சத்யப்ரியா - தேவயானி

`இட்லி உப்புமா சீக்ரெட்’ – `சூர்யவம்சம்’ சுவாரஸ்யம் பகிர்ந்த சத்யப்ரியா

மிரட்டல் வில்லி, சாந்தமான தாய், கொடுமைக்கார சித்தி என எந்த ரோல் கொடுத்தாலும் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர் சத்யப்ரியா. கண்ணாலேயே மிரட்டி பாதி வில்லத்தனத்தைக் காட்டிவிடும் சத்யப்ரியாவுக்கு Golden Carpet விருது கொடுத்து கௌரவித்தது Tamilnadu Now.

திரை அனுபவம் – 48 வருடங்கள்

ஹிட் ஹிஸ்டரி – அதிரடி பாட்ஷாவை அமைதி மாணிக்கமாக்கிய அன்புத் தாய்.

ஆந்திராவில் பிறந்த சத்யப்ரியாவை `மஞ்சள் முகமே வருக’ என்று தமிழ் சினிமா வரவேற்றது 50 ஆண்டுகளுக்கு முன்… சிவந்து விரியும் கண்களிலும் கோபம் தெறிக்கும் குரலிலும் வில்லத்தனத்தைக் கொண்டுவந்து, செவாலியே சிவாஜி, ரஜினி என ஜாம்பவான்களையே மிரட்டி, அதட்டியவர்.

சத்யப்ரியா - தேவயானி
சத்யப்ரியா – தேவயானி

கொடுமைக்கார சித்தி, அதட்டும் அம்மா, ஆட்டிவைக்கும் மாமியார், மிரட்டல் வில்லி என எந்த கதாபாத்திரத்திலும் பக்கா ஸ்கெட்ச் போட்டு கலங்கடிப்பது சத்யப்ரியாவின் சிறப்பம்சம். விரைவில் சினிமாவில் Golden Jubilee தொடவிருக்கும் சத்யப்ரியாவுக்குத் தங்கக் கம்பளம் விரித்து வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறது Tamilnadu Now Golden Carpet Awards. சத்யப்ரியாவுக்கு Tamilnadu Now சார்பாக best character artist விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Also Read – `என்னை ரொம்ப எமோஷனலாக்கிட்டீங்க!’ – தியாகராஜன் ஷேரிங்ஸ்

சத்யப்ரியாவுக்கான விருதை அவருடன் சூப்பர் ஹிட் காம்போக்கள் கொடுத்த தேவயானி அளித்து கௌரவப்படுத்தினார். சத்யப்ரியா பற்றியும் அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்தும் நடிகை தேவயானி நிறையவே பகிர்ந்துகொண்டார். குறிப்பாக சூப்பர் ஹிட் கொடுத்த காம்போவான நாங்க ஒரே மாதிரி மஞ்சள் நிறப் புடவையில் வந்திருக்கிறோம் என்று சிலாகித்தார். அதன்பிறகு நெகிழ்ச்சியோடு மைக் பிடித்த சத்யப்ரியா, `இந்த விருதை கையில் ஏந்தியிருப்பது ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த ஆண்டுதான் அடியெடுத்து வைத்திருக்கும் Tamilnadu Now, ஆரம்பத்திலேயே இவ்வளவு பெரிய விருது விழாவை நடத்தி எங்களைப் போன்ற கேரக்டர் ஆர்டிஸ்டுகளை கௌரவித்து, எங்களை எல்லாம் சந்தோஷப்பட வைத்திருப்பதற்கு மிகவும் நன்றி. வரும் ஆண்டுகளில் நிறைய நிறைய விழாக்கள் நடத்தி, எங்களைப் போன்ற நிறைய கலைஞர்களை மகிழ்விக்க வேண்டும்’ என்று வாழ்த்தினார்.

சத்யப்ரியா - தேவயானி
சத்யப்ரியா – தேவயானி

சத்யப்ரியாவும் தேவயானியும் பேசிக்கொண்டிருந்த போதே, ஆன்லைன் ஆர்டரில் அவர்களுக்கு ஸ்பெஷல் டெலிவரி வந்து சேர்ந்தது. அந்த டெலிவரியில் வந்திருந்தது இட்லி உப்புமா. சூர்யவம்சம் படம் எந்த அளவுக்கு ஃபேமஸோ, அந்த அளவுக்கு அந்தப் படத்தில் வரும் இட்லி உப்புமாவும் ஃபேமஸ். சத்யப்ரியா – தேவயானி காம்போ இட்லி உப்புமா பற்றி பேசியதோடு, இயக்குநர் விக்ரமனுக்கும் மேடையிலேயே நன்றி சொன்னார்கள். சூர்யவம்சம் தொடங்கி கோலங்கள் தொடரில் 7 ஆண்டுகள் ஒன்றாகப் பயணித்த அனுபவம், சத்யப்ரியா தனக்குச் சொல்லிக் கொடுத்தவை என பல்வேறு விஷயங்களை நடிகை தேவயானி பகிர்ந்துகொண்டார். தேவயானி பேசுகையில்,`சத்யப்ரியா அம்மா ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணக் கூடியவங்க. பணத்தை சேமிக்குறதுல தொடங்கி நேரம் தவறாமைனு பல விஷயங்கள் அவங்ககிட்ட இருந்து நான் கத்துக்கிட்டேன். எப்பவுமே நமக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கவங்க அவங்க…’னு தொடங்கிப் பல்வேறு அனுபவங்களையும் Tamilnadu Now Golden Carpet விருது விழா மேடையில் பகிர்ந்துக்கிட்டாங்க. அந்த சுவாரஸ்ய தகவல்களை மிஸ் பண்ணாம பார்க்க, நம்ம Tamilnadu Now யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கும் Golden Carpet Awards ஷோவை முழுசா பார்க்க மறக்காதீங்க… லிங்க கீழே கொடுத்திருக்கோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top