சர்தார்… இந்தியாவுக்குச் சொல்லும் பாடம் என்ன?

சர்தார் சினிமாவுல ஒன் இந்தியா ஒன் பைப்லைன் திட்டம் பத்தின கருத்தை அடிப்படையா பேசியிருப்பாங்க. ஆனா, இந்த திட்டத்துக்குப் பின்னால இருக்கிற அரசியலை பத்தியும் படம் பேசுது. ஆனா, இந்த திட்டம் நிறைவேறுனா என்ன ஆகும்ங்குறதை பத்தி படம் பேசியிருந்தா இன்னும் பல அதிர்ச்சித் தகவல்கள் நமக்கு கிடைச்சிருக்கும். நிஜமாவே ஒரு நாட்ல இந்த மாதிரி ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுங்குறது உங்களுக்கு தெரியுமா?.. அதனால ஒரு போர்கூட நடந்தது. அவ்வளவு ஏன்? இந்தியாவுலயும் அதுக்கான சாம்பிள் பார்க்க தனியார் நிறுவனத்துக்கு தண்ணீர் விநியோக உரிமையை 4 வருஷத்துக்கு முன்னாலயே கொடுத்துட்டாங்க. அது நம்ம தமிழ்நாட்ல முக்கியமான நகரங்கள்ங்குறது உங்களுக்கு தெரியுமா?…

Sardar Film
Sardar Film

சர்தார்ல பொலிவியா நாட்ல நடந்த பிரச்னையை ஒரு நிமிஷம் எடுத்துச் சொல்லியிருப்பாங்க. அதுக்கும் ஒன் இந்தியா ஒன் பைப்லைன் திட்டத்துக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்கு.

1997-ம் ஆண்டு, உலக வங்கி பொலிவியாவுக்கு இரண்டரை கோடி டாலர் கடன் கொடுக்கிறது. அப்போ பொலிவியாகிட்ட உங்கள் நாட்டு தண்ணீரை தனியார்மயம் ஆக்கணும்னு ஒப்பந்தம் போடுது. அதன்படி அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட பெக்டல்ங்குற தனியார் நிறுவனம் அடுத்த 40 வருஷத்துக்கான உரிமையை வாங்குது. பொலிவியா நாட்டின் நான்காவது மிகப்பெரிய நகரம் கொச்சபம்பா. அங்கே தண்ணீரை எடுத்து விற்பனை செய்ய ஆரம்பிக்கிது, பெக்டல் நிறுவனம். முதல்மாதம் எல்லாமே சீராக போகிறது. இரண்டாவது மாசமே கட்டண உயர்வை கொண்டு வந்தது பெக்டெல். தண்ணீரோட விலை ஏற்றத்தால இலவசமாவும், கம்மியான செலவுலயும், தண்ணீரை வாங்கிட்டு வந்த மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகிறார்கள். இது மக்களுக்கு இடையே கொஞ்சம் அதிருப்தி கொடுக்கிறது. கட்டணம் என்பது அன்றைய மக்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு. கட்டணம் கட்ட முடியாதவர்கள் ஆறுகளில் நீர் எடுக்க சென்றனர். ஆற்றுவழிப்பாதை அமைக்கிறதா சொல்லி அங்க ராணுவம் நிறுத்தப்பட்டது. அடுத்ததா அந்த நிறுவனம் செய்த செயல் பகீர் ரகம். மக்களுடைய வீட்ல இருக்கிற கிணத்துல தண்ணீர் எடுத்தால்கூட வரி செலுத்த வேண்டும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டது. அவர்களுடைய நீர், கட்டணம் கொடுத்த பின்னர்தான் அவர்களுக்கே கிடைத்தது. இறுதியாக மழைநீரை சேமித்து பயன்படுத்த ஆரம்பித்தனர். இரவோடு இரவாக அந்த மழிநீர் தொட்டிகளை அடித்து நொறுக்கியது. பூமியில் இருந்து கிடைத்தாலும், மழையிலிருந்து கிடைத்தாலும் அந்த நீர் எங்களுக்கானதுனு சொல்லி சிரித்தது, பெக்டல் நிறுவனம்.

Bolivia
Bolivia

பெக்டலின் விலை ஏற்ற அறிவிப்புக்கும், கடுமையான நடவடிக்கைகளுக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதையெல்லாம் கேட்ட அரசாங்கம் மழுப்பலாக ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தது. பணம் கட்டும் வசதியில்லாதவர்களுக்கு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை சமாளிக்கவும், பெக்டலுக்கு ஆதரவாகவும் களத்தில் இறங்கியது, பொலிவியா அரசு. அதற்காக ராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது. அரசின் திட்டத்துக்கு எத்ரிப்பு தெரிவித்த தலைவர்களும், மக்களும் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர். உட்சமாக தெருவில் நடந்த 17 வயது சிறுவன் சுட்டுக் கொள்ளப்பட்டார். திட்டத்துக்கு எதிராக போராடிய மக்கள் மீதும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. அதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். போராடிய மக்களின் மீது குண்டு மழை பொழிந்தாலும், மக்கள் தங்கள் போராட்டங்களைக் கைவிடவில்லை. இறுதியாக 2000-ம் ஆண்டு தண்ணீர் விநியோக உரிமையை நிறுத்திக் கொள்ளுமாறு பொலிவியா அரசாங்கத்தால், பெக்டல் நிறுவனம் நிர்ப்பந்திக்கப்பட்டது. அதை எதிர்த்து 2001-ம் ஆண்டு உலக வங்கியில் முறையிட்டது, அந்நிறுவனம். இறுதியில் 2006-ம் ஆண்டு தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு வெளியேறியது, பெக்டல். தண்ணீர் தனியார் மயமானதற்கு எதிராக வெடித்த முதல் போரும் அதுதான். அதேபோல, ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மக்கள் எழுச்சி போராட்டத்தால் பின்வாங்கிய நிகழ்வும் அதுதான். தண்ணீருக்கான மிகப்பெரிய போர் நடத்தி வெற்றிகண்ட முதல் நகரமும் கொச்சம்பாதான். இந்த முதல் போரை மையமாக வைத்து 2010-ம் ஆண்டு ‘ஈவன் தி ரெய்ன்’ (Even the Rain) என்ற சிறந்த சூழலியல் திரைப்படம் எடுக்கப்பட்டது.
தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக ஒன் இந்தியா ஒன் பைப்லைன் கொண்டுவரப்பட்டால் என்ன ஆகும் என்பதற்கு பொலிவியா போராட்டம் ஒரு உதாரணம்.

Bolivia Protest
Bolivia Protest

4 வருஷத்துக்கு முன்னாலயே தமிழ்நாட்ல அனுமதி கொடுக்கப்பட்ட நகரங்கள் இருக்குனு சொல்லியிருந்தேன்ல, அந்த நகரங்கள் நம்ம திருப்பூரும், கோவைதான். பொலிவியாவுல விரட்டி அடிக்கப்பட்ட பெக்டல் நிறுவனம்தான், சில வருஷங்களுக்கு முன்னால திருப்பூர் மாநகரத்திற்கு குடிநீர் வழங்கும் உரிமையை வாங்கிச்சு. வந்தவுடனே சாதாரண தண்ணீரோட விலையை 4 ரூபாய் 50 பைசானு, விலையேத்தி விற்பனை செய்தது.

Also Read – `எம்.ஜி.ஆரை விட பெரிய வள்ளல் நான்தான்’ – பழனிபாபா அலப்பறைகள்!

கோவை மாநகராட்சி பகுதிகளான சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் ஒரு நாளைக்கு 220 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 4 வருஷத்துக்கு முன்னால கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கும் விதமா, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘சூயஸ்’ங்குற நிறுவனத்தோட ஒப்பந்தம் போடப்பட்டது. அடுத்த 30 வருஷங்களுக்கு தண்ணீர் கொடுக்குற வகையில 3,100 கோடி ரூபாய் மதிப்புல ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போதைய கோவை மாநகராட்சி ஆணையர்,  “கோவையில் உள்ள குடிநீர்க் குழாய்கள் சேதமடைந்துள்ளதால், அவற்றை மாற்றியமைக்கவும் பராமரிக்கவும்தான் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம்தான் நியமிக்கும்” என்கிறார்,  

Suez water project
Suez water project

‘குடிநீர்க் குழாய்கள் சேதமடைந்துள்ளதைப் பராமரிக்கவும், மாற்றவும் எதற்குத் தனியார் நிறுவனம்’ அப்படிங்குற கேள்விகளை சூழலியளாளர்கள் அப்பவே எழுப்புனாங்க. தனியாருக்கு தண்ணீர் விநியோக உரிமையைக் கொடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன ஆகும்னு பொலிவியாவை உதாரணமா வச்சே சொல்லலாம். ஒருவேளை சர்தார்ல அந்த திட்டம் நிறைவேறி இருக்க மாதிரி காட்டுனா, பொலிவியா மாதிரி பெரிய சம்பவங்கள் கூட படமாகி இருக்கலாம். எப்படி பார்த்தாலும், தண்ணீர் மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டும். அது தனியார் மயமாகி விடக் கூடாதுங்குற கருத்தைப் பேசுறதுக்காகவே சர்தாரை வரவேற்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top