டிரெண்டாகும் `Adventure Honeymoon’ – புதுமணத் தம்பதிகளுக்கான 5 டிப்ஸ்!

ஹனிமூன் சரி, அதென்ன ’Adventure Honeymoon’-னு கேக்குறீங்களா… அட்வெஞ்சர் விரும்பிகளான புதுமணத் தம்பதிகள், தங்களது ஹனிமூனை மறக்கமுடியாத நிகழ்வாக இப்படி பிளான் பண்ணிக்கொள்ளும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது..

Adventure Honeymoon

பீச்சில் தங்களது வாழ்க்கைத் துணையோடு முழு நாளையும் கழிக்கும்படியோ அல்லது ஹில் ஸ்டேஷனில் ஒரு சில நாட்களைக் கழித்துவிட்டோ ஹனிமூனை முடித்துக் கொள்ளும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகிறது. இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட் ’Adventure Honeymoon’. அட்ரீனலின் பம்பாகி உங்க லைஃப்ல மறக்க முடியாத டிரிப்பா ஹனிமூன் இருக்கணும்னு நினைக்குற ஆட்களுக்கு இது பெஸ்ட் ஐடியா.

’Adventure Honeymoon’-க்கான 5 ஐடியாக்களைத்தான் நாம இப்போ தெரிஞ்சுக்கப் போறோம்.

மலை உச்சி கேம்பிங்

மலை உச்சி கேம்பிங்
மலை உச்சி கேம்பிங்

மலை உச்சிகளில் கேம்ப் அடித்து தங்கள் ஹனிமூனைக் கொண்டாட புதுமணத் தம்பதிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதில், நீங்கள் மட்டும் அட்வெஞ்சர் விரும்பியாக இருந்தால் பத்தாது, உங்கள் பாட்னரும் அதில் ஈடுபாடு காட்ட வேண்டும். நீங்க ரெண்டு பேருமே அட்வெஞ்சரை விரும்புற ஆட்களா இருந்தா, உங்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸா இருக்கும். இரவு நேரங்களில் வானத்து நட்சத்திரங்களை துணைக்கு அழைத்துக் கொண்டு பாட்னரோடு கதைக்கலாம். இருவரும் ஒன்றாக இருந்த இனிமையான தருணங்களை அசைபோடும் நிகழ்வு உங்கள் வாழ்வின் மறக்க முடியாத மொமண்டாக இருக்கும்.

Hot Balloon Ride

Hot Balloon Ride
Hot Balloon Ride

Hot Balloon Ride டிரை பண்ணியிருக்கீங்களா… அட்வெஞ்சரில் ஈடுபாடு கொண்ட பாட்னரோடு தரையில் இருந்து குறிப்பிட்ட உயரத்துக்கு பலூனில் பறந்து சாகசம் செய்வது அலாதியான அனுபவம் கொடுக்கும். கழுகுப் பார்வை கொடுக்கும் வியூ நிச்சயம் வாழ்நாளுக்கான மெமரீஸை உங்களுக்கு அளிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ரொமான்டிக்காக மட்டுமல்லாது, இந்த அனுபவம் கொடுக்கும் த்ரில்லையும் மிஸ் பண்ணிடாதீங்க.

நீர் விளையாட்டுகள்

நீர் விளையாட்டுகள்
நீர் விளையாட்டுகள்

நீர் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட தம்பதிகளுக்கு இது சூப்பரான தேர்வாக இருக்கும். அலைச்சறுக்கு, sailing, skiing மற்றும் kayaking போன்ற விளையாட்டுகள் உங்கள் ஹனிமூன் அனுபவத்தை மறக்க முடியாத நிகழ்வாக்கலாம். அட்வெஞ்சரோடு உங்கள் இன்ஸ்டா பக்கங்களையும் அழகாக்கும் எத்தனையோ புகைப்படங்களும் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது மிஸ் பண்ணிடாதீங்க!

பாராகிளைடிங்

பாராகிளைடிங்
பாராகிளைடிங்

உங்க ஒவ்வொரு டிரிப்லயும் சாகசங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கணும்னு ஆசைப்படுபவரா நீங்க… ஆம் என்பதுதான் உங்கள் பதில்னா, நிச்சயம் உங்களுக்கான ஆப்ஷன்தான் பாராகிளைடிங். உடனே உங்கள் ஹனிமூனை பாராகிளைடிங்கோட பிளான் பண்ணிடுங்க. அது உங்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும்.

ரோட் டிரிப்

ரோட் டிரிப்
ரோட் டிரிப்

ஒரு லாங் ரோட் டிரிப் என்பது எத்தனையோ தம்பதிகளின் கனவாக இருக்கும். ஹனிமூன் பயணத்தை ஒரு ரோட் டிரிப்பாக பிளான் பண்ணா, அது உங்களுக்கு மறக்க முடியாத டிரிப்பா இருக்கும். இது பட்ஜெட்ரீதியாகவும் உங்களுக்கு பெரிதாக செலவு வைக்காது. சரியான திட்டமிடலோட உங்க பயணத்தை நீங்க பிளான் பண்ணீங்கனா நிச்சயம் புது அனுபவமா இருக்கும். பயணத்தின் ஊடே அந்தந்த லோக்கல் உணவு வகைகளை டேஸ்ட் பண்ண மறந்துடாதீங்க!

Also Read – ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பில் இத்தனை வகைகளா… இதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்களா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top