கேட்ஜெட்டுகளில் உலகம் மிகப்பெரியது. கேட்ஜெட் உலகில் இருக்கும் பயனுள்ள அதே சமயத்தில் கியூட்டான சில கேட்ஜெட்டுகளில் பட்டியல் இங்கே…
மிகவும் அழகானவை இந்த `cat ear headphones.’ இந்த ஹெட்ஃபோனில் ஒளிரும் எல்.இ.டி லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. உங்களது மனநிலைக்கு ஏற்றவாறு இந்த லைட்டை ஆன் மற்றும் ஆஃப் செய்து கொள்ளலாம். ப்ளூடூத்தின் வழியாக ஐ போன், ஐ பாட், லேப் டாப், ஸ்மார்போன் மற்றும் டிவி போன்றவற்றில் இணைத்து பயன்படுத்தலாம்.
டி.வி வடிவில் இருக்கும் இந்த `TV-shaped Bluetooth speaker’ பலரையும் கவரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நைட் லேம்ப் ஆப்ஷன், மைக்ரோபோன், 360 டிகிடி ஆடியோ உட்பட பல்வேறு ஃபெஸிலிட்டிகள் இந்த ஸ்பீக்கரில் உள்ளன.
கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கும் இந்த `mini desktop sweeper’ உங்களுடைய மேசையில் கிடைக்கும் சிறிய தேவையில்லாத குப்பைகளையும் அகற்ற உதவும்.
புத்தக வடிவில் இருக்கும் இந்த லேம்பை தேவைக்கு ஏற்றவாறு 360 டிகிரியிலும் ஃபோல்ட் செய்து பயன்படுத்தலாம். இதன் அமைப்பே உங்களை எளிதில் கவரும்.
சிறிய மடக்கிய குடை வடிவில் இருக்கும் இந்த வாக்யூம் கிளீனர் கனமற்றது. பெட் முதல் கார் வரை பல இடங்களிலும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். அதிகமான நேரம் சார்ஜ் இருக்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வானவில் நிறங்களில் லைட் எரியும் இந்த கீ போர்டு அதிகமாக கேம் விளையாட பயன்படுத்தலாம். இதன் அமைப்பு உங்களை எளிதில் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோடை காலங்களில் அதிகம் பயன்படும் ஃபேன் இது. ரீ சார்ஜ் செய்து நாம் செல்லும் இடங்களுக்கு இதனை எடுத்து செல்ல முடியும். மிகவும் கியூட்டான ஃபேன் இது.
மற்றொரு கியூட்டான லேம்ப்களில் இதுவும் ஒன்று. இரவு நேரங்களில் இருட்டில் இந்த லேம்பை பயன்படுத்தினால் நிலவையே தொட்ட உணர்வை இந்த லேம்ப் ஏற்படுத்தும். ட்ரை பண்ணி பாருங்க.
புகைப்பட கலைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானது இந்த கேமரா. சாதாரணமான கேமராவாக மட்டும் இல்லாமல் கண்ணைக் கவரும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது.
Also Read : ஃபேஸ்புக்கை விட இன்ஸ்டாகிராம் ஏன் பெஸ்ட்… 4 காரணங்கள்!