தமிழ் சினிமால ரொம்பவே போல்டான கேரக்டர்களை சில இயக்குநர்களோட படங்கள்லதான் பார்க்க முடியும். அதுல முக்கியமான இயக்குநர் பா.ரஞ்சித். ‘அட்டக்கத்தி’ படத்துல இருந்து ‘நட்சத்திரம் நகர்கிறது’ வரைக்கும் அவர் படங்கள்ல வந்த பெண் கேரக்டர்கள் எல்லாமே ரொம்ப தனித்துவமானது. அந்த கேரக்டர்களுக்கு அவர் செலக்ட் பண்ற பெண்களும் ‘எங்க இருந்துதான் இப்படியான பெண்களை புடிக்கிறாரோ’னுதான் சொல்ல வைப்பாங்க. அந்த வகையில், இன்னைக்கு எல்லாரும் வியந்து பாராட்டும் கேரக்டர் ரெனேதான். அந்த கேரக்டர்ல துஷாரா விஜயன் பின்னி பிடலெடுத்துருப்பாங்க. இந்த வீடியோல துஷாரா விஜயனைப் பத்திதான் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

திண்டுக்கல் மாவட்டத்துல சாணார்பட்டி ஊருக்கு பக்கத்துல கன்னியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவங்கதான் துஷாரா. துஷாராவோட அப்பா விஜயன் திண்டுக்கல் மாவட்ட தி.மு.க பிரமுகர்களில் ஒருவர். எந்த அளவுக்கு பெரிய ஆளுனா, நீங்க துஷாராவைப் பத்தி தேடுனீங்கனா, அவங்க அப்பாவைப் பத்திதான் நிறைய விஷயங்கள் வரும். அவ்ளோ பெரிய ஆள். சரி, நாம துஷாரா விஷயத்துக்கு வருவோம். சின்ன வயசுலயே துஷாராவுக்கு நடிப்பு மேல மிகப்பெரிய ஆர்வம் வந்துருச்சுனு சொல்லலாம். அந்த ஆர்வம் எப்படினா, நல்லா படிச்சா ஸ்கூல்ல நடக்குற கல்சுரல்ஸ்ல எல்லாம் கலந்துக்கலாம்னு நினைச்சு நல்லா படிப்பாங்களாம். 12-வது வரைக்கும் நல்லா படிக்கிறதைப் பார்த்துட்டு குடும்பத்துல உள்ளவங்க துஷாராவை இஞ்சினீயரிங் சேர்த்து விட்ருக்காங்க.
துஷாராவுக்கு நடிப்பு மேலமட்டும்தான் ஆசை. வீட்டுல சொன்ன அடி விழும். ஏன்னா, அவங்க ரொம்பவே கன்சர்வேடிவான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவங்க. பயந்து போய் வெளிய சொல்லாமலேயே இருந்துருக்காங்க. ஆனால், இஞ்சினீயரிங்ல அவங்களால கவனத்தை செலுத்த முடியலை. அந்த எம் 1, எம் 2 எல்லாம் அவங்களை ரொம்பவே டார்ச்சர் பண்ணியிருக்கு. கடைசில ஒரு வழியா வீட்டுல ‘எனக்கு இந்த இஞ்சினீயரிங்லாம் செட் ஆகாது’னு சொல்லியிருக்காங்க. துஷாராவோட அம்மா அவங்களுக்கு ரொம்பவே சப்போர்ட்டிவா இருப்பாங்க. அதனால், ‘சரி, நீ போக வேணாம்’னு முடிவு பண்ணியிருக்காங்க. இருந்தாலும் நடிப்பு மேல ஆர்வம்னுலாம் சொல்லல. மாடலிங் பண்ணப்போறேன்னு ஒரு பிட்டைப் போட்டு ஃபேஷன் டிசைனிங் படிக்க சேர்ந்துருக்காங்க.
ஃபேஷன் டிசைனிங் படிக்கும்போதே மாடலிங் பண்ண ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க. நிறைய கமர்ஷியல் விளம்பரங்கள்ல துஷாரா நடிச்சிருக்காங்க. ஷார்ட் ஃபிலிம்ஸ்ல நடிச்சிருக்காங்க. 2017-ல மிஸ் ஃபேஸ் ஆஃப் சென்னை போட்டில துஷாரா கலந்துகிட்டாங்க. அதுல டைட்டிலும் வின் பண்ணாங்க. அப்புறம், மிஸ் சவுத் இந்தியா போட்டில பார்ட்டிசிபேட் பண்ணாங்க. அதுல ரெண்டாவது இடத்தைப் பிடிச்சாங்க. என்னதான் பண்ணாலும் நடிகையாகணும்ன்ற ஆசை அவங்களுக்குள்ள இருந்துட்டே இருந்துச்சு. ஆனால், அதுக்காக இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்குலாம் அவங்க ஆசைப்படலை. துஷாராவுக்கு இந்த யூனிவர்ஸ் மேல ஒரு நம்பிக்கை இருக்கு. என்னனா, “நமக்கு ஒரு விஷயம் புடிச்சிருக்கு. அதை பத்தி எப்பவும் நினைக்கிறோம். உழைக்கிறோம். அப்டினா, அந்த விஷயம் கண்டிப்பா நம்மகிட்ட வரும்” அப்டினு. அதை துஷாரா அதிகமா நம்பினாங்க. அவங்க நம்பிக்கை வீண்போகலை.
இன்ஸ்டாகிராம்ல துஷாராவோட ஃபோட்டோவைப் பார்த்துட்டு ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தோட டைரக்டர் சந்துரு துஷாராவுக்கு வாய்ப்பு கொடுத்துருக்காரு. ஆனால், அந்தப் படம் பெருசா துஷாராவுக்கு கிளிக் ஆகலை. அதுக்கப்புறம் துஷாராவோட ஃபோட்டோவை பா.ரஞ்சித் சோஷியல் மீடியால பார்த்துட்டு மாரியம்மா கேரக்டருக்கு ஆடிஷனுக்கு வர சொல்லியிருக்காரு. ஆடிஷனுக்கு வர சொன்னதுல செம இன்ட்ரஸ்டிங்கான சம்பவம் ஒண்ணு நடந்துருக்கு. சார்பட்ட பரம்பரை படத்தோட காஸ்டிங் டைரக்டர் துஷாராவுக்கு ஒருநாள் ஃபோன் பண்ணி “நாளைக்கு ரஞ்சித் சார் ஆஃபிஸ்க்கு வந்துருங்க”னு சொல்லியிருக்காரு. உடனே துஷாரா, “முதல்ல யாரு நீங்க? எதுக்கு இப்படிலாம் பேசுறீங்க?”னு கேட்டுட்டு ஃபோனை கட் பண்ணியிருக்காங்க. அப்புறம் வேறவேற நம்பர்ல இருந்து ஃபோன் பண்ணிட்டே இருந்துருக்காங்க.

சார்பட்டா பரம்பரை படத்துக்கு ஆடிஷன் போகாததால, அடுத்த நாள் ஃபோன் பண்ணி, “என்னம்மா உனக்கு அவ்ளோ திமிரா? ஆடிஷன் கூப்பிட்டா வரமாட்டியா?”னு கேட்ருக்காங்க. அப்புறம் இவங்க சைட்ல இருந்து ஃபோன் பண்ணி விசாரிச்சிருக்காங்க. உண்மைனு தெரிஞ்சதும் ஆடிஷன் கிளம்பி போய்ருக்காங்க. என்ன நடிக்க சொன்னாலும் நடிச்சுக் காமிச்சிடலாம்னு ஒரு கான்ஃபிடன்ட் துஷாராவுக்கு இருந்துருக்கு. ரஞ்சித் முன்னாடி நடிச்சு காமிச்சிருக்காங்க. முடிஞ்சதும் கத்துனு ரஞ்சித் சொல்லியிருக்காரு. ஏன், எதுக்குனு கேக்காமல் துஷாராவும் கத்தியிருக்காங்க். டயலாக்லாம் பேசுனதவிட அவங்க கத்துனது ரஞ்சித்துக்கு ரொம்ப புடிச்சதா துஷாரா இன்டர்வியூலயெல்லாம் சொல்லியிருக்காங்க.
மாரியம்மா கேரக்டர் ரொம்பவே தனித்துவமான கேரக்டர்னு சொல்லலாம். புருஷன்கூட நிறைய நேரங்கள்ல இல்லைனு நினைச்சு ஏங்குறதுல இருந்து கிளைமாக்ஸ்ல அடி கபிலானு கத்துறது வரைக்கும் ஒவ்வொரு சீனையும் அவ்வளவு பெர்ஃபெக்டா கேட்ச் பண்ணி வெளிப்படுத்தியிருப்பாங்க. நிறைய பெண்கள் தங்களை மாரியம்மாவோட ஈஸியா கனெக்ட் பண்ணிக்க முடியுது. அந்த கேரக்டர் எழுதுன விதமாக இருக்கட்டும், அதை உள்வாங்கி நடிச்ச விதமா இருக்கட்டும் ரெண்டுமே அந்த கனெக்ட்டுக்கு முக்கியமான காரணம். காதல் கலந்த மிரட்டல் சீன்லயெல்லாம், சான்ஸே இல்லை மிரட்டியிருப்பாங்க. மாரியம்மாவை கேரக்டர்னு சொல்றதைவிட ‘எமோஷன்’னு சொன்னா கரெக்டா இருக்கும்னு நினைக்கிறேன். அதனால, அந்த கேரக்டரை தமிழ் சினிமா அவ்வளவு சீக்கிரம் மறக்காது. இந்த கேரக்டர்ல நடிக்கிறதுக்காக வடசென்னை மக்கள்கூட நிறைய நேரத்தை துஷாரா செலவிட்ருக்காங்க. அவங்க கல்சரை புரிஞ்சுக்க ட்ரை பண்ணியிருக்காங்க. அதுனாலதான், அந்த கேரக்டர் அவ்வளவு அழகா நமக்கு தெரியுது.
விஜயன், அதாங்க துஷாராவோட அப்பா சார்பட்டா பரம்பரை படம் பார்த்துட்டு வெளிய வந்து ரஞ்சித்கிட்ட, “என் பொண்ணு இவ்வளவு நல்லா நடிப்பானு தெரிஞ்சிருந்தா, முதல்ல இருந்தே அவளுக்கு சப்போர்ட் பண்ணியிருப்பேன்”னு கொஞ்சம் கண்கலங்கி சொன்னாராம். துஷாரா மிகப்பெரிய பாராட்டா இன்னைக்கு வரைக்கும் நினைக்கிறது இதைதான். துஷாராவோட வாழ்க்கை பயணத்தை மாரியம்மாவுக்கு முன், மாரியம்மாவுக்கு பின் அப்டினு பிரிக்கலாம். நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு துஷாராவோட நடிப்பும் மிகப்பெரிய பேக்போன்னு சொல்லலாம். துஷாரா, ரஞ்சித்கிட்ட, “என்னை ஏன் ரெனே கேரக்டருக்கு செலக்ட் பண்ணிங்க?”னு கேள்வி கேட்ருக்காங்க. அதுக்கு ரஞ்சித், “எல்லாம் உன்னோட மாரியம்மா கேரக்டரை பார்த்துதான்”னு பதில் சொல்லியிருக்காரு.

ரெனே கேரக்டர் கெத்தான கேரக்டர்னு சொல்லலாம். எந்த அளவுக்கு கெத்துனா படத்துல அர்ஜூன்கூட டிரெஸ்ஸிங் சென்ஸ் பத்தி ஒரு கான்வர்சேஷன் வரும். அதுல அர்ஜூன் சொல்லுவாரு “நீங்க எப்படி வேணும்னாலும் டிரெஸ் பண்ணிக்கோங்க. நான் எதுவும் நினைச்சிக்க மாட்டேன்” அப்டினு. அதுக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் ரெனே, “ஹெலோ நீங்க என்ன வேணும்னாலும் நினைச்சிக்கோங்க. அது உங்களோட பிரச்னை”னு சொல்லுவாங்க. அதேமாதிரி கான்ஃபிடன்டா பேசும்போதுலாம் சொடக்கு போட்டு செமயா மாஸா பேசுவாங்க. இதுவரைக்கும் தமிழ் சினிமால அம்பேத்கரிஸ்டா ஒரு பொண்ணு கேரக்டரை காமிச்சதா எனக்கு தெரியலை, அதேமாதிரி பீஃப் சாப்பிடுற ஒரு பொண்ணையும் காமிச்சதில்லை, இந்த சீன்லலாம் கெத்தா நடிச்சிருப்பாங்க. டைரக்டர்ஸ் கொடுக்குறதை அப்படியே நடிச்சு கொடுத்துட்டு போறதுனு இல்லாமல், அதை அவ்வளவு இண்டன்ஸா நடிச்சிருப்பாங்க.
நட்சத்திரம் நகர்கிறது படத்துல வர்ற ரெனே கேரக்டர்கிட்ட இருந்து நிறைய விஷயங்களை எல்லாருமே கத்துக்கலாம். துஷாராவும் நிறைய விஷயங்களை கத்துக்கிட்டாங்கனு சொல்லலாம். துஷாராவுக்கும் சமூக பிரச்னைகள் சம்பந்தமான வியூஸ் இருக்கு. ஒரு நடிகைக்கு இந்த வியூ இருக்குறது ரொம்ப முக்கியமானதுனு தோணும். அப்போதான், அவங்களால ரொம்பவே வேல்யூவான ஸ்கிரிப்ட்ஸ செலக்ட் பண்ண முடியும். இந்தப் படத்துல வெறும் காதல் பத்தி மட்டும் சொல்லல, காஸ்ட் பொலிடிக்ஸ் பத்தியும் பேசியிருக்காங்க. காதல் சம்பந்தமான இந்த படத்துல நடிச்ச துஷாராகிட்ட காதல்னா என்னனு கேட்டா, “காதல் எந்தவொரு வரையறைக்குள்ளேயும் அடங்காது. காதல் ஒரு ஹேப்பினஸ கொடுக்கும். அவ்வளவுதான். அந்த ஃபீலிங் இருந்தா அது காதல். எதாவது ஒரு விஷயத்துக்குள்ள காதலை அடக்கிட்டா இவ்வளவு தானா காதல்னு தோணும்”னு சொல்லுவாங்க. செமல்ல..!
‘மாட்டுக்கறி சாப்பிட்டா என்ன தப்பு?, பொண்ணும் பொண்ணும், ஆணும் ஆணும் ஏன் லவ் பண்ணக்கூடாது’ அப்டினு ஸ்கிரீன்ல மட்டுமில்ல, ஆஃப் ஸ்கிரீன்லயும் நிறைய பேசுவாங்க. இதெல்லாம் பேச ஒரு போல்ட்னெஸ் வேணும்ல. இந்த விஷயங்களாலதான் துஷாரா செம கெத்துனுதான் தோணும்.





You really make iit seedm so easy with your presentation but I find this matter to be actually something which I think I would never understand.
It seems too complex and very broad for me.
I’m looking forward for your next post, I wil try to get the hang of it! https://Yv6bg.Mssg.me/
iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp
Với giao diện mượt mà và ưu đãi hấp dẫn, MM88 là lựa chọn lý tưởng cho các tín đồ giải trí trực tuyến.
Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.