கமல் – ராஜசேகர் கூட்டணியில் சுஜாதா திரைக்கதை, வசனத்தில் 1986-ம் ஆண்டு வெளியாகி பெரிய ஹிட்டடித்த படம் விக்ரம். இதேபெயரில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் 2.0 உருவாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் சில, பல முதல் சம்பவங்களுக்குச் சொந்தமான விக்ரம் படத்தைப் பத்திதான் இந்த வீடியோவில் நாம பார்க்கப்போறோம்.
விக்ரம் படத்தை இயக்குறதுக்கு கமலோட முதல் சாய்ஸா இருந்த இயக்குநர் யார் தெரியுமா… அதேமாதிரி, விக்ரம் படத்துக்கும் விஸ்வரூம் படத்துக்கும் இருக்க ஒற்றுமை தெரியுமா? இந்த கேள்விகளுக்கான பதிலை பின்னாடி பார்க்கலாம். முதல்ல விக்ரம் படத்தைப் பத்தி பார்த்துடுவோம்.
ஸ்க்ரீன்பிளே ட்ரீட்மெண்ட்
தமிழ் சினிமாவுல பல டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்துன Pioneer கமல். அந்த வகையில், அப்போதைய ரசிகர்களுக்கு ஒரு ஸ்பை த்ரில்லர் டைப்ல சுஜாதாவோட கதையை விக்ரம் படமா கொடுத்திருப்பாரு. சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸோட இரண்டாவது தயாரிப்பே, பிரமாண்டமா இருந்துச்சு. இந்தப் படத்துலதான் முதல்முறையா கம்ப்யூட்டர் பத்தி டீடெய்லா பேசிருப்பாங்க. அதே மாதிரி தமிழ் சினிமாவின் முதல் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் படமும் இதுதான். ஜேம்ஸ்பாண்ட் டைப் படங்கள் மாதிரி அம்பிகா, லிஸி, டிம்பிள் கபாடியானு மல்டிபிள் ஹீரோயின்ஸ், சலாமியானு ஒரு கற்பனையான நாட்டுல நகர்ற கதை, அக்னிபுத்ரா ஏவுகணையை மீட்டு நாட்டைக் காப்பாத்துற ஹீரோனு ஸ்கிரீன்பிளே ட்ரீட்மெண்டும் தமிழ் இண்டஸ்ட்ரிக்கு ரொம்பவே புதுசு. அதுக்கு ரசிகர்களும் பிரமாதமான வரவேற்புக் கொடுத்தாங்கனே சொல்லலாம்.
Pan India Film?
பான் இண்டியா ஃபிலிம்னு ஒரு டாக்கே சினிமா இண்டஸ்ட்ரில சமீபத்துலதான் வந்துருக்கு. அதுக்காக, பல மொழிகளில் நடிக்கும் ஸ்டார்களையும் ஒருங்கிணைச்சு தங்களோட படங்கள்ல நடிக்க வைக்குறதை வழக்கமா வைச்சிருக்காங்க. ஆனால், 1986லயே இதை டிரை பண்ணிருக்காரு கமல். எப்படினு கேக்குறீங்களா… மெயின் வில்லன் சத்யராஜ்தான்னாலும், சலாமியா மன்னரா நடிச்ச அம்ஜத் கான், அந்த டைம்ல பாலிவுட்டோட முக்கியமான வில்லன். அவரோட தங்கை இனிமாசி கேரக்டர்ல நடிச்ச டிம்பிள் கபாடியா பாலிவுட்ல பிரபலமா இருந்த நடிகை. அதேமாதிரி, மலையாள ஹீரோயினான லிஸிதான் கமலோட அசிஸ்டெண்டா படத்துல நடிச்சிருப்பாங்க. இப்படி, பல வுட்களின் முக்கிய நடிகர்களையும் அசெம்பிள் செய்து, அப்போவே பான் இண்டியா கான்செப்டை நனவாக்கியிருந்தாங்க விக்ரம் க்ரூ. தமிழ் தவிர மற்ற மொழிகள்லயும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டா கொண்டாடப்பட்டது.
பாடல்கள்
தமிழ் சினிமா அதுவரைக்கும் பார்த்திராத வித்தியாசமான சவுண்ட்களைப் பயன்படுத்தி இந்தப் படத்துக்கு பாடல்கள் அமைச்சிருப்பாரு இளையராஜா. `விக்ரம்…விக்ரம்’னு கமலோட குரல்ல ஒலிக்குற டைட்டில் சாங்கா இருந்தாலும் சரி, ’என் ஜோடி மஞ்சக் குருவி’ பாட்டா இருந்தாலும் சரி, வெரைட்டியான மாடுலேஷன் காட்டி மிரட்டியிருப்பாரு ராஜா. அதேமாதிரி, வனிதாமனி, சிப்பிக்குள் ஒரு முத்து, இசைக்கருவிகள் அதிகம் பயன்படுத்தப்படாமல் வாயிலேயே ஜூம் ஜுக்கும் என ஒலியெழுப்பி உருவாக்கப்பட்ட மீண்டும் மீண்டும் வா’னு படத்தோட எல்லா பாடல்களுமே படத்துக்கு வேற லெவல் எனர்ஜி கொடுத்திருக்கும்.
லொக்கேஷன்கள்
படத்துல வர்ற லொக்கேஷன்கள் அந்த காலகட்டத்துல ரொம்ப ஃபிரஷ்ஷாவும் ரசிகனுக்கு பிரமிப்பை ஏற்படுத்துற விதமாவும் இருந்துச்சுன்னே சொல்லலாம். ராஜஸ்தான்ல பாலைவனத்துக்கு நடுவுல இருக்க பிரமாண்ட அரண்மனைகள், சலாமியான்ற கற்பனையான நாட்டை அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துச்சு. எலி கோயில், ஏவுகணை என தமிழ் சினிமா ரசிகன் அதுவரை பார்த்திராத புதிய விஷூவல்கள் படத்துக்கு ஒரு ரிச்னஸைக் கொடுத்ததுனே சொல்லலாம்.
நான் முதல்லயே சொல்லிருந்த மாதிரி, விக்ரம் படத்தை டைரக்ட் பண்றதுக்கு கமலோட முதல் சாய்ஸா இருந்தவர், இயக்குநர் மணிரத்னம். ஆனா, ஒரு சில காரணங்களால ராஜசேகர் உள்ள வந்திருக்கார். இதை கமலே பல பேட்டிகளிலும் குறிப்பிட்டிருக்கார். 1980களில் இளம் இயக்குநராக இருந்த மணிரத்னம், விக்ரம் மாதிரியா பெரிய பட்ஜெட் கமர்ஷியல் படத்துக்கு ஒத்துவருவாரா என்பது தயாரிப்பு தரப்பின் யோசனையாக இருந்திருக்கலாம். அதை கமல் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், ராஜசேகர் இயக்கம் மீதான அதிருப்தியையும் பல இடங்களில் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் என்றே சொல்லலாம். ஒருவேளை மணிரத்னம் இயக்கியிருந்தால், பழைய விக்ரம் படத்தின் அவுட்லுக் வேறுமாதிரி வந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதேமாதிரி, விஸ்வரூபம் படம் மாதிரியே விக்ரம் படத்தோட முதல் சீனும் புறாக்களோடுதான் தொடங்கும்.
விக்ரம் 1.0 படத்தைப் பொறுத்தவரை உங்களுக்குப் பிடிச்ச அம்சம் எதுனு நினைக்கிறீங்க… அதை கமெண்ட்ல சொல்லுங்க…
Also Read – இயற்கை முதல் லாபம் வரை… எஸ்.பி.ஜனநாதனின் மக்களுக்கான அரசியல்!
8tlhsg