எம்.ஜி.ஆருக்கே முதலாளி… ஜெயலலிதாவுக்கு தளபதி… கலைஞருக்கு சாத்தூர் அல்லது கே.கே.எஸ்.எஸ்.ஆர்… ஸ்டாலினுக்கு அண்ணன்… அழகிரிக்கு வியாபாரி… ஜானகி அம்மையார்… கருணாநிதி ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்தவர்… 70-களின் இறுதியில் ஒட்டுக்குப் பணம் கொடுத்தவர்… 80-களின் இறுதியிலேயே கூவத்தூர் ஸ்டைலை அறிமுகம் செய்தவர்… தமிழகத்தின் முதல் அரசியல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்… சட்டமன்றத்தில் இருக்கும் மைக் பேசுவதற்கு அல்ல; எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்களை தாக்குவதற்கு என்ற புதிய கலாசாரத்தை தமிழகத்திற்கு கற்றுத் தந்தவர்… 11 சட்ட மன்றத் தேர்தல்களைச் சந்தித்து 9 தேர்தல்களில் வென்றவர்… ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து, பிரதான எதிர்கட்சியான தி.மு.க-வே 2 இடங்களை மட்டும் ஜெயித்து, 232 இடங்களில் தோற்றபோது, சுயேட்சையாகப் போட்டியிட்டு அந்தத் தேர்தலில் வென்றவர்… அடிதடி, அரட்டல், மிரட்டல் அரசியலின் பிதாமகன் என அரை நூற்றாண்டு கால அரசியலின் டிரெண்டிங் நாயகன்… முதலாளி, அண்ணாச்சி, சாத்தூரார், கே.கே.எஸ்.எஸ்.ஆர் என்ற அடைமொழிகளுடன் வலம் வரும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர்…
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலூகா, பாளையம்பட்டியில் உள்ளது கோபாலபுரம். அந்தக் கோபாலபுரத்தின் பெருவிவசாயி ரெங்கநாதன் ரெட்டியார். அவருடைய மூத்தமகன் ராமச்சந்திரன். வானம்பார்த்த பூமியான கோபாலபுரத்தில் அப்போது நிலம் வைத்திருந்த ரெங்கநாதன் ரெட்டியாருக்கு விவசாயம் கைகொடுக்கவில்லை. அந்த நேரத்தில், அவருடைய தம்பி நாராயணன் ரெட்டியார் விருதுநகர் டவுனில் பஞ்சு மண்டி வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அந்தத் தொழிலில் நல்ல வருமானம் வந்த நாராயணன் ரெட்டியாருக்கு குழந்தை இல்லை. அதனால், தனது வியாபாரத்தையும், தன் சொத்துக்களையும் பார்த்துக் கொள்ள அண்ணன் மகன் ராமச்சந்திரனை தத்துக் கேட்டார். மகனின் எதிர்காலத்தை யோசித்த ரெங்கநாதன் ரெட்டியாரும் மகனைத் தத்துக் கொடுத்துவிட்டார். அதன்பிறகு, விருதுநகர் டவுனுக்கு வந்த ராமச்சந்திரன், சுப்பையா நாடார் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார். ஆனால், அதை முடிக்கவில்லை. பாதியிலேயே படிப்பை நிறுத்திய ராமச்சந்திரன், சித்தப்பாவுடன் சேர்ந்து பஞ்சு வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டார்.
பதின்ம வயதைத் தாண்டி, இளைஞராக வலம் வந்த ராமச்சந்திரனுக்கு ஆகிருதியான உடல்வாகு. பார்ப்பவர்களை மிரட்டும் முறுக்கு மீசை. பஞ்சு வியாபாரத்தில் கிடைத்த காசில் தோரணையாக புல்லட்டை வாங்கிக் கொண்டு ஊரில் வலம் வந்தவருக்கு நண்பர்கள் வட்டம் பெருகியது. அந்தக் காலத்தில், தோரணையான துடிப்பான இளைஞர்கள் பெரும்பாலும் இயல்பாக எம்.ஜி.ஆரின் ரசிகர்களாகவே இருந்தனர். அந்தவகையில் நமது ஹீரோ ராமச்சந்திரனும் எம்.ஜி.ஆர் ரசிகராகவே ஊருக்குள் வலம் வந்தார். ’தங்கக் கலசம்’ எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை ஊரில் தொடங்கினார். தலைவர் படம் ரிலீஸாகும் அன்று, கட்-அவுட்கள் வைத்து, பாலாபிஷேகம் ஏற்பாடு செய்து, நண்பர்களுடன் புல்லட் ஊர்வலமாக வரும் ராமச்சந்திரன், எதற்கும் துணிந்த இளைஞராகவும், எப்போதும் கூட்டத்தோடு வலம் வருபவராகவும் ஊருக்குள் மெல்ல மெல்ல ஃபார்ம் ஆனார்.
எம்.ஜி.ஆரின் வழியைப் பின்பற்றிய ராமச்சந்திரன்…
முழுநேர அரசியல்வாதியான தருணம்…
எம்.ஜி.ஆர் கொடுத்த அட்வைஸ்…
ஜெயலலிதா தலைமையில்… கூவத்தூரின் முன்னோடி…
கலவரங்களின் நாயகன்…
காரியம் முடிந்த தும் கழற்றிவிட்ட ஜெயல லிதா…
கருணாநிதியின் புகழாரம்… அழகிரியின் இகழாரம்…
தேர்தல் டெக்னிக்ஸ்…
சொத்துக்களும்,… சோகமும்…
பிள்ளைகளால் வந்த சோதனை…
கே.கே.எஸ்.எஸ்.ஆரின் தொடர்பான இந்த விஷயங்களை எல்லாம் ’Tamilnadunow’ சேனலில் வெளியாகியுள்ள மிஸ்டர்.மினிஸ்டர் எபிசோடைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.
Mr.Minister Full Video: