விசு

`கம்னா கம்..கம்னாட்டி கோ’ – இயக்குநர் விசுவின் டயலாக் செய்த மேஜிக்!

தமிழ் சினிமா டயலாக் ரைட்டர்கள்லயே ரொம்ப யுனீக்கானவர் விசு. ஃபேமிலி டிராமாதான் இவரோட பலமே. அதுவும் இவர் படங்கள்ல வர்ற கேரக்டர்கள் பேசுற வசனம் எல்லாமே காலம் கடந்தும் என்னிக்கும் அழியாம நிக்கக் கூடியவை. நாம இந்த வீடியோவுல விசு-ங்குற டயலாக் ரைட்டரோட ஜீனியஸ்னஸைப் பத்திதான் பார்க்கப்போறோம்.

விசுவோட படங்கள்ல மறக்காம இடம்பிடிக்குற ஒரு கேரக்டர் பேர் தெரியுமா… அதுக்குப் பின்னாடி ஒரு சுவாரஸ்யமான காரணமும் இருக்கு.. வீடியோவை முழுசா பாருங்க… அது எந்த கேரக்டருனு நான் பின்னாடி சொல்றேன்.

’சம்சாரம் அது மின்சாரம்’, ‘மணல் கயிறு’ படங்களை விசுவோட மாஸ்டர் பீஸ்னே சொல்லலாம். அந்த அளவுக்கு மனுஷன் டயலாக்ஸ்ல புகுந்து விளையாடியிருப்பாரு. ஏவிஎம் தயாரிச்ச சம்சாரம் அது மின்சாரம் விசுவோட கரியர்லயே முக்கியமான படம்னு சொல்லலாம். அந்தப் படத்தின் டயலாக்குகள் அந்த அளவுக்கு ரீச்சானது. விசு வழக்கமா அடிச்சு ஆடுற ஃபேமிலி டிராமா ஜானர்தான் இந்தப் படமும். குடும்பத்தின் மூத்த மகனான ரகுவரன், கறார் பேர்வழி. செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்குப் பார்த்து செலவழிக்கக் கூடியவர். ஒரு கட்டத்தில் பணத்தைக் காரணம் காட்டி வீட்டின் நடுவே கோடு போட்டு இரண்டு போர்ஷன்களாகக் குடித்தனம் நடத்துவார்கள். பிரிந்துகிடக்கும் குடும்பத்தை வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி கண்ணம்மாவோடு (மனோரமா) சேர்ந்து மூத்த மருமகள் உமா (லட்சுமி) ஒன்று சேர்க்கப் பாடுபடுவார். ஒரு கட்டத்தில் குடும்பம் ஒன்றுசேர இருக்கும் சமயத்தில் மருமகள் உமா கேட்கும் கேள்விகள், கூட்டுக் குடும்பத்தின் பெருமையை எடுத்துச் சொன்னதுன்னே சொல்லலாம். `குடும்பம்ங்குறது ஒரு அழகான பூ மாதிரி, அதைக் கசக்கினதுக்குப் பிறகு, மோந்து பார்க்கக் கூடாது. அது அசிங்கம்’னு விசு அண்ட் கோவுக்கும், `குடும்பம்ங்கிற கண்ணாடி ஜாடியை உடைச்ச பிறகு, அதை ஒட்ட வைக்க முடியாது’ங்குற டயலாக் மூலம் தனது கணவருக்கும் உமா செக் வைப்பார். இந்தப் படத்தில் கிஷ்முவுக்கும் வேலைக்காரி மனோரமாவுக்கும் நடக்கும் கான்வோ தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காமெடிகளில் ஒன்று. `கம்முனு கிட’ என்று சொல்லிக்கொண்டே மனோரமா பேசும் வசனங்கள் ரொம்பவே பாப்புலர். அந்த டயலாக்கின் முடிவில் மனோரமா சொல்லும், `கம்முன்னா கம்மு.. கம்னாட்டி கோ’என்கிற வாசகம் பின்னாட்களில் சினிமா பாடல் வரிகளாகவும் வந்தது.

விசு ரொம்பவே நக்கல், நைய்யாண்டி புடிச்சவர். அதைத் தன்னோட டயலாக்குகள் பயங்கரமா தெறிக்கவும் விடுவார். இதற்கு உதாரணமா, பல படங்களைச் சொல்லலாம். இந்த வரிசைல குடும்பம் ஒரு கதம்பம் பட வசனங்களை எக்ஸாம்பிளுக்குப் பார்க்கலாம். அதில், சாப்பிட்டியா என்று கேட்கும் ஓமக்குச்சி நாராயணனுக்கு விசு சொல்லும் பதிலும், ’பைத்தியகார ஆஸ்பத்திரியில பைத்தியங்களுக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார வைத்தியருக்கே பைத்தியம் பிடிச்சுட்டா, அப்புறம் அந்தப் பைத்தியக்கார வைத்தியர் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியங்களுக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார வைத்தியர்கிட்ட தன் பைத்தியத்துக்கு வைத்தியம் பாத்துப்பார்’னு சொல்ற டயலாக் காலங்கள் கடந்து நிக்குற டயலாக்.

டி.கே.மணியன் எழுதிய யார் குழந்தை ரேடியோ நாடகத்தை அடிப்படையாக வைச்சு விசு திரைக்கதை எழுதிய படம் `சகலகலா சம்மந்தி’. பெண்ணின் மறுமணத்தை எதிர்த்த காலத்தில், அதன் அவசியத்தைப் பற்றி பேசியிருக்கும் இந்தப் படத்தில் வசனங்களில் விளையாடியிருப்பார் விசு.

’சின்ன வயசுல புருஷன் செத்துட்டா… அவ கொடுத்து வைச்சது அவ்வளவுதான்னு சொல்றோம். அவளே செத்துட்டா… அப்பவும், அவ கொடுத்து வைச்சது அவ்வளவுதான்னு சொல்றோம். ஆகக் கூடி பொம்பளைங்க குடுத்து வைச்சது அவ்வளவுதான் போலருக்கு’னு ஆரம்பிச்சு ’சாதாரணமா உடல் கூறுகளை வைச்சு.. ஆம்பளைங்களை பலமானவங்கன்னும் பொம்பளைங்களை பலஹீனமானவங்கன்னும் சொல்றோம். பலமான அந்த ஆம்பளைக்கே பலஹீனமான அந்த பொம்பளை தேவைப்படும்போது, பலஹீனமான அந்தப் பொம்பளைய ஒரு துணை கூட இல்லாம இன்னும் பலஹீனமாக்குறது… என்ன சார் நியாயம்?’னு விசு டயலாக் பேசுற இடம். யாருடையது என்றே தெரியாமல் குடும்பத்துக்கு வரும் குழந்தையை தனது தாய், தம்பிகள், தங்கை என ஒவ்வொருவரும் ஆதரித்ததை ஒரு ரோஜா செடிக்குப் பதியம் போடுவது தொடங்கி, தொட்டில் வைத்து, சூரிய வெளிச்சத்தைக் காட்டி, தண்ணீர் ஊற்றி வளர்த்தது என டிராவல் செய்து, அந்த செடியில் பூத்திருக்கும் ரோஜாவை எடுத்து தங்கையின் தலையில் வைக்க வேண்டும் என வீட்டின் மூத்த மகன் சந்திரசேகர் பேசும் ஒப்புமை வசனங்கள் எல்லாமே எவர்கிரீன். இந்தப் படத்துல இன்னொரு மேஜிக்கையும் விசு பண்ணிருப்பாரு. கல்லூரி படத்துல இரண்டு நண்பர்கள் ‘ஏன் நீங்க பண்ணக் கூடாதா’னு டயலாக் பேசி நடிச்ச காமெடி ரொம்பவே பேமஸ். அந்த ட்ரிக்கை விசு இந்தப் படத்திலேயே டிரை பண்ணிருப்பாரு. சம்மந்திகளான விசு – டெல்லி கணேஷ் காம்போவில் அந்த ட்ரிக் நல்லாவே வொர்க் அவுட்டும் ஆகியிருக்கும். விசு டயலாக்குகள் மூலம் பண்ண மேஜிக்கை, ஒரு சில இடங்களில் மௌனங்கள் மூலமும் திரைமொழி வழியாக அழகாகக் கடத்திய சீன்களும் இருக்கின்றன. இந்தப் படத்தின் ஒரு காட்சியில், கைம்பெண்ணான தனது மகளை ஒதுக்கி வைத்துவிட்டதை உணர்ந்து அவரைத் தனது அருகில் அமர வைத்து சாப்பாடு போடும் சீனில் டெல்லி கணேஷ் – சரண்யா பேசாமலேயே அந்தக் காட்சியின் அழுத்தத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருப்பார்கள்.

விசுவோட படங்களின் பெயர்கள் எல்லாமே ரைமிங்கான தலைப்புகளைக் கொண்டிருக்கும். சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, காவலன் அவன் கோவலன், வரவு நல்ல உறவு, வாய் சொல்லில் வீரனடி, பெண்மணி அவள் கண்மணி-னு இதுக்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

இவரோட படங்கள்ல உமா என்கிற ஒரு கேரக்டர் நிச்சயம் இடம்பிடிச்சுடும். தனது சின்ன வயசு ஸ்கூல் டீச்சர் நினைவா அவர் படங்கள்ல இடம்பிடிக்குற இந்த உமாங்கிற கேரக்டர் எப்பவுமே புத்திசாலித்தனமான பெண்ணாகத்தான் இருக்கும். உதாரணத்துக்கு, சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் மூத்த மருமகளாக நடித்திருக்கும் லட்சுமியின் கேரக்டர் பெயர் உமா.  

விசு படங்களின் டயலாக்குகளைப் பத்திப் பேசுனா, பேசிக்கிட்டே போகலாம். அதனால, ஒரு சில உதாரணங்களைப் பத்தி மட்டும்தான் பேசிருக்கோம். விசு டயலாக்குகள்ல உங்களோட ஃபேவரைட் டயலாக் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – தமிழ் சினிமாவின் மேஜிக்கல் டைரக்டர் – மியூசிக் டைரக்டர் காம்போக்கள்!

45 thoughts on “`கம்னா கம்..கம்னாட்டி கோ’ – இயக்குநர் விசுவின் டயலாக் செய்த மேஜிக்!”

  1. india pharmacy mail order [url=http://indiapharmast.com/#]reputable indian online pharmacy[/url] buy prescription drugs from india

  2. indian pharmacy paypal [url=http://indiapharmast.com/#]best india pharmacy[/url] reputable indian pharmacies

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top