இயக்குநர் கௌதம் மேனன் படங்கள் என்றாலே சில எலிமெண்டுகள் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அப்படி அவர் படங்களில் தவறாமல் இடம்பிடிக்கும் சில விஷயங்கள்… தமிழ் சினிமாவில் அவர் நார்மலைஸ் செய்த சில முக்கியமான அம்சங்கள் பத்திதான் நாம இப்போ பார்க்கப் போறோம்..!
கண்டதும் காதல்
மின்னலில் ஆடும் ரீனா, மாடி வீட்டு ஜெஸ்ஸி, எதிர் சீட்டு மேக்னா, தங்கச்சி ஃப்ரெண்டு லீலா, அட கல்யாணத்துல கூட்டத்துல சுத்திட்டு இருக்குற கயல் இப்படி யாரா இருந்தாலும் ஹீரோவுக்கு பார்த்ததுமே லவ் வந்துடும். ட்ரெயின்ல டிக்கெட் புக் பண்றப்போவே டாக்டர், முதியோர்னு செலக்ட் பண்ணா ஸ்பெஷல் பெர்த் குடுக்குற மாதிரி GVM ஹீரோனு செலக்ட் பண்ணா அழகான பொண்ணுக்கு எதிர் சீட்டு புக் ஆகுற மாதிரி IRCTC-லயே ஆப்சன் இருக்கும்போல. சரி அந்தப் புள்ளையும் eligible candidate-ஆ இருந்தா பரவாயில்லை. ஏற்கனவே எங்கேஜ்மெண்ட் ஆனது, வயசுல பெரிய பொண்ணு, அடுத்த வாரமே அமெரிக்கா போறதுனு எல்லாமே ஏழரையாதான் இருக்கும். கௌதம் படங்கள் ரெண்டு வகைப்படும் ஒண்ணு லவ் ஸ்டோரி இல்ல போலீஸ் ஸ்டோரி. ஹீரோயின் மேலே சொன்ன எதாச்சும் ஒரு கேட்டகிரில வந்துச்சுனா அது லவ் ஸ்டோரி. இல்லை அந்த மாதிரி இல்லாம ஹீரோவுக்கு பெர்ஃபெக்டான ஜோடியா இருந்தா அது போலீஸ் ஸ்டோரி. சிம்பிள்.
காதலியைத் தேடி போறது
காதலி எங்க இருந்தாலும்.. அமெரிக்கா, ஆலப்புழா, மணப்பாடு ஏன் உக்ரைன்ல இருந்தாக்கூட “இங்க இருக்குடா உக்ரைன்” என்று டக்குனு கிட்டாரைத் தூக்கிட்டு கெளம்பிடுவாரு ஹீரோ. அந்த ஹீரோயின்கள் ‘அட நமக்காக இவ்வளவுதூரம் வந்திருக்கானே’ என்று இம்ப்ரஸ் ஆனதால தப்பிச்சாங்க. ஒருவேளை அவங்கள்லாம் ‘ஸ்டாக் பண்றியா பொறுக்கி… வெளியே போடா’ என்று துரத்திவிட்டிருந்தால் எவ்வளவு காசு வேஸ்ட்.
குழப்பமான ஹீரோயின்கள்
பொதுவாகவே பெண்கள் குழப்பவாதிகள்தான் என்றாலும் GVM Heroines அதில் எக்ஸ்ட்ரா லெவல் எக்ஸ்பெர்ட்டுகள். உன்னை எனக்கு பிடிக்காது கார்த்திக்னு கல்யாணம் பண்ணப் போகும் அப்பறம் அதுவே கல்யாணத்தை நிறுத்திடும். சரி கல்யாணத்தை நிறுத்திட்டு கார்த்திக்கூட சேருமானா அதுவும் பண்ணாது. மறுபடியும் முட்டிக்கும். சரி ஜெஸ்ஸிதான் இப்படினு பார்த்தா இந்தப் பக்கம் நித்யாவும் அதே மாதிரிதான். We are not meant to be னு பிரிஞ்சி போய் சரி இதுதேறாதுனு வருண் வேற கல்யாணம் பண்ணா அங்கயும் வந்து நின்னுட்டு காதலா காதலா எம்.எஸ்.வி மாதிரி ‘தப்பு பண்ணிட்டேன்.. தப்பு பண்ணிட்டேன்’னு புலம்பிட்டு இருக்கும். கௌதம் மேனன் பட காதலிகளுக்கு கமலே தேவலாம் போல.
அடேங்கப்பா மிடில் க்ளாஸ்
‘மிடில் க்ளாஸ் நித்யா.. போன வாரம்தான் கார் வாங்குனேன்’. ‘அமெரிக்கா இங்க இருக்குடா அப் & டவுன் ரெண்டரை லட்சம்தான் ஆகும். போய் மேகனாவை பார்த்துட்டு வா’னு சொல்ற மிடில் க்ளாஸ் அப்பா. இப்படி பார்த்தாலே பரிதாபம் வரும் ஏழைகள்தான் ஜி.வி.எம்மின் கதை மாந்தர்கள். தமிழ்ப்படம்ல வர்ற சிவாவோட வீடு மாதிரிதான் கௌதமின் மிடில்க்ளாஸ் வீடுகள் இருக்கும். கவுண்டமணி பிரபுகிட்ட சொல்ற மாதிரி வாங்க ஏழைங்களா என்று கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
GVM Heros – Starter Pack
ஹீரோ ராயல் என்ஃபீல்டு பைக் வச்சிருப்பாரு, கையில காப்பு மாட்டியிருப்பாரு, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சவரு, ஆனா அதைவிட்டுட்டு எல்லா வேலையும் பார்க்குறவரு. இது எந்த படத்தோட ஹீரோ சொல்லுங்க என்று கேட்டால் ஜி.வி.எம்மே குழம்பிப் போய் ‘come again’ என்பார். அந்தளவுக்கு எல்லா GVM ஹீரோக்களும் ஒரே மாதிரிதான் இருப்பாங்க. ரமணால எல்லாரும் நேசனல் காலேஜ்ல படிச்ச மாதிரி ஹீரோ சாப்ட்வேர்ல வேலை பார்ப்பாரு, போலீஸா இருப்பாரு, மிலிட்டரில இருப்பாரு, சினிமா எடுப்பாரு ஆனா படிச்சதெல்லாம் மெக்கானிகல் இன்ஜினியரிங்கா இருக்கும். உலக நாயகன் கமல் நடிச்சாலும் உசிலம்பட்டி நாயகன் சசிகுமார் நடிச்சாலும் ஒரே டெம்ப்ளேட்தான்.
கௌதம் நார்மலைஸ் பண்ணிய விஷயங்கள்
கௌதம் மேனன் படங்கள்தான் தமிழ் சினிமால சில விஷயங்களை நார்மலைஸ் பண்ணுச்சு. அதுக்காக அவரைப் பாராட்டியே ஆகலாம். உதாரணமா திருமணம் ஆகி கணவனை இழந்த பெண்கள் இன்னொரு துணையைத் தேடிக்கொள்வது. அதை ஹீரோக்களும் எதோ வாழ்க்கை கொடுக்கிறேன் ரேஞ்சுக்கு இல்லாம இயல்பாவே காதலிக்குறது. ஹீரோயின்னா ஹீரோ கூடவே வருவாங்கனு இல்லாம அவங்களுக்கும் கதைல முக்கியமான ரோல் இருக்குறது, கதையை நகர்த்திட்டு போறதே அவங்களா இருக்குறது.
Also Read – `கைகொடுக்குமா புதிய கணக்கு’ – தெரிந்தே விஜய் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க்..!