ஸ்ரேயா கோஷல்.. எந்த மியூசிக் டைரக்டருடன் சேரும்போது மேஜிக் நடக்கிறது?

ஸ்ரேயா கோஷல் செல்லமே செல்லம் பாட்டு பாடி தமிழ் சினிமாவுக்குள்ள வலது கால் எடுத்து வச்சு சரியா 20 வருசம் ஆகிடுச்சு. இத்தனை வருடத்துல தமிழ் சினிமாவோட முன்னணி இசையமைப்பாளர்கள் எல்லாரிடம் சேர்ந்து எக்கச்சக்க ஹிட் பாடல்கள் கொடுத்திருக்காங்க. இதுல ஸ்ரேயா கோஷல் யாரோட மியூஸிக்ல பாடுறப்போ அதிகமான மேஜிக் பாடல்கள் கிடைச்சிருக்கு அப்படிங்குற ஆர்டரைத்தான் இந்த கட்டுரைல நாம பார்க்கப்போறோம்.

ஜி.வி பிரகாஷ்

ஸ்ரேயா கோஷல் - ஜி.வி.பிரகாஷ்
ஸ்ரேயா கோஷல் – ஜி.வி.பிரகாஷ்

ஸ்ரேயா கோஷல் ரசிகர்களோட ஆல்டைம் ஃபேவரிட் சாங்ல கண்டிப்பா ‘உருகுதே மருகுதே’ இருக்கும். ‘சொக்கித் தானே போகிறேன்’ குரல் கேட்டு உருகிப்போனாங்க ரசிகர்கள். இதற்குப் பிறகு ஸ்ரேயா கோஷல் + ஜி.வி.பி காம்போல இன்னொரு சூப்பர் சாங்னா அங்காடித்தேடில ‘உன் பேரைச் சொல்லும்போதே’ பாட்டை சொல்லலாம். இந்த மாதிரி ரெண்டு மூணு பாடல்கள்தான் ஹிட்டுங்குறதால இந்த காம்போ 5வது இடத்தில் இருக்கு.

இளையராஜா

இளையராஜா
இளையராஜா

இளையராஜா இசைல ஸ்ரேயா கோஷல் கம்மியாதான் பாடியிருக்காங்க. ஆனா அதுலயே நிறைய மேஜிக்லாம் நடந்துச்சு. விருமாண்டி படத்துலயே ‘உன்னைவிட’, ‘சண்டியரே சண்டியரே’ அப்டினு ரெண்டு பாட்டு பாடியிருக்காங்க. ரெண்டுக்குமே தனி ரசிகர் பட்டாளமே இருக்கு. குறிப்பா உன்ன விட’ பாட்டு வேற லெவல் வைப் கொடுத்த பாட்டு. உருகி உருகி காதலிக்கும் சீரியஸ் லவ்வர்களோட ஆல்டைம் ஃபேவரைட். இந்தப் பாட்டை வைச்சே லவ் ப்ரபோஸ் பண்ணவங்களும் இருக்காங்கன்றதுதான் பாட்டோட ரீச்சுக்கு கண்முன் உதாரணம். பட்டி,தொட்டி தொடங்கி சிட்டிகள் வரை ஸ்ரேயா கோஷல் - கமல் வாய்ஸ் அப்படி ஒரு ஃபீலீங் கொடுத்தது. அதற்குப் பிறகு பிதாமகன்லஇளங்காத்து வீசுதே’வும் இந்த காம்போல இன்னொரு ஹிட். தொடர்ந்து இளையராஜா நிறைய படங்களுக்கு இசையமைக்கலைங்குறதால இந்த காம்போவும் அப்படியே நின்னுடுச்சு. அதனால இளையராஜா + ஸ்ரேயா காம்போ 4-வது இடத்தில இருக்கு.

யுவன் சங்கர் ராஜா

ஸ்ரேயா கோஷல் - யுவன்
ஸ்ரேயா கோஷல் – யுவன்

7ஜி ரெயின்போ காலனில நினைத்து நினைத்து, தாஸ் படத்துல சாமிகிட்ட சொல்லிப்புட்ட, சண்டக்கோழில தாவணி போட்ட தீபாவளி, பருத்திவீரன்ல அய்யய்யோ, என்.ஜி.கேல அன்பே பேரன்பே… இப்படி யுவன், ஸ்ரேயா கோஷல் சேரும்போதெல்லாம் நிறைய மேஜிக் நடந்திருக்கு. யுவன் மியூஸிக்னாலே அடிக்ட்டா இருக்க அவரோட வெறித்தனமான ஃபேன்ஸுக்கு இந்த காம்போ, மனசுக்கு அவ்வளவு நெருக்கமானது. நினைத்து நினைத்துப் பார்த்தேன் பாட்டுலாம் என்னிக்குமே ஒன் சைட் லவ்வர்ஸோட லவ் ஆந்தம்தான். அதேமாதிரி, கிராமத்துக்குக் காதலிகளைக் கொண்டாடித் தீர்க்கும் லவ்வர்களுக்கு தாவணி போட்ட தீபாவளி பாடல் என்னிக்குமே எனர்ஜி குறையாத ட்ரீட். `அய்யய்யோ’ பாட்டை இன்னிக்குக் கேட்டாலும் கூஸ் பம்ப்ஸ் மொமண்ட் நிச்சயம். இப்படி யுவன் – ஸ்ரேயா கோஷல் காம்போ தமிழ் சினிமா மியூசிக்குக்குக் கொடுத்தது எவர்கிரீன் ஹிட்டுகள். ஆனால், இதைத்தாண்டியும் டாப் 2ல ரெண்டு பேரு இருக்காங்க.

ரஹ்மான் & இமான்

இமான் + ஸ்ரேயா, ரஹ்மான் + ஸ்ரேயா இந்த ரெண்டுல எந்தக் காம்போவ முதல் இடத்தில வைக்கிறது, யாருக்கு ரெண்டாவது இடம் கொடுக்கிறதுனு குழப்பமா இருக்கு. ஏன்னா நிறைய நல்ல பாடல்களை ரெண்டு பேருமே கொடுத்திருக்காங்க.

ஏ.ஆர்.ரஹ்மான் - ஸ்ரேயா கோஷல்
ஏ.ஆர்.ரஹ்மான் – ஸ்ரேயா கோஷல்

ஹீரோயின் சோலோ சாங்ஸ் எடுத்துக்கிட்டா இமான் இசைல சஹாயனே சஹாயனே, அம்மாடி அம்மாடி, என்னடா என்னடா இந்த மாதிரி நிறைய பாடியிருக்காங்க. இதே போல ரஹ்மான் இசைல முன்பே வா, நன்னாரே, மன்னிப்பாயானு நிறைய சோலோ சாங்ஸ் பாடி அசத்தியிருக்காங்க.

டூயட் சாங்ஸ் போனா இமான் இசைல சொல்லிட்டா அவ காதல, கண்டாங்கி கண்டாங்கி, மயிலாஞ்சி வரைக்கும் எல்லாமே ஹிட்தான். அதே ரஹ்மான் இசைல காதல் அணுக்கள், பூக்களே சற்று ஓய்வெடுங்கள், நீதானே நீதானேனு அங்கயும் ஹிட்ஸ்தான்.

ஸ்ரேயா கோஷல் - டி.இமான்
ஸ்ரேயா கோஷல் – டி.இமான்

இந்த பக்கம் இமான் கானா கானா தெலுங்கானானு வித்தியாசமா பாட வச்சிருக்காருன்னா அந்தப் பக்கம் ரஹ்மான் அழகின்னா அழகி பாட வச்சிருக்காரு.

அதனால இமான் – ஸ்ரேயா கூட்டணியா, ரஹ்மான் – ஸ்ரேயா கூட்டணியா எந்தக் கூட்டணி முதல் இடத்துல வைக்கிறதுனு குழப்பமா இருக்கு. நீங்களே பார்த்து ஒரு நல்ல தீர்ப்பா சொல்லுங்க மகா ஜனங்களே..!

Also Read – தமிழ் சினிமாவில் ஆளுமை மிக்க 9 பெண் கதாபாத்திரங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top