நடிகைகள்

இளைஞர்களின் கனவுக் கன்னியா இருந்து…தலைமறைவான ஹீரோயின்ஸ்!

ஒரு காலத்துல தமிழ்நாட்டோட கனவுக்கன்னியா இருந்து சமீபமா ஆளு எங்க இருக்காங்கனே தெரியாம காணாம போன நடிகளை ரெடி பண்ணிருக்காங்க நம்மளோட சீக்ரெட் டாஸ்க் ஃபோர்ஸ். அந்த லிஸ்ட்தான் இது. இதுல இருக்குற நாலு பேருக்கும் நல்ல ஓபனிங் இருந்து, பசங்ககிட்டயும் செம்ம கிரேஸ் இருந்து, டாப் ஹீரோக்களோட சேர்ந்து நடிப்பாங்கனு எதிர்ப்பார்த்தா திடீர்னு ஆளு எங்க போனாங்கனே தெரியல கேட்டகிரில இருக்குறவங்க.

லட்சுமி மேனன்

‘ஃபை ஃபை ஃபை’ என்று ஒருகாலத்தில் தமிழ்நாட்டையே குத்தாட்டம் போட வச்ச லட்சுமி மேனனை மறக்கமுடியுமா? சுந்தரபாண்டியன்ல அறிமுகமாகி கும்கில எல்லாருக்கும் பிடிச்ச ஹீரோயினா வந்தவங்க, விஷாலோட பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன் நடிச்சாங்க. அப்படியே விஜய், அஜித்துக்கெல்லாம் ஜோடியா நடிப்பாங்கனு எதிர்பார்த்தா றெக்கை படத்துக்கு அப்பறம் ஆளு அட்ரஸே இல்லாம போயிட்டாங்க. 5 வருசம் கழிச்சு போன வருசம்தான் ‘புலிகுத்தி பாண்டி’ மூலமா திரும்ப எட்டிப் பார்த்தாங்க. செல்லாது செல்லாது இதெல்லாம் கம்பேக்கா எடுத்துக்க முடியாது. ஒரு நல்ல கம்பேக் சீக்கிரமே கொடுக்கணும்னு ‘லட்சுமி மேனன் Slaves – மதுரை மாவட்ட கிளை’ல இருந்து நமக்கு இன்ஸ்டாகிராம்ல மெசேஜ் வந்துச்சு.

ஶ்ரீதிவ்யா

சமீபத்துல ஜன கன மன பார்த்தப்போ நல்ல பரீட்சயமான முகம் தென்பட்டுச்சு. யார்ரானு ஜூம் பண்ணி பார்த்தா அட நம்ம ஶ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல ஊதா கலர் ரிப்பனை வச்சே இளவட்ட பசங்களை உச்சுக்கட்ட வச்சவங்க ஶ்ரீதிவ்யா. வெள்ளைக்காரத் துரை, காக்கிசட்டைனு அப்பப்போ தலைகாட்டுனவங்க திடீர்னு நாலஞ்சு வருசமா தலைமறைவாகிட்டாங்க. ‘சமீபத்துல வந்த ஹீரோயின்ஸ்ல ஹோம்லி லுக் அவங்களுக்குதான் தம்பி இருந்துச்சு… அதுலயும் கட்டிக்கிடும் முன்னே தாவணி காட்டி ஆடுற டான்ஸ் இருக்கே…’ அப்படினு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட மூத்த உறுப்பினர் ஒருத்தர் புலம்பினாரு. சீக்கிரம் திரும்பி வாங்க ஶ்ரீதிவ்யா.

மடோனா செபஸ்டியன்

இவங்களை தமிழ்நாட்டுக்கு வலது கால் எடுத்து வச்சி வர்றதுக்கு முன்னாடியே பிரேமம் செலினா நிறைய பேருக்கு பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. காதலும் கடந்து போகும் மூலமா இவங்க தமிழுக்கு வந்தப்போ மாமியார் வீட்டுக்கு வந்த மருமகளை வரவேற்குற மாதிரி ஆரத்தி எடுத்து வரவேற்றாங்க. பிரேமம் பார்த்துட்டு மடோனா கேக் சாப்பிடுற சீனை போட்டு ‘ஒரு ஐஸ்கிரீமே கேக் சாப்பிடுகிறதே’னு ஃபேஸ்புக்ல கவிதை எழுதின க்ரூப்பெல்லாம் மடோனா விஜய் டிவில துப்பாக்கி போடுற மாதிரி அடிக்கடி வரும்னு பார்த்தா  சன் டிவில மங்காத்தா போடுற மாதிரி எப்பயாவதுதான் பார்க்கமுடியுதுனு புலம்பல் ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருக்காங்க.

பிந்து மாதவி

‘கொஞ்சும் கிளி பாட வச்சா’னு கேடி பில்லா கில்லாடி ரங்கால விமல் பின்னாடியே சுத்துனாரே அந்த பிந்துமாதவியும் எஸ்கேப் ஆனவங்க பட்டியல்ல இருக்காங்க. குட்டி குட்டி படமா பண்ணவங்க, பிக் ஸ்கிரீன்ல வருவாங்கனு பார்த்தா பிக்பாஸ்ல வந்தாங்க. ‘அம்மாடி அம்மாடி’ பாட்டை யூ-டியூப்ல ரிப்பீட் மோடுல பார்த்துட்டு இருந்த பசங்க தலைவியை இனி ஹாட்ஸ்டார்ல பார்க்கலாம்டானு ரெடியானாங்க. திரைப்படம் வேண்டாம் உன் புகைப்படம் போதும்ங்குற மாதிரி அங்கிட்டே செட்டில் ஆகிட்டாங்க. தெலுங்கு பிக்பாஸ் நான்ஸ்டாப்ல டைட்டில் வின்னரா வந்திருக்காங்க பிந்து. பிக்பாஸ் வின் பண்ண எவனும் உருப்பட்டது இல்லைங்குற ராசியை முறியடிச்சு பிந்து மாதவி பிக் ஸ்கீர்ன்ல ஜொலிக்கணும்னு விமல் ரசிகர்கள்லாம் விரதம் இருக்காங்களாம்.

Also Read – எல்லை மீறி போறீங்கடா… ஈரமே இல்லாத ஈரமான ரோஜாக்கள்!

7 thoughts on “இளைஞர்களின் கனவுக் கன்னியா இருந்து…தலைமறைவான ஹீரோயின்ஸ்!”

  1. I am extremely inspired together with your writing skills as smartly
    as with the layout in your blog. Is that this a paid topic
    or did you customize it your self? Either way stay up the
    excellent high quality writing, it’s rare to peer a nice weblog like
    this one today. Madgicx!

  2. I have been browsing online more than 3 hours today, yet I never found any interesting article like yours. It’s pretty worth enough for me. In my opinion, if all website owners and bloggers made good content as you did, the net will be a lot more useful than ever before.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top