்தமா அம்மா மற்றும் பட்டியோட அரவணைப்புல தான் வளர்ந்து இருக்காங்க. ஸ்கூல் படிச்சு முடிச்சுட்டு, அண்ணா நகர்ல இருக்க வல்லியம்மாள் வுமன்ஸ் காலேஜ்ல தான் படிச்சு முடிச்சு இருக்காங்க. இவங்களுக்கு மாடலிங்ல ஆர்வம் இருந்த காரணத்துனால முதலில் ஒரு மாடலாக தான் அவங்க பயணத்தை ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க. ஆனா அப்போ இருந்தே வினுஷாவுக்கு நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ்ல வருமாம். நீ கருப்பா இருக்க, ஒல்லியா இருக்க-ன்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணுவாங்களாம். ஆனா ஆரம்பத்தில் இருந்தே வினுஷா அதையெல்லாம் ரொம்ப ஈசியா தான் Handle பண்ணி இருக்காங்க. இதுக்கு திரைப்பட நடிகை நந்திதா-வும் ஒரு காரணம், ஏன்னா வினுஷாவுக்கு நந்திதா தான் Inspiration ஆம். அவங்க நடிப்பையும் நிறைய பாராட்டுவாங்க.
கொஞ்சம் நாள் மாடலிங் பண்ணிக்கிட்டு இருந்த வினுஷா அப்போ அப்போ சில டிக் டாக் வீடியோஸூம் பண்ணிட்டு இருந்து இருக்காங்க. திமிரு ஸ்ரேயா ரெட்டி மாதிரி இவங்க இருக்காங்க-ன்னு சொல்லி அவங்க பண்ண ஒரு சீன்னை நடிக்க சொல்லி இருக்காங்க. இவங்களும் ரசிகர்கள் எல்லாரும் கேட்ட காரணத்துக்காக அந்த ரீல் போட்டு இருக்காங்க. அது மூலமாவே நிறைய பேருக்கு வினுஷா-வை புடிச்சு போச்சு. அந்த அளவுக்கு கேரக்டராவே மாறி நடிச்சு அசத்தி இருப்பாங்க.

இப்படி போயிட்டு இருந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகுவதா அறிவிச்சு இருந்தாங்க. இயக்குநர் பிரவீன்-னும் அவங்கள Replace பண்ண ஓரு நல்ல கேரக்டரை தேடிட்டு இருந்து இருக்காரு. அந்த சமயம் பார்த்து வினுஷா கரெக்ட்டா சிக்கி இருக்காங்க. Audition-கூப்பிட்டு இருக்காங்க. பிரவீன் சாரும் என்னம்மா இந்த ரோலில் நடிக்குரிய-ன்னு கேட்டு இருக்காரு. 2 நாள் டைம்-ல கேட்டு, சரி தேடி வர வாய்ப்பை எதுக்கு வேணாம்னு சொல்லணும்னு நடிக்க ஒத்துகிட்டாங்க.
Also Read : இங்கிலீஷ் நியூஸ் ரீடர் டூ சீரியல் நடிகை – `பாக்கியலக்ஷ்மி’ ரேஷ்மா ஜர்னி!
அதுக்கு பிறகு கேட்கவே வேண்டாம், கண்ணம்மா கேரக்டராவே மாறி சீரியலின் ஒரு மிக முக்கியமான லீட் ரோலில் நடிச்சு சீரியல் பார்க்கும் ஆண்டி-கள் மனசுல இடம் புடிச்சுட்டாங்க.
அதுவும் விஜய் டிவி-யில் டாப் TRP-யில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் வினுஷா சொன்ன மாதிரியே அவங்களுக்கு கிடைச்ச வாய்ப்பை யூஸ் பண்ணி இப்போ வேற லெவல் ஆகிட்டாங்க. அதே போல வினுஷாவுக்கு சீரியல் வரதுக்கு முன்னாடி அதை பத்தி எதுவும் தெரியாதாம்.

0% எதுவும் தெரியாம தான் உள்ளே வந்து இப்போ நடிச்சு பின்னிட்டு இருக்காங்க.
இன்னொரு பக்கம் அவங்க அம்மாவுக்கு பெருசா இவங்க சீரியலில் நடிக்கப் போறேன்னு சொன்னது பிடிக்கலையாம். இது நமக்கு தேவை தானா? சொந்தக்காரர்கள் என்ன நினைப்பாங்க? நீ யோசி -ன்னு சொல்லி அழுதுட்டாங்களாம். பிறகு வினுஷா பேசி சமாதானம் பண்ணி இருக்காங்க.
இயக்குநர் பிரவீன்-னும், கூட பாரதி கேரக்டரில் நடிக்கும் அருணும் வினுஷாவுக்கு முழு சப்போர்ட் கொடுத்து எல்லாம் சொல்லி கொடுப்பாங்களாம்.
சீரியல் இல்லாம IT கம்பெனியிலும் வேலை பார்த்துட்டு வர்றாங்க. குடும்பத்தை நான் தான் பார்த்துக்கணும். சோ எனக்கு வேலை ரொம்ப முக்கியம்னு சொல்றாங்க வினுஷா. N4 அப்படிங்குற ஒரு படத்துலையும் நடிச்சு இருக்காங்க.
நடிக்க வந்த கொஞ்சம் நாளிலே விஜய் டிவி நடத்திய விஜய் அவார்ட் ஷோ-வுல ‘Best Find’ -குற அவார்ட் வாங்கி இருக்காங்க. உண்மையாவே வினுஷா ஒரு சிறந்த தேர்வு தான். உங்களுக்கு அவங்க கிட்ட ரொம்ப புடிச்ச விஷயம் எது -ன்னு கமெண்ட்ல சொல்லுங்க…
Aw, this wass a really nice post. Taking the time and actual effort tto mwke
a vedy good article… but what can I say… I hesitate
a whole lot aand never seem to get nearly anything done. https://Glassiuk.Wordpress.com/
It’s in fact very difficult in this full of activikty life too listen news on TV,
so I ssimply use the web for that purpose, and
obtain the newest news. https://Gameturnsbrutal.wordpress.com/