ரிஷப ராசி

New Year Rasi Palan 2022: ரிஷப ராசி புத்தாண்டு ராசிபலன்!

ரிஷப ராசி நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு உங்களுக்கு நன்மைகளை அள்ளித்தரும் ஆண்டாக அமையும். உங்களது தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் நல்ல தீர்வு கிட்டும்.

2022-ம் ஆண்டைப் பொறுத்தவரை ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும். உங்களது ராசியில் செவ்வாய் இடம்பெயர்வதால் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவரும்.

ரிஷப ராசி – 2022 ஆண்டு ராசிபலன்

ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். அன்பு நிறைந்தவர்களாக இருப்பீர்கள். குடும்பம், உறவினர்களுடன் நல்ல நெருக்கத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசியில் புதன் வக்ரநிலையில் இருப்பதால், பயண தாமதங்கள், பொருட்கள் இழப்பு, கவலைகள், பீதி ஏற்பட வாய்ப்புண்டு. கடந்த காலங்களில் சந்தித்த மனிதர்களை எதிர்பாராதவிதமாக மீண்டும் சந்திக்க நேரிடலாம். கடந்த காலம் பற்றிய சிந்தனை உங்களுக்கு அதிகமாக இருக்கலாம். ஜூன் மாத சுக்கிரப் பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் வாழ்வில் செல்வ செழிப்பு ஏற்படலாம். அக்டோபரில் குரு பகவான் உங்களுக்கு சகல செல்வங்களையும் அருள்வார்.

ரிஷப ராசி
ரிஷப ராசி

கல்வி

கல்வியைப் பொறுத்தவரை 2022 ரிஷப ராசி அன்பர்களுக்கு முக்கியமானதொரு ஆண்டாக இருக்கும். உயர் படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரலாம். மாணவர்கள், தங்கள் தொட்டவற்றில் எல்லாம் வெற்றி பெறுவர். கடினமானதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் தேர்வுகளில் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு வெற்றி என்ற சேதி வந்து சேரும். மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும் காலமாக இது இருக்கும்.

Also Read:

எந்த ராசிக்காரர்கள் எந்த கோவில்களில் வழிபடவேண்டும்?

குடும்பம்

ரிஷப ராசி நண்பர்களுக்கு இந்த ஆண்டு குடும்ப வாழ்க்கை திருப்திகரமானதாக அமையும். வாழ்க்கைத் துணையுடன் அன்பாக, அனுசரித்துப் போவீர்கள். ஒரு சில நேரங்களில் உங்களின் விளையாட்டுத் தனமான போக்கு, உங்களின் வாழ்க்கைத் துணையுடனான தூரத்தை அதிகரிக்கலாம். இதைக் கவனமாகக் கையாளுங்கள். குடும்ப சூழலால் நீண்ட தூர பயணங்கள் செல்ல வேண்டி வரலாம். குடும்ப உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். ஏப்ரல் மாத குரு பெயர்ச்சிக்குப் பிறகு புதுமணத் தம்பதிகளுக்கு நல்ல சேதி வரக் கூடும். குழந்தைகள் உங்களுக்குப் பேரும் புகழும் தேடித் தருவர். அவர்களால் பெருமையடைவீர்கள். திருமண வயதில் இருக்கும் குழந்தைகளுக்குத் திருமணம் கைகூடும். குழப்பங்கள், சந்தேகங்கள் நீங்கி தெளிவடைவீர்கள்.

பொருளாதாரம் – தொழில்

ரிஷப ராசி
ரிஷப ராசி

உங்கள் ராசியின் 11-வது இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால், வேலை – தொழில் – வணிகம் சார்ந்து நல்ல விஷயங்கள் இந்த ஆண்டு உங்களைத் தேடி வரும். பணிபுரியும் இடத்தில் நல்ல பெயரைச் சம்பாதிப்பதோடு, பணி உயர்வு, ஊதிய உயர்வும் உங்களுக்குக் கிட்டும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வியாபாரரீதியாக நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உங்களுக்குக் கிட்டும். முந்தைய ஆண்டை விட லாபம் அதிகரிக்கும். பார்க்கும், கேட்கும் எல்லா விஷயங்களையும் நம்பாமல், தீர ஆய்வு செய்து வியாபார விஷயங்கள் முடிவெடுங்கள். புதிய முதலீடுகள் செய்வீர்கள்; அதனால் கிடைக்கும் ஆதாயமும் கணிசமாக உயரும். ஆனால், முதலீடுகள் விஷயத்தில் உரியவர்களின் ஆலோசனையோடு நிதானமாக முடிவெடுப்பது புத்திசாலித்தனம்.

இந்த ஆண்டு உங்கள் ராசியின் ஒன்பதாவது இடத்தில் சனி பகவான் ஆட்சிபுரிவதால், நிச்சயம் செழிப்பைத் தருவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதனால், புதிய நிலம், வீடு, வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளை வாங்க நல்ல சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களின் சுப காரியங்களுக்கு அதிக செலவுகள் நேரிடலாம்.

Also Read – New Year Rasi Palan 2022: மேஷ ராசிக்கான புத்தாண்டு ராசிபலன்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top