ஒரு வருடத்தில் முதல்வர் ஸ்டாலினின் தோற்றங்கள் – அப்பப்பா… எத்தனை கெட்டப் சேஞ்ச்!

நல்லா கவனிச்சுப் பார்த்தீங்கன்னா முதலமைச்சர் ஸ்டாலின், போன ஒரு வருஷத்துல அவரோட டிரெஸ்ஸிங்கை எப்படியெல்லாம் மாத்திக்கிட்டார்னு தெரியவரும். அவரோட லுக்கும் டிரெஸ்ஸிங்கும் எப்படியெல்லாம் இந்த ஒருவருஷத்துல மாறியிருக்கு அப்டிங்குறதைப் பத்திதான் இந்த வீடியோல பார்க்கப் போறோம். ஒரு வருஷத்துல எப்படியெல்லாம் மாத்திருக்காருனு உங்களுக்குத் தெரியுமா… தெரிஞ்சுக்க தொடர்ந்து வீடியோவைப் பாருங்க.

* பொதுவாவே ஸ்டாலின் அப்டினாலே, அவரோட முகம் நினைவுக்கு வருதோ இல்லையே அவரோட மடிப்பு கலையாத வெள்ளை சட்டையும், வேட்டியும் அடையாளமே மனசுல பதிஞ்சிருக்கும். அதேமாதிரி, நரைத்த கிருதாவோட 80ஸ் ஹீரோஸ் மாதிரியான ஹேர்ஸ்டைலும்னு அவரோட ஐகானிக் ஸ்டைலும் ஃபேமஸ்தான். எப்பவும் வெள்ளை வேட்டி, சட்டையில் இருந்த ஸ்டாலின் கடந்த 2016 தேர்தலின்போது நமக்கு நாமே பயணத்தை முழுக்க முழுக்கவே அன்-யூனிஃபார்மில், முதல்முறையாக மக்கள் முன் தோன்றினார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

* ஆனா, அவர் முதலமைச்சரான பிறகு டிரெஸ்ஸிங், ஹேர்ஸ்டைல்னு அவர்கிட்ட ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறதைப் பார்க்க முடியும். இந்த மாற்றங்களுக்கான விதை 2021 தேர்த பிரசாரத்திலேயெ போடப்பட்டது. பிரசாரத்தின்போது பல இடங்களில் ஸ்டைலிஷான ஹை-எண்ட் கூலிங் கிளாஸோடு பார்க்க முடிந்தது.

* முதலமைச்சரான பின்னர் ஹேர்ஸ்டைலும் புதுவடிவம் பெற்றது. கர்லிங்கில் இருந்து மொத்தமா ஏத்தி சீவுன மாதிரியான விக்குக்கு மாறியிருந்தார். ஆரம்பத்துல இந்த லுக்கு அவருக்கு செட் ஆகலையோன்ற மாதிரியான பேச்சுகள் வந்தாலும், ஒரு கட்டத்துல அவரோட புது அடையாளமாவே மாறிடுச்சு.

ஸ்டாலினின் சைக்கிள் ரைட்
ஸ்டாலினின் சைக்கிள் ரைட்

வெயிட்…ஒரு சின்ன கேள்வி… முதலமைச்சர் ஸ்டாலின் ஈசிஆர்ல சைக்கிள் ரைடிங் போறதுக்கு யூஸ் பண்ண சைக்கிளைப் பத்தி தெரியுமா… அதுல என்ன ஸ்பெஷல்? கண்டுபிடிக்க முடியுதானு பாருங்க… அதுக்கான பதிலை நான் பின்னாடி சொல்றேன்.

* இந்த ஒரு வருஷத்துல இரண்டு, மூணு தடவை அவர் ஜிம்ல அவர் வொர்க் அவுட் பண்ற வீடியோவும் வைரலாச்சு. இப்படியான வீடியோக்களை வெளியிட்டு, எக்ஸர்ஸைஸ் மேலயும் தனக்கு ஆர்வம் இருக்குன்றதையும் வெளிப்படுத்திக்கிட்டார். டிராக் – டீஷர்ட் சகிதம் அடையாறு தியாசோபிக்கல் சொசைட்டியில் ஒரு தடவை வாக்கிங் போனவரு, அங்கிருந்த மக்களைச் சந்திச்சு ரொம்ப கேஷூவலா உரையாடிட்டும் இருந்தார். சைக்கிள் ரைடிங்கும் சரி, டிராக்-டீஷர்டும் சரி இரண்டுமே பெரும்பாலான நேரங்கள்ல திமுகவோட ஆஸ்தான கருப்பு – சிவப்பு கலர் காம்பினேஷன்ல இருக்குற மாதிரியே பார்த்துக்கிட்டார்னே சொல்லலாம்.

ஜிம் வொர்க்-அவுட்
ஜிம் வொர்க்-அவுட்

* முதலமைச்சரான பிறகு அவர் குடும்பத்தோடு கொண்டாடுன முதல் தைப்பொங்கல் அன்னிக்கும் அவர் போட்டிருந்த டிரெஸ் ரொம்பவே ஸ்பெஷல்னு சொல்லலாம். எந்த நாளா இருந்தாலும் வெள்ளை கலர்லயே வேட்டி – சட்டை போடுறதை வழக்கமா வைச்சிருந்த அவர், அன்னிக்கு பட்டு வேட்டியோட, ப்ளூ கலர் ஸ்ட்ரைப்ஸ் டிசைன் ஷர்டோட இருந்தார். கலைஞர் கருணாநிதி சமாதிக்கு மனைவி துர்கா ஸ்டாலினோடு இதே காஸ்ட்யூமில் போய்தான் மரியாதை செலுத்தினார்.

* சென்னை மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தபோது, பல இடங்களுக்கு நேரடியாவே விசிட் அடிச்சாரு. அப்போ, தனது வழக்கமான ஷூவை விடுத்து மழைக்காலங்களில் அணியும் ஃபுல் பூட், ரெயின் கோட் வித் ஹேட்னு புல் ஸ்விங்ல கிரவுண்ட் ஒர்க்கும் பண்ணாரு. அவர் அப்போ யூஸ் பண்ண சிவப்பு கலர் மஹிந்திரா தார் ஜீப்பும் பேசுபொருளாச்சு.

நான் முன்னாடி கேட்டிருந்த கேள்விக்கான பதிலைத்தான் நாம அடுத்ததா பார்க்கப்போறோம்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

* ஈ.சி.ஆர்ல சைக்கிள் ரைட் போறப்ப, அவரோட லுக்கு மொத்தமாவே மாறியிருந்ததைத் தொடக்கத்துல மக்கள் ஆச்சர்யமா பாத்தாங்க. ஹெல்மெட், கிளாஸ்,ஹேண்ட் கிளவுஸ், சேஃப்டி கியர்னு ஒரு புரஃபஷனல் ரைடர் ஃபார்மேட்ல இருந்த அவர் வயசு குறைவானவராவே தெரிஞ்சார். அவர் ஓட்டுன 7 கியர்கள் கொண்ட Pedaleze C2 சைக்கிளும் பேமஸாச்சு. பேட்டரி அட்டாச் பண்ணப்பட்டிருக்க அந்த சைக்கிளோட விலை 81,000 சொச்சமாம்.

* முதலமைச்சரான பிறகு முதல் முறையான துபாய் போன ஸ்டாலினோட டிரெஸ்ஸிங்கும் பரவலா கவனம் பெற்றதுன்னே சொல்லலாம். கிளம்பும்போதே சிவப்பு டீஷர்ட் – கருப்பு பேண்டோட அவர் போட்டிருந்த Padded West-ம் அட்டகாசமா இருந்துச்சு. அதே மாதிரி துபாய்ல இருந்தபோது, ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் வெவ்வேறு டிரெஸ்ல வந்து வெரைட்டி காட்டுனாரு. நார்மல் கோட், சூட், நம்ம பிரசிடெண்ட் ராம்நாத் கோவிந்த்தோட வழக்கமான சைனீஸ் காலர் கோட்-சூட் மாதிரியான கோட்-சூட், டக் இன் செய்யப்பட்ட பேண்ட்-ஷர்ட் வித் கூலர்ஸ்னு துபாய் மாதிரியான ஃபேஷனான சிட்டியில கூலான டிரெஸ்ல கலக்குனாரு நம்ம சி.எம்.  

மே தின நிகழ்ச்சி
மே தின நிகழ்ச்சி

* தொழிலாளர்கள் தினமான மே 1-ம் தேதி சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் பேசுனாரு. அப்போ, தொழிலாளர்களின் அடையாளமாகப் பார்க்கப்படும் செஞ்சட்டையோடு அந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டாரு.

முன்னமாதிரி இல்லாம இப்படி அக்கேஷனுக்கு ஏத்த மாதிரி தன்னோட டிரெஸ்ஸிங் ஸ்டைலை மாத்த ஆரம்பிச்சிருக்காரு ஸ்டாலின்… இந்த டிரெஸ்ஸிங் சேஞ்ச் அவருக்கு வொர்க் அவுட் ஆகுதா… அவருக்கு எந்த டிரெஸ் Suitable-ஆ இருக்குனு நினைக்கிறீங்க… கமெண்ட்ல சொல்லுங்க மக்களே… நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்.   

Also Read – ஓராண்டு தி.மு.க ஆட்சி: எதெல்லாம் ஹிட்… எதெல்லாம் மிஸ்…?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top