கார்த்திக் - கவுண்டமணி

கார்த்திக் – கவுண்டமணியின் காமெடி மேஜிக்!

1991-முதல் 1995-ம் வருஷம் வைக்கும் தொடர்ச்சியான தோல்விகளால் நடிகர் கார்த்திக் துவண்டுபோயிருந்த காலகட்டம் அது. ஐந்து வருடங்களில் 23 படங்கள் நடித்திருந்தார். அதில் 3 படங்கள் மட்டுமே ஹிட். 20 படங்கள் தோல்வி. கார்த்திக் இனி அவ்துளோதான் என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் காமெடி ரூட்டைக் கையிலெடுத்தார், கார்த்திக். அதற்கு முக்கியமான காரணம் கவுண்டமணி. இதற்கு முன்னால் இவர்கள் இரண்டுபேரும் சேர்ந்து நடித்திருப்பார்கள். ஆனால், அங்கங்கே காட்சிகள் வருமே தவிர முழுமையா ஒரு படத்தில் டிராவல் இருக்காது. 1996-க்குப் பின்னால் படம் முழுக்க கார்த்திக்-கவுண்டமணி சேர்ந்து வந்தாலே அது ஹிட்டுதான் எனும் நிலை உருவானது.. அதற்கு இவர்கள் கெமிஸ்ட்ரி முக்கியமான காரணம்.

உள்ளத்தை அள்ளித்தா!

உள்ளத்தை அள்ளித்தா
உள்ளத்தை அள்ளித்தா

கிட்டத்தட்ட கார்த்திக் இரண்டாவது இன்னிங்ஸாக தன்னுடைய வெற்றிப் பயணத்தைத் தொடரக் காரணமாக அமைந்தது, உள்ளத்தை அள்ளித்தா. காமெடி கலகலப்புக்குப் பஞ்சமே இருக்காது. கார்த்திக் – கவுண்டமணி காமெடி முதல்முதலா படம் முழுக்க டிராவல் ஆகும். ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்ட கவுண்டமணி கதாபாத்திரமும், சின்சியரான இன்னசன்ஸ் குணம் கொண்ட கார்த்திக்கின் கதாபாத்திரமும் ஒன்றாக இணைந்து ஒரு காமெடி யுத்தமே நடத்தியிருக்கும். படத்தின் மொத்த நீளம் 2 மணிநேரம் 28 நிமிடங்கள். சுமார் 2 மணிநேரமும் காமெடி மட்டும்தான் இருக்கும். ஹோட்டலில் கார்த்திக்கிற்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிட்டு, பின்னங்கால் பெடனியில் அடிக்க எஸ்கேப் ஆகி தன்னுடைய வீட்டுக்கு வந்து கதவைத் திறக்கும்போது, உள்ளே வந்து உட்கார்ந்திருப்பார் கார்த்திக். பார்த்த உடனே அமைதியாக வந்து கார்த்திக் பக்கத்தில் உட்கார்ந்து அவர் கொடுக்கிற தண்ணீரைக் குடித்துக்கொண்டு, “முன்னாலேயே வந்துட்டீங்க்ளா, அட்ரஸ்லாம் கரெக்டா கண்டுபிடிச்சு வந்திருக்கீங்க” என கவுண்டமணி கேட்கும் அந்த சீன் ஆகட்டும், அவருடைய வீட்டில் தங்கும் கார்த்திக் 4.30 மணிக்கு ஊட்டியில் ஜாக்கிங் கூப்பிட்டுபோக தண்ணீரை எடுத்து கவுண்டமணி மேல் ஊத்துற சீனாகட்டும் காமெடியில் இரண்டுபேரும் பொளந்து கட்டியிருப்பார்கள். அதே மாதிரி கார்த்திக்கும், கவுண்டமணியும் ஒரே வீட்டில் இருந்துகொண்டு இரண்டுபேரும் ஒரே மாதிரி நடிக்கிற காட்சியில் காமெடிப் பட்டாசுதான். அதுவும் கிளைமேக்ஸில் கார்த்தி கையில் குண்டு இல்லாத துப்பாக்கி இருக்குறப்போ, கவுண்டமணி வில்லனிடம் செய்ற தகராறு வேற லெவல்ல இருக்கும். லாஜிக் மீறலையும் தாண்டி, இந்த படத்தில் காமெடி வொர்கவுட் ஆகியிருக்கும். சுந்தர்சியோட ஸ்கிரீன்ப்ளேவோட சேர்ந்து கார்த்திக் கவுண்டமணியுடைய கெமிஸ்ட்ரி பிரமாதமா ஒர்க்கவுட் ஆகியிருக்கும்.

மேட்டுக்குடி

உள்ளத்தை அள்ளித்தா வெற்றிக் கூட்டணி அதே வருடத்தில் மேட்டுக்குடி மூலமாக திரும்பி வந்தது. இந்த முறை முன்பைவிட பவர்புல் காமெடியுடன். குறிப்பாக கவுண்டமணிக்கு உதவி செய்கிறேன் சொல்லிவிட்டு, கார்த்திக் ரோஸ் கொடுத்து ‘ஐ லவ் யூ’ சொல்லும் காட்சியாகட்டும், கவுண்டமணி ரொமாண்டிக் லுக் கொடுக்கும் காட்சியாகட்டும், நக்மா ரோஸை வாங்கிக் கொண்டு போகும்போது, ‘காலிங் பூ வாங்கிட்டு போறாங்களே அது உங்ககிட்ட இருந்துதான்’ என கார்த்திக் சமாளிக்கும் இடத்தில் கவுண்டமணியின் ரியாக்‌ஷன் ஆகட்டும் முழுக்க முழுக்க பவர்புல் காமெடிதான். இந்த படத்தில் வெல்வெட்டா பாடடில் இன்னொரு ஹீரோ ரேஞ்சில் டான்ஸ் ஆடியிருப்பார், கவுண்டமணி.

மேட்டுக்குடி
மேட்டுக்குடி

கார்த்திக் நக்மாவோட முதலிரவுக்கு பூ அலங்காரம் செய்யும் சீன் இன்னைக்கும் மீம் டெம்ப்ளேட்டில் இருக்கும். தீச்சட்டி தூக்கும் சீன், லெட்டர் மாறிப்போகும் இடம், ஜெமினி கணேசன் மாதிரி வேஷம் போடும் இடம் என இரண்டுபேருக்கும் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க்கவுட் ஆகியிருக்கும். காமெடி மட்டுமல்ல, மேட்டுக்குடி க்ளைமாக்ஸில் கார்த்தி கூட தரையில் இருந்துதான் பைட் பண்ணுவார், நம்மாள் கேப்டன் மாதிரி ஒரு காலை மாட்டு வண்டியில் வைத்து பைட் பண்ணுவார். சொல்லப்போனால் இரண்டு கதாநாயர்கள் சேர்ந்து வில்லன்களை அடித்து துவம்சம் செய்வதுபோல இருக்கும்.

மேட்டுக்குடி
மேட்டுக்குடி

குறிப்பாக அரண்மனைக்கு கார்த்திக் வந்ததில் இருந்து அவரை விரட்ட நினைக்கும் கவுண்டமணி, கடைசியா கார்த்திக் திருந்தி அரண்மனையை விட்டு போகிற காட்சியில்’ பிரதர் நீங்க இந்த வீட்லயே தங்கிக்க பிரதர்’ என கலங்கும் காட்சியில் அண்ணன் தம்பி கெமிஸ்ட்ரி வொர்கவுட் ஆகியிருக்கும்.

உனக்காக எல்லாம் உனக்காக!

அடுத்து மீண்டும் சுந்தர்.சி, கார்த்திக், கவுண்டமணி கூட்டணியில் உனக்காக எல்லாம் உனக்காக சினிமா வந்தது. இப்போது தலைகீழ் கார்த்தியின் என்ட்ரி பாட்டில் இருந்து கவுண்டமணியும், கார்த்திக்கும் பட்டையைக் கிளப்புவார்கள். அடுத்ததாக வரும் முதல் பைட்டில் கார்த்தி, கவுண்டமணி காம்போ சண்டை அனல் பறக்கும். அங்கங்கே ஆரம்பிக்கும் காமெடி, கார்த்திக்கிற்காக கவுண்டமணி மாறுவேடத்தில் ரம்பவை விரட்ட கார்த்திக் காப்பாத்தும் சீனில் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரைக்கும் நான்ஸ்டாப் சிரிப்பு மழைதான். ‘மாப்ள என்னால நிக்ககூட முடியல மாப்ள, மேட்டர் ஓவர்’ என சொல்லும் இடங்களில் குபீர் சிரிப்புகளைத் தவிர்க்கவே முடியாது. நிச்சயதார்த்ததுக்கு வந்து சாப்பாட்டில் செங்கல்லை வைத்து அடித்த லூட்டி அதகளம்தான். ரம்பாவைப் பார்க்க கல்யாணத்திற்குப் போய் அங்கே கார்த்திக் உடன் சேர்ந்து வரும் சீன்கள் எல்லாமே அதிரடியான காமெடி பட்டாஸ்தான்.

உனக்காக எல்லாம் உனக்காக
உனக்காக எல்லாம் உனக்காக

லக்கிமேன், பொன்னுமணி, அழகான நாட்கள், கண்ணன் வருவான், மருமகன், பூவரசன், சின்ன ஜமீன்னு வரிசையா படங்களில் கார்த்திக்கும், கவுண்டமணியும் சேர்ந்து நடித்திருப்பார்கள். ஆனால் த்ரோ அவுட்டாக கலக்கிய படங்கள் மேலே நாம் பார்த்த மூணும் எப்பவுமே க்ளாசிக் காமெடிகள்தான். உங்களுக்கு இவர்கள் காம்போவில் என்ன படம் பிடிக்கும் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

Also Read – கவுண்டமணியின் ஆஃப் ஸ்கிரீன் தக் லைஃப் சம்பவங்கள்!

1 thought on “கார்த்திக் – கவுண்டமணியின் காமெடி மேஜிக்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top