பியூஷ் கோயல்

பா.ஜ.க மாநிலங்களவைத் தலைவரான பியூஷ் கோயல்… பின்னணி என்ன?

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்று பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்றதில் இருந்து ஒன்றிய அமைச்சரவையில் எந்தவித மாற்றமோ அல்லது விரிவாக்கமோ செய்யப்படவில்லை. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்கள் பதவி விலகினர். அதுமட்டுமல்லாது, புதிதாக சுமார் 43 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். சில அமைச்சர்களுக்கு பொறுப்புகள் மாற்றிக் கொடுக்கப்பட்டன. சிலருக்கு கட்சி மற்றும் பிற மாநிலங்களில் புதிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. இன்னும் சில ஆண்டுகளில் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த மாநிலங்களில் பா.ஜ.க-வை பலப்படுத்தும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் வெளியாகின. 

அந்த வகையில், ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தவார் சந்த் கெலாட், கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். முன்னதாக தவார் சந்த் கெலாட் பா.ஜ.க மாநிலங்களவை குழுத் தலைவராக இருந்தார். அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து அவரது பதவி காலியானது. இந்த இடத்துக்கு தற்போது ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளது அவரது கட்சியினர் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் பா.ஜ.க தலைமை வெளியிட்டுள்ளது. பா.ஜ.க மாநிலங்களவைத் துணைத் தலைவராக பியூஷ் கோயல் பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்னதாக பியூஷ் கோயல் வர்த்தகம், தொழில்துறை மற்றும் கூடுதலாக ரயில்வே துறையை கவனித்து வந்தார். அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பின்னர் இவரிடம் இருந்து ரயில்வே துறை பொறுப்பானது அஷ்வினி வைஷ்ணவிடம் ஒப்படைக்கப்பட்டது. பியூஷ் கோயலுக்கு கூடுதலாக ஜவுளித்துறை ஒதுக்கப்பட்டது.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

பிரதமர் மோடியின் மிகவும் நெருங்கிய அமைச்சர்களில் ஒருவராக பியூஷ் கோயல் அறியப்படுகிறார். நிதித்துறை பொறுப்பில் இருந்து அருண் ஜெட்லி விலகியபோது நிதித்துறையானது பியூஷ் கோயலுக்கு வழங்கப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப் பொறுப்பு அவருக்கு வழங்கப்படாமல் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கேபினட் கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியிலும் பியூஷ் கோயல் பெயர் இடம்பெறவில்லை. இதனால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில், தற்போது அவருக்கு மாநிலங்களவைக் குழு தலைவர் பதவி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் பியூஷ் கோயல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். பல்வேறு துறைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடரானது தொடங்கவுள்ள நிலையில் அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத்தொடரானது தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மழைக்கால கூட்டத் தொடரானது வரும் ஜூலை மாதம் 19-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. புதிய பொறுப்பை ஏற்கவுள்ள பியூஷ் கோயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகிகள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாநிலங்களவையில் பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பியூஷ் கோயல் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read : ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன்.. கடந்து வந்த பாதை!

45 thoughts on “பா.ஜ.க மாநிலங்களவைத் தலைவரான பியூஷ் கோயல்… பின்னணி என்ன?”

  1. canadian pharmacy ltd [url=https://canadapharmast.com/#]canadian pharmacy oxycodone[/url] canadian pharmacy mall

  2. mexico pharmacies prescription drugs [url=http://foruspharma.com/#]mexican pharmaceuticals online[/url] п»їbest mexican online pharmacies

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top