கமல் - விஜயகாந்த்

கமலும் விஜயகாந்தும் ஒரே படத்துல… இதை நீங்கப் பார்த்திருக்கீங்களா?

நம்ம `உலக நாயகன்’ கமலும் ‘கேப்டன்’ விஜயகாந்தும் ஒரு படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா..? அவர்கள் இணைந்த அந்தப் படத்தையும் படத்தைப் பற்றிய தகவல்களையும் பார்க்கலாம்.

ஆர்.சி.சக்தி

கமல் - ஆர்.சி.சக்தி
கமல் – ஆர்.சி.சக்தி

‘உணர்ச்சிகள்’, ‘மனிதரில் இத்தனை நிறங்களா..’ போன்ற கமலின் வெகு ஆரம்பகாலப் படங்களை இயக்கியவரும் கமல் பெரிதும் மதிக்கும் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவரானவருமானவர் ஆர்.சி.சக்தி. ரஜினி, கமலை மாற்றி மாற்றி இயக்கிவந்த இவர், ஒரு கட்டத்தில் சின்ன பட்ஜெட் படங்களை இயக்க ஆரம்பித்து, அதிலும் சரிவை சந்திக்க ஆரம்பித்தார். அந்தக் காலகட்டத்தில் இயக்குனர் ஆர்.சி.சக்தி கமல் அணுகி, கமல், ரஜினி இருவரையும் இணைத்துவைத்து ஒரு படத்தை இயக்க விரும்புவதாகத் தெரிவித்தார். ஆனால் ரஜினி, கமல் இருவரும் இனி இணைந்து நடிக்கப்போவதில்லை என முன்பே முடிவு செய்திருப்பதைக் காரணம் காட்டி அந்தப் படத்தில் நடிக்க மறுத்தார் கமல்.

மனக்கணக்கு
மனக்கணக்கு

அப்போதுதான் அதற்குப் பதிலாக தான் வேறொரு ஹீரோவுடன் இணைந்து கேமியோ ரோலில் நடிக்கிறேன் என வாக்குக் கொடுத்தார் கமல். அதன்படி 1986-ஆம் ஆண்டு, ஆர்.சி.சக்தி இயக்கியப் படம்தான் ‘மனக்கணக்கு’. விஜயகாந்த், அம்பிகா, ராதா ஆகியோரின் நடிப்பில், கணவன் மனைவி பிரச்சனைகளையும் அதனால் ஏற்படும் உறவுச்சிக்கல்களையும் பேசும்படமாக ‘மனக்கணக்கு’ படத்தை இயக்கியிருப்பார் ஆர்.சி.சக்தி.

கமல் - விஜயகாந்த்
கமல் – விஜயகாந்த்

படத்தின் கதைப்படி விஜயகாந்த் ஒரு சினிமா ஒளிப்பதிவாளர். அவர் பணியாற்றும் ஒரு படத்தின் இயக்குனராக கமல் நடித்திருப்பார். இயக்குநராக கமலும் ஒளிப்பதிவாளராக விஜயகாந்தும் இணைந்து நடித்த பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கும். அதில் பெரும்பாலும் காமெடி காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த காட்சிகளில் கமல் வழக்கம்போல காமெடியில் அசத்தியிருப்பார். அந்தக் காட்சிகளில் எல்லாம் அப்போதைய சினிமா உலகத்தை தன்னுடைய பிரத்யேக ஸ்டைலில் கலாய்க்கவும் செய்திருப்பார் கமல்.

அதைப்போலவே தன் மனைவியைப் பிரிந்து தனிமையில் தவிக்கும் விஜயகாந்தும் நல்லதொரு ஆறுதல் தரும் நண்பனாக கனிவானக் காட்சிகளும் நடித்திருப்பார் கமல். அரிதான இந்தப் படம் யூ-டியூபில் காணக்கிடைக்கிறது. பார்த்திடாதவர்கள் பார்க்கலாம். ஏற்கெனவே பார்த்திருப்பவர்கள் இந்தப் படத்தைப் பற்றிய உங்களதுக் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Also Read – திவ்யா முதல் யாமினி வரை… செல்வராகவன் படத்தின் பெண் கதாபாத்திரங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top