ஆசியாவின் அதிசயன் Jackie Chan… எல்லாருக்கும் டபுள்ஸ் இருக்கு; இவருக்கு இல்ல!

ஜாக்கி சான்

Jackie Chan
Jackie Chan

நம்முடைய சைல்டுஹுட்டையும் இந்த மனிதரையும் பிறிக்கவே முடியாது. நம்மில் முக்கால்வாசி பேர் ஜாக்கி சானின் படங்களை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் டப்பிங் படங்களை பார்த்துதான் வளர்ந்திருப்போம். போலீஸ் ஸ்டோரியில் ஆரம்பித்து ஷேங்காய் நைட்ஸ், மெடாலியன், டக்ஸீடோ, ரஷ் ஹவர் என பல படங்கள் நம்முடைய ஃபேவரைட் லிஸ்டில் இடம்பெற்றிருக்கும். இன்று வரை நம்முடைய கலக்‌ஷன்ஸில் இவரது படம் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. 

ஆக்‌ஷன் – காமெடி

சில நடிகர்கள் ஆக்‌ஷன் செய்வார்கள் சில நடிகர்கள் காமெடி செய்வார்கள். ஆனால் இவர் ஆக்‌ஷன் ப்ளஸ் காமெடி இரண்டினையும் சேர்த்து வித்தை காட்டும் வித்தகன். பஞ்சதந்திரம் படத்தில் நாகேஷ் ‘பாடிண்டே ஆடுவாளோ’ என்று கமலிடம் கேட்பார். அதற்கு கமல் ‘இல்ல மூச்சு வாங்கும்னு அது மட்டும் பண்றது இல்ல’ என்று சொல்வார். ஆனால் இவர் உயிரே போனாலும் பரவாயில்லை என்கிற அளவுக்கு தன்னுடைய உயிரை பணயம் வைத்து ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பார். CZ-12 எனும் படத்தில் நாட்டின் பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்கு ஒரு வீர தீர சாகசத்தை செய்வார். அதே போலத்தான் மக்களை மகிழ்விக்கவும் கலையின் மீதிருக்கும் தீராக் காதலாலும் எந்த எல்லைக்கும் சென்று ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தயாராவார். ஒரு டேபிள் இருந்தால் அதற்கு அடியில் சறுக்குவது, ஒரு ஏணி இருந்தால் அதன் இடுக்கில் நுழைவது, கார் ஓட்டும் இவரிடம் லைசன்ஸ் இல்லாத போது போலீஸ் செக்கிங் செய்தால், அவர் கண் அசரும் நேரத்தில் பக்கத்து சீட்டுக்கு மாறுவது என கிடைக்கும் கேப்களில் எல்லாம் துறு துறு என்று எதையாவது செய்துகொண்டே இருப்பார். 

Jackie Chan
Jackie Chan

குங் ஃபூ காதலன்

தன்னுடைய சிறு வயதில் இருந்தே குங் ஃபூவை தேர்ந்தெடுத்தவர் ஜாக்கி. சிலருக்கு சில விஷயங்களின் மீதுதான் ஆர்வமும், காதலும் ஏற்படும். அப்படி இவர் பள்ளிப்பருவத்தின் போது இவருக்கு படிப்பு என்றாலே அலர்ஜியாக இருந்திருக்கிறது. இதனால் பலரும் இவரை வசை பாடியுள்ளனர். அடியும் கூட வாங்கியிருக்கிறார். அந்த சமயம் தன்னுள் இருக்கும் கோபத்தை எந்த கட்டத்திலும் வெளிக்காடாமல் முழுக்க குங் ஃபூவின் மீது கவனம் செலுத்தியிருக்கிறார். பள்ளிப்பருவத்தில் இவருடன் படிக்கும் சக மாணவர்கள் இவரை நிறைய bully செய்திருக்கிறார்கள். எந்த கட்டத்திலும் தன்னிலையை இழக்காமல் தன்னுடைய இலக்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்திருக்கிறார் ஜாக்கி. பின் சினிமாதான் நம்முடைய வாழ்க்கை என்று தெரிந்த ஜாக்கி ப்ரூஸ் லீ நடிக்கும் படத்தில் ஸ்டன்ட் மேனாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். பின் இதே ஜாக்கி சான் ப்ரூஸ் லீயின் மறைவுக்கு பிறகு அடுத்த ப்ரூஸ் லீ என்ற பெயரை வாங்கினார். ஒருவரை மாதிரி ஆகவேண்டும் என்று யார் வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் ஜாக்கியை போல் விடா முயற்சியோடு போராடினால்தான் அந்த இடத்தை அடைய முடியும்.

சண்டை செய்பவர்

Jackie Chan
Jackie Chan

வறுமையின் காரணத்தால் இவரை இவர் அப்பா விற்க கூட முற்பட்டிருக்கிறார். இப்போது யோசித்து பாருங்கள் இவரது உயரம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று. அமெரிக்க ஆதிக்கத்தின் நடுவே ஒருவர் வளர்ந்து எழுவது அவ்வளவு லேசுபட்ட காரணம் அல்ல. இப்போது ஓரளவு அது மாறியிருந்தாலும் முன்னொரு காலத்தில் அது எவ்வளவு பெரிய விஷயம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ப்ரூஸ் லீயின் மாஸ்டரான இப் மேனின் கதையை கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலே தெரியும். குங் ஃபூ பெரிதா பாக்ஸிங் பெரிதா என்று ஒரு யுத்தமா அந்த கால கட்டத்தில் எழுந்திருக்கிறது. அதற்கு மத்தியில் குங் ஃபூவை உலகம் பரப்ப வேண்டும் என்று தன்னுடைய பாணியில் போராடிய உன்னத கலைஞர்தான் ப்ரூஸ் லீ. அவரை இன்ஸ்பிரேஷனாக நினைக்கும் ஜாக்கியும் அவ்வளவு லேசானவர் அல்ல. ஹாலிவுட்டில் மற்ற நாட்டு நடிகன் உள் நுழைவதே கடினமாக இருந்த காலகட்டம். அதிலும் போராடி ஹாலிவுட்டின் தவிர்க்க முடியாத நாயகன் ஆனார் நம் ஜாக்கி. இன்னொரு வேடிக்கையான விஷயம் இவர் ஆங்கில பேச நிறையவே சிரமப்பட்டார். ‘இது என்ன லாங்குவேஜ் எனக்கு பிடிக்கவே இல்ல’ என்று அமெரிக்கருக்கு நடுவிலே கூட சொல்வார். ரஷ் ஹவர் ப்ளூப்பர்ஸ் பார்த்தவர்களுக்கு தெரியும். 

சாவை சட்டைப்பையில் வைத்து திரிபவன்

Jackie Chan
Jackie Chan

இப்ப உங்களுக்கு சில நடிகர்களும் அவர்களோட டபுளும் ஸ்கீன்ல ஸ்லைடாகும். இப்படி அனைவரும் தங்களுக்கான ஸ்டன்ட் டபுள்ஸை வைத்து கொள்வார்கள். ஆனால் இவருக்கு இணை இவரேதான் என்கிற அளவில்தான் ஜாக்கி மற்ற ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு மத்தியில் உலகையே வியக்க வைக்கும் அளவிற்கு மின்னினார். இவர் உடம்பில் அடி படாத ஏரியாவே இல்லை எனலாம். இவரது ஒவ்வொரு படம் முடிந்த பின்னரும் இவர் ஒரு காட்சிக்கும் தயாராகும் விதம் ஒளிபரப்பாகும். அதைப் பார்த்தாலே தெரியும். ஆனால் இன்னும் ஒரு படி மேலே போன ஜாக்கி Armour of god படத்தின் ஸ்டன்ட் காட்சியின் போது 40 அடியில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த அடி வாங்கினார். இவரின் skull bone மூளையில் பாதிப்பை ஏற்படுத்தின் காதில் ரத்தம் வர வைத்தது. சாவுக்கு அருகில் சென்றுவிட்டு வந்த ஜாக்கி அதை வென்றுவிட்டு வந்தார். இதனால் அவரது தலையில் ஒரு சின்ன ஓட்டையே ஏற்பட்டு அதுக்கு தகுந்த மாதிரியான ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டது. 

நம்முடைய ஜாக்கி சான் நடித்த படங்களில் உங்களுடைய ஃபேவரைட்டை கீழே கமென்ட்ல சொல்லுங்க!

Also Read – இன்டர்நேஷனல் லெவல் ட்ரோலில் பீஸ்ட் விஜய்… என்ன காரணம்?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top