அமீர் - கார்த்தி

அமீர் – கார்த்தி மோதல்?.. உண்மையான பின்னணி என்ன?

நந்தா ஷூட்டிங் ஸ்பாட் அது. இயக்குநர் பாலா, சூர்யாவை இயக்கிட்டு இருக்கார். அப்போ பாலா எதிர்பார்த்த ரியாக்‌ஷன் சூர்யாகிட்ட இருந்து வரலை. அப்போ பாலா செம டென்சனாகுறார். இதைப் பார்த்த அந்தப்படத்தோட அசோசியேட் இயக்குநர் சூர்யாவை கேமரா பின்னால கூட்டிட்டுப் போய் அவர் இப்படி ரியாக்‌ஷன் எதிர்பார்க்கிறார். அதனால அங்க இந்த மாதிரி எக்ஸ்பிரசன்ஸ் கொடுங்கனு சொல்லி ஐடியா கொடுக்கிறார். சூர்யாவும் அப்படியே ரியாக்‌ஷன் தர, ஷாட் ஓகே ஆகுது. அதைப் பார்த்த சூர்யா அண்ட் ஃபேமிலி அடுத்தப் படத்தை நீங்களே இயக்கிடுங்கனு சொல்றார். அப்படி தனியா கூட்டிட்டுப்போய் சொன்ன அசோசியேட் இயக்குநர் பெயர், அமீர். அவங்க ரெண்டுபேரும் சேர்ந்து பண்ண படம்தான் மெளனம் பேசியதே. அப்படியொரு பாத் ப்ரேக்கிங் மூவி அது.

இன்னைக்கு முரட்டு சிங்கிள்கள் நிறையபேர் சுத்திட்டு இருக்கலாம். ஆனா அதுக்கெல்லாம் 20 வருஷத்துக்கு முன்னாலயே அதை கெளதம் கேரக்டர்ல நடமாட வைச்சிருந்தார், அமீர். அப்படி தொடங்குன அமீரோட பயணம் இன்னைக்கு வரைக்கும் போயிட்டிருக்கு. இடையில அவருக்கு ஒரு இடையூறு கார்த்தி-ஞானவேல் ராஜாவால வந்தது. அது என்ன? இன்னைக்கும் அமீருக்கும், கார்த்திக்கும் இடையில என்ன பிரச்னை அப்படிங்குறதைப் பத்தித்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.

அடுத்ததா இயக்கின ராம் படம் அமீரோட சொந்தப்படம். இதுல அமீர் டிரை பண்ணது போல்டான அட்டெம்ப்ட். விமர்சன ரீதியா பேசப்பட்டாலும், எதிர்பார்த்த வசூல் தரலை. முதல் படத்துல கவனிக்க வைச்சவர் அடுத்தப் படத்துல தமிழ் சினிமாவோட முக்கிய இயக்குநரா மாறின தருணம் அது. அடுத்ததா சூர்யா அண்ட் ஃபேமிலி அமீரை கூப்பிட்டு கார்த்தியை ஹீரோவாக்கலாம்னு இருக்கோம். நீங்க படம் பண்ணுங்கனு சொல்ல, அப்படித்தான் ஆரம்பிச்சது பருத்திவீரன். அமீர் நேருக்கு நேராவே, `நான் இங்க இருக்க மாதிரி ஷூட்ல இருக்க மாட்டேன். அங்க வேற மாதிரியான முகம் என்னோடது’னு சொல்லித்தான் ஆரம்பிச்சார். ரொம்ப நேர்த்தியா ஒவ்வொரு ஷாட்டையும் பார்த்துப் பார்த்து செதுக்கினார். நாயகன் புதுமுகம் அப்படிங்குறதால கொஞ்சகாலம் படப்பிடிப்பு தாமதமும் ஆனது. பட்ஜெட்டும் சொன்னதைவிட அதிகமாவே ஆனது. இதை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில அமீர்தான் முதல்ல தயாரிச்சார்.

இந்த முறை கையிலெடுத்தது, கிராமம் சார்ந்த மண்ணின் கதை. படம் முடிஞ்சு மொத்த குடும்பமும் பார்க்கிறாங்க. படம் பிடிச்சுப்போச்சு. அடுத்ததா அமீர்கிட்ட இந்த படத்துக்கு பட்ஜெட் அதிகமாகிடுச்சு. அதனால ஞானவேலுக்கு படத்தைக் கைமாத்திடுங்கனு சொல்றாங்க எல்லோரும். கொதிச்சுப் போனார் அமீர். இது ஒரு மோதலா மாற பஞ்சாயத்து தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போகுது. ஒரு பக்கம் ஞானவேல் ராஜா, இன்னொரு பக்கம் அமீர். அமீர் பெயர்ல புகார் கொடுக்கப்பட்டு அமீரைச் சுத்தி பேசிட்டிருக்காங்க எல்லோரும். தயாரிப்பு செலவு கூட போயிடுச்சு. அதனால படத்தை என்பெயர்ல மாத்தித் தரணும்னு ஞானவேல் ராஜா பேசிட்டிருக்க, படத்தை முழுக்க தயாரிச்சது, சென்சார் வாங்கினது நான்னு ரெண்டு தரப்புலேயும் மாத்தி மாத்தி ஆர்க்யூமெண்ட் போனது. கடைசியா ஞானவேல் ராஜாவுக்கு படத்தை தரணும்னு முடிவாக, வேற வழியே இல்லாம அமீர் கையெழுத்துப் போட்டுட்டு வந்துட்டார். படமும் ஞானவேல் ராஜா தயாரிப்புனு மாறி ரிலீஸ் ஆச்சு. படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி. ரஜினியை சந்திச்ச அமீர்கிட்ட கமல் தயாரிப்புல நான் நடிக்க நீங்க படம் பண்றீங்களானு கேட்க கரும்புத் தின்னகூலியா வாங்க பண்ணலாம்னு அமீரும் சொல்ல அப்படி ஒரு படம் ஆரம்பிக்கிறதா இருந்தது. ஆனா அதுக்கப்புறம் அமீர் யோகியில பிசியாகிட்டதால படம் பண்ண முடியாம போயிடுச்சு. ரிலீஸ் ஆனதுக்குப் பின்னால அமீருக்கு சேரவேண்டிய ஒரு கோடிக்கும் மேலான பணத்தை ஞானவேல் தரப்பு திருப்பிக் கொடுக்கலை. அதுக்கப்புறம் டென்சனான அமீர் ஒரு கட்டத்துல தயாரிப்பாளர் சங்கத்துக்கிட்ட கேட்டப்போ, நாங்க அவரை ரீச் பண்ணவே முடியலைனு சொல்லி பதில் கொடுத்தாங்க. அதுக்கப்புறம்தான் அமீர் கோர்ட்டுக்கு போனார்.

அப்போ ஆரம்பிச்ச வழக்கு 17 வருஷமா இன்னும் நிலுவையில இருக்கு. அமீர் மட்டும் போய் ஆஜராகிட்டு வர்றார். இதுல சூர்யாவும்-கார்த்தியும் நினைச்சிருந்தா, என்னைக்கோ இதை முடிச்சிருக்கலாம். ஆனா ரெண்டுபேரும் தலையிடவே இல்லை. இப்போ கார்த்தி 25-ம் பட விழாவுல அமீரை கார்த்தி முறைப்படி அழைக்கவில்லை. சூர்யாவும், கார்த்தியும் அமீரைப் பத்தி ஸ்டேஜ்ல பேசினாங்க. அதுக்கு பதிலும் மாயவலை பிரஸ்மீட்ல சொன்னார், அமீர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top