உலகின் முன்னணி கோடீஸ்வரர், இந்தியாவின் ஆகப்பெரும் தொழிலதிபர் என இதையெல்லாம் தாண்டி முகேஷ் அம்பானி பத்தி நாம தெரிஞ்சுக்க இன்ட்ரஸ்டிங்கான பல விஷயங்கள் இருக்கு. அப்படியான 4 சுவாரஸ்யமான தகவல்களைத்தான் இந்த வீடியோவுல நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
முகேஷ் அம்பானி, தன்னோட மனைவி நீதா அம்பானியை எப்படி முதன்முதல்ல சந்திச்சாரு தெரியுமா… மும்பை அண்டீலா ஹவுஸோட ஒரு மாச கரண்ட் பில் எவ்ளோனு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.. இதையெல்லாம் பத்தி தெரிஞ்சுக்க வீடியோவை முழுசா பாருங்க..
* கார் கலெக்ஷன்
கார்கள் மேல தீராத காதல் கொண்டவர் முகேஷ் அம்பானி. இவரோட கலெக்ஷன்ல பல முன்னணி கார்கள் இருக்கு. இவரோட மும்பை வீட்ல சுமார் 168 கார்களை நிறுத்தலாமாம். இவர்கிட்ட, புல்லட் ஃப்ரூப், வெடிகுண்டு மற்றும் கெமிக்கல் அட்டாக்ல தாக்குப்பிடிக்குற அளவுக்கு High Security வசதிகள் கொண்ட BMW 760Li கார் உள்பட 160-க்கும் மேலான கார்கள் இவரோட கலெக்ஷன்ல இருக்கு. ரூ.10 கோடி விலை கொண்ட இந்த கார்தான் இந்தியாவோட காஸ்ட்லியான கார். இதே மாடல் கார்தான் பிரதமர் மோடியும் பயன்படுத்துறார். பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் தவிர, மெர்சிடஸ் பென்ஸ் மேபேக் 62, Aston Martin Rapide,olls-Royce Phantom, Bentley Continental Flying Spur-னு பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களோட டாப் வேரியண்டுகளும் இவரோட கலெக்ஷன்ல இருக்காம்.
* முகேஷ் – நீதா அம்பானி மீட்டிங்
மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த நீதா அம்பானி, ஒரு டிரெய்ன்டு பரதநாட்டியம் டான்ஸர். அப்படி ஒரு நடன நிகழ்ச்சியில் அவரை மீட் பண்ண முகேஷோட அப்பா திருபாய் அம்பானி, தன்னோட மகன் முகேஷூக்கு அறிமுகம் செய்து வைச்சிருக்காரு. அதுக்கப்புறம், ரெண்டு பேரும் நேர்ல பேசி, பல இடங்களுக்கு ஒண்ணாவே பயணிச்சிருக்காங்க. முகேஷோட பென்ஸ் கார் இல்லாம, தன்னோட ஃபேவரைட்டான டபுள் டக்கர் பஸ்ல பல இடங்களுக்கும் அவரை நீதா கூட்டிட்டுப் போய்ருக்காங்க. அதேபோல, மும்பையில இருக்க தன்னோட ஃபேவரைட் சாட் ஷாப், ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் கடைக்கெல்லாம் கூட்டிட்டுப் போயிருக்கார் முகேஷ் அம்பானி. ரெண்டு பேருக்கும் நடந்தது அரேஞ்ச்டு மேரேஜ்தான்னாலும் நீதா அம்பானிகிட்ட முகேஷ் அம்பானி புரபோஸ் பண்ணிருக்கார். ரெண்டு பேரும் ஒரு தடவை கார்ல போய்ட்டு இருக்கும்போது, ஒரு டிராஃபிக் சிக்னல்ல கார் நின்னுட்டு இருக்கும்போது, `நீதா உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன். நீ என்ன நினைக்குற… இதுக்குப் பதில் சொன்னாதான் காரையே எடுப்பேன்’னு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கார் முகேஷ் அம்பானி. அவரும் ஓக்கே சொல்லவே, 1995ல ரெண்டுபேருக்கும் கல்யாணம் முடிஞ்சது.
* சகோதர சண்டை
1966ல ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தை நிறுவிய திருபாய் அம்பானி, கடந்த 2002ல தன்னோட 69 வயசுல உயிரிழந்தார். அதுக்கப்புறம், முகேஷ் – அனில் அம்பானி சகோதரர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டுச்சு. சுமார் 3 வருஷம் நீடிச்ச இந்த பிரச்னையை திருபாய் அம்பானியோட மனைவி கோகிலாபென் தலையிட்டு முடிச்சு வைச்சாங்க. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியோட, எண்ணெய், எரிவாயு, டெக்ஸ்டைல் பிஸினஸ்களை முகேஷ் அம்பானிக்கும், புதுசா தொடங்கப்பட்டிருந்த டெலகாம், டிஜிட்டல் பிஸினஸ்களை அனில் அம்பானிக்கும் பிரிச்சுக் கொடுத்தாங்க. பின்னாடி, முகேஷ் அம்பானியும் ஜியோ மூலமா டெலகாம், டிஜிட்டல் பிஸினஸுக்குள்ள வந்தாரு. கடுமையான நஷ்டம் காரணமா அனில் அம்பானி பெருசா ஜொலிக்க முடியாமப் போச்சு. இப்போ சமீபத்துல, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸோட சேர்மன் போஸ்டிங்ல இருந்து முகேஷ் அம்பானி விலகிட்டு, தன்னோட மகன் ஆகாஷ் அம்பானியை சேர்மனாக்கியிருக்கார்.
* புருவம் உயர்த்த வைச்ச கரண்ட் பில்
மும்பைல இருக்க இவரோட அண்டீலா ஹவுஸ்தான் உலகத்தோட காஸ்ட்லியான வீடு. 27 மாடிகள் கொண்ட அந்த வீடு, அமெரிக்க டாலர்கள் மதிப்புல ஒரு பில்லியன் மதிப்பு கொண்டதுன்னு சொல்றாங்க. அந்த வீட்டோட முதல் 6 மாடிகளுமே கார் பார்க்கிங்தானாம். 3 ஹெலிபேட்கள், தியேட்டர்கள், ஸ்பா, நீச்சல்குளம்னு எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய இவர் வீட்டுல மட்டும் 600 பேருக்கு மேல ஸ்டாஃப்ஸ் வேலை பாக்குறாங்களாம். 2010ல நீதா அம்பானியோட இவர் அந்த வீட்டுக்கு குடிபெயர்ந்தார். 2010 செப்டம்பர் மாசத்துல மட்டும் அண்டீலா ஹவுஸோட கரண்ட் பில் எவ்வளவு தெரியுமா… ரூ.70,69,488. அதாவது, ஒரே மாசத்துல 6,37,240 யூனிட் கரண்ட் யூஸ் பண்ணியிருக்காங்க. சரியான டைமுக்கு முன்னாடியே கரண்ட் பில் கட்டுனதுதால அவருக்கு ரூ.48,354 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படவே, 70 லட்ச ரூபாய்க்கு மேலான தொகையை ஒரு மாச கரண்ட் பில்லா கட்டிருக்காங்க. இது 7,000-த்துக்கும் மேலான வீடுகளுக்கான கரண்ட் பில்லுக்கு சமம்னு சொல்றாங்க.
Also Read – இளைஞர்களின் கனவுக் கன்னியா இருந்து…தலைமறைவான ஹீரோயின்ஸ்!
Denver Rice
1hp6nq