சிவகார்த்திகேயன் - முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணி… ஏன் ஸ்பெஷல்?!

ஒரே டைரக்டர்.. நாலு ஹீரோக்களோட கரியர்ல ஒரு முக்கியமான ஐகானிக் படத்தை தரமுடியும்.. அதுல மூணு ஹீரோக்களோட கரியர் ரூட்டையே மாத்திவிடமுடியும்னா அது டைரக்டர் முருகதாஸால மட்டும்தான் முடியும். இப்படிப்பட்ட ஒரு ஸ்டார் டைரக்டருக்கு இடையில ஒரு சின்ன சறுக்கல்… அதிலிருந்து அவர் மீண்டு இதோ.. தனது அடுத்தப் படத்துல சிவகார்த்திகேயனோட இணையுறாரு. முருகதாஸ் ஏன் எல்லா ஹீரோக்களும் அவசியமான ஒரு டைரக்டரா இருக்காரு..? அவரோட பலம் என்ன.. எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு ஐகானிக் படத்தைத் தந்த முருகதாஸ் சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாராங்கிறதை பத்திலாம்தான் இப்போ நாம பாக்கப்போறோம். கூடவே, ஹாலிவுட் டைரக்டர் கிறிஸ்டோஃபர் நோலனோட கம்பேர் பண்ணப்படுற முருகதாஸோட கஜினி படத்தைப் பத்தி, நோலன் என்ன கமெண்ட் அடிச்சாருங்கிறதையும் இந்த வீடியோவுல பாக்கப்போறோம்.

2000-ல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திகிட்ட குரங்கை ஹீரோவா வெச்சு ஒரு கதையை சொல்லி அதை படமாக்க ஃபாலோ பண்ணிக்கிட்டிருந்தாரு ஏ.ஆர்.முருகதாஸ். அந்த டைம்ல அஜித் – பிரவீன்காந்தி காம்போவுல ஒரு படம் ஆரம்பிக்கிறதா இருந்து அது கடைசி நேரத்துல டிராப் ஆகிடுது. அப்போதான் அந்த டேட்ஸ் வேஸ்ட் ஆகிடக்கூடாதே உடனே ஷூட்டிங் போகனுமே வேற யாராவது டைரக்டர் இருக்காங்களான்னு பாத்தப்போதான் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு முருகதாஸ் ஞாபகம் வந்திருக்கு. அப்போ அவரைக் கூப்பிட்டு கேட்டப்போ அவர் சொன்ன கதைதான் தீனா. அது அஜித்துக்கும் பிடிச்சுப்போக தீனா ஆரம்பமாகி 2001-ல ரிலீஸ் ஆகுது. இந்தப் படம்தான் அஜித்தை ஒரு பிராப்பர் ஆக்சன் ஹீரோவா மாத்துனுச்சுன்னும் தலங்கிற அடையாளத்தை அவருக்கு தந்துச்சுன்னு சொல்லலாம். குறிப்பா ஒரு நல்ல கமர்சியல் டைரக்டர் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருக்காங்கிற பாராட்டும் இயக்குநர் முருகதாஸுக்கு கிடைச்சுது.

தீனா படத்துக்கப்புறம் முருகதாஸ் அப்ரோச் பண்ணது கேப்டன் விஜயகாந்தை. அப்படி தொடங்குன ரமணா படம் ஷூட்டிங்க்ல இருக்கும்போதே பயங்கர எதிர்பார்ப்புக்குள்ளான படமா ஆச்சு. அதுகேத்தமாதிரி ரமணா படமும் சும்மா நறுக்குன்னு இருக்கவும் படம் பளாக்பஸ்டர் ஆச்சு. இன்னும் சொல்லப்போனா விஜயகாந்தோட சினிமா கரியர்ல ரமணாதான் கடைசி ப்ராப்பர் ஹிட் படமா இப்போவரைக்கும் இருக்குன்னும் சொல்லலாம். அதுமட்டுமில்லாம ரமணா படத்தை, சிரஞ்சீவி, விஷ்னுவர்தன், மிதுன் சக்ரபோர்த்தி, அக்சய் குமார்னு பல பெரிய ஹீரோக்கள் தங்களோட மொழிகள்ல ரீமேக் பண்ணப்போ இங்க இருந்த ஒரிஜினல் கிளைமேக்ஸை பயன்படுத்த பயந்து ஹீரோ கடைசியில சாகாத மாதிரி காட்டிக்கிட்டாங்க. இத்தனைக்கும் தமிழ்ல இந்தப் படம் ஹிட் ஆகி எக்ஸாம்பிளா இருக்கும்போதும் அதை செய்ய பயந்தாங்க. ஆனா முருகதாஸோ எந்த எக்ஸாம்பிளும் இல்லாம, அதை ஒரு கதையா எழுதி, கேப்டன் மாதிரி ஒரு பெரிய மாஸ் ஹீரோவை கன்வின்ஸ் பண்ணி, அதை நினைச்சமாதிரி எடுத்து ஜெயிக்கவும் செஞ்சார்னா அவரோட டேலண்டும் கான்ஃபிடெண்ட் லெவல்லும் எந்த அளவுக்கு இருக்கும்னு பாத்துக்கோங்க.

ரமணா படத்துக்கப்புறம் முருகதாஸ் டைரக்சன்ல விக்ரம் நடிக்கிறதா ‘வரதன்’ ங்கிற படத்தை ஆரம்பிச்சாங்க. இந்தப் படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறதாவும் இருந்துச்சு. ஆனா கடைசி நேரத்துல அந்த ப்ராஜெக்ட் டிராப் ஆச்சு. அதுக்கப்புறம் முருகதாஸ், திரும்பவும் அஜித்தோடவே இணைஞ்சு மிரட்டல் படத்தை ஆரம்பிச்சாரு. ஆனா அந்தப் ப்ராஜெக்டும் ஃபோட்டோஷூட் வரைக்கும் போய் ஃபர்ஸ்ட் லுக்லாம் ரிலீஸ் பண்ணி கடைசியில டிராப் ஆச்சு. அதுக்கப்புறம் அந்த கதையில மாதவன், விக்ரம், ஸ்ரீகாந்த்னு 12 ஹீரோக்களை இவர் அப்ரோச் பண்ண, எல்லோருக்குமே கதை பிடிச்சிருந்தாலும் படத்துல மொட்டை அடிச்சுட்டு வரணுமேன்னு தயக்கம் காட்டுனாங்க. அப்போதான் இந்த பிராஜெக்ட்ல கடைசியா கதையைக் கேட்ட சூர்யா நடிக்க சம்மதிக்கிறாரு. அவருக்கும் முருகதாஸுக்கும் நல்லாவே சிங் ஆக, அசின், ஹாரீஸ் ஜெயராஜ், எடிட்டர் ஆண்டனி மாதிரியான திறமையாளர்கள் ப்ராஜெக்ட் உள்ளே வர, அவர் மனசுல நினைச்ச மாதிரியே படத்தை எடுக்க முடிஞ்சுது. படமும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் ஆச்சு. அதுவரைக்கும் ரஃப் & டஃபாவும் நல்ல பெர்ஃபாமராவும் தெரிஞ்ச சூர்யா, முதல்முறையா கஜினியில செம்ம ஸ்மார்ட்டாவும் ரொமாண்டிக்காவும் தெரிஞ்சாரு. அந்த வகையில கஜினி நிச்சயமா சூர்யாவுக்கு ஒரு முக்கியமான படம்தான்.

கஜினிக்கு அப்புறம் தெலுங்குக்குப் போன முருகதாஸ், அங்க சிரஞ்சீவிய வெச்சு ஸ்டாலின் படத்தை எடுத்து அந்தப் படமும் அங்க மிகப்பெரிய ஹிட் ஆகுது. இதுக்கு இடையில கஜினி படத்தை பார்த்த அமீர்கான் அதை ஹிந்தியில ரீமேக் பண்ணி நடிக்கனும்னு முடிவு பண்றாரு. இது அமீர்கான் ஃபேன்ஸுக்கே பெரிய ஷாக்காதான் இருந்துச்சு. ஏன்னா.. அமீர்கான் அதுவரைக்கும் தன்னோட கரியர்ல எந்த ஒரு ரீமேக் படத்துலயும் நடிச்சதில்ல, அவர் ஒரு படத்தைப் பாத்து இதுல நாம நடிக்கனும்னு முதன்முறையா ஆசைப்பட்டது கஜினி படம் பாத்துட்டுதான். இப்படி ஓப்பனிங்கே ஆர்ப்பாட்டமா தொடங்குன இந்த ப்ராஜெக்ட், மிக பிரம்மாண்டமா படமா மாறுனுச்சு. நாளுக்கு நாள் உலகம் சுருங்கிக்கிட்டு வர்ற இன்னைக்கே ஒரு தமிழ் டைரக்டர் பாலிவுட்ல படம் பண்றது பெரிய விசயமா பாக்கப்படுறப்போ, 2008-ல அது எவ்வளவு பெரிய விசயமா இருந்திருக்கும்னு பாத்துக்கோங்க. இன்னைக்கு ஜவான் படத்துல ஹீரோவைத் தவிர்த்து பெரும்பாலானா கலைஞர்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவங்கன்னு ஆச்சர்யமா பேசுறப்போ இதையெல்லாம் ஹிந்தி கஜினியிலேயே ஆமிர்கான் தவிர்த்து ஹீரோயின், கேமராமேன், மியூசிக் டைரக்டர், எடிட்டர்னு எல்லாருமே தென்னிந்தியாவை சேர்ந்தவங்களா போட்டு முருகதாஸ் மாஸ் காட்டிட்டாரு. அதுமட்டுமில்லாம இந்திய சினிமா வரலாற்றுல முதல்முறையா 100 கோடி கலெக்ட் பண்ன படமும் அதுதாங்கிற பேரையும் சம்பாதிச்சுது. கஜினி படம் தமிழ்ல வந்தப்போவே அது மெமண்டோ படத்தோட தழுவல்னு கிளம்புன சர்ச்சை ஹிந்திக்கு போனப்போ இன்னும் வலுத்துச்சு. இதைப் பத்தி கேள்விப்பட்ட மெமண்டோ படத்தோட டைரக்டர் கிறிஸ்டோபர் நோலன், ‘நான் அந்தப் படத்தைப் பத்தி கேள்விப்பட்டேன். அங்க எல்லோருக்கும் பிடிச்சிருக்கு, படம் ஜெயிச்சிருக்குன்னும் சொன்னாங்க. எனக்கு இதுல மகிழ்ச்சிதான். நானும் அந்தப் படத்தை சீக்கிரம் பாப்பேன்’ அப்படினு சொல்லியிருந்தாரு.

இதுக்கு அப்புறம் தமிழ்ல திரும்பவும் முருகதாஸ் எண்டிரி கொடுத்தது ஏழாம் அறிவு படம் மூலமாதான். சூர்யாகூட திரும்ப முருகதாஸ் சேர்றாரு, ரெட் ஜெயண்டோட பெரிய பட்ஜெட் தயாரிப்பு, போதி தர்மர் பத்தின படம், கமல் பொண்ணு ஸ்ருதி ஹாசன் ஹீரோயினா அறிமுகமாகுறாங்கன்னு பல பரபரப்பு விசயங்கள் இந்தப் படத்துக்கு கிளம்புனுச்சு. பெரும் எதிர்பார்ப்புகளோட வெளியான ஏழாம் அறிவு வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாவும் முருகதாஸோட முந்தைய பட வெற்றிகள் அளவுக்கு பெறலைன்னுதான் சொல்லனும்.

இதுக்கு இடையில ஏழாம் அறிவு ரிலீஸுக்கு முன்னாடியே முருகதாஸ் டைரக்சன்ல விஜய் நடிக்க பேச்சுவார்த்தை நடந்திருந்த நிலையில ஏழாம் அறிவு ரிலீஸுக்கப்புறம் உடனடியா துப்பாக்கி தொடங்கப்பட்டுச்சு. தொடர்ந்து வில்லு, குருவி, சுறா மாதிரியான படங்கள்ல நடிச்சு, விஜய்யோட தீவிர ரசிகர்களே வெளியில சொல்லிக்க முடியாத மன வேதனையில இருந்த டைம்ல இப்படியொரு காம்போ சேருதுங்கிற நியுஸ் வரவும் மொத்த விஜய் ஃபேன்ஸும் அவ்வளவு ஹேப்பியானாங்க. அதுக்கேத்த மாதிரி படமும் வேற லெவல்ல இருக்கவும் விஜய் ஃபேன்ஸ் மட்டுமில்லாம தமிழ்நாடே துப்பாக்கியே கொண்டாடி தீர்த்துச்சு. அதுமட்டுமில்லாம இன்னைக்கு விஜய்க்கிட்ட நாம பாக்குற ஒரு சூப்பர் ஸ்டார்டம் இமேஜ் தொடங்குனதும் துப்பாக்கியிலேர்ந்துதான். அந்த வகையில இன்னைக்கு இருக்குற விஜய்யை அடையாளம் காட்டுனது துப்பாக்கி படம்தாங்கிறதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்ல. துப்பாக்கிக்கு அப்புறம் ஹிந்தியில அந்தப் படத்தை அக்சய் குமாரை வெச்சு ரீமேக் பண்ணி அங்கயும் ஹிட் கொடுத்துட்டு திரும்ப தமிழுக்கு வந்தாரு முருகதாஸ்.

இந்த முறை துப்பாக்கி காம்போ திரும்ப கத்தியில சேர, எதிர்பார்ப்பு எகிற ஆரம்பிச்சுது. விவசாயிகளோட பிரச்சனைகள், குடிநீர் பிரச்சனை, கம்ப்யூனிஸம்னு ஒரே படத்துல பல கருத்துக்களை ரொம்பவே ஸ்டிராங்கா சொல்லியிருந்திருப்பாரு முருகதாஸ். அதுவும் அந்த பிரஸ்மீட் சீன்லாம் வேற லெவல். சரியா சொல்லனும்னா கத்திக்கு அப்புறம்தான் கோலிவுட் டைரக்டர்ஸ் எல்லாருமே விவசாயிகளைப் பத்தி படம் பண்னவும் அதுல வர்ற ஹீரோக்கள் எல்லாருமே மறக்காம பிரஸ் மீட்ல ஆக்ரோசமா பேசி நடிக்கவும் ஆரம்பிச்சாங்க. அதுமட்டுமில்லாம கத்தி படம்தான் ஸ்மோக்கிங், டிரிங்கிங் பத்தி டிஸ்கிளைமர் போடாம வெளியான முதல் தமிழ் படம்ங்கிற பெருமையையும் வாங்குனுச்சு. இதை முருகதாஸ் திட்டமிட்டே படத்துல ஒரு ஃபிரேம்லகூட யாரும் ஸ்மோக் பண்ற மாதிரியோ குடிக்கிற மாதிரியோ காட்டாம எடுத்திருப்பாரு.

இப்படி 2014 வரைக்கும் முருகதாஸுக்கு எல்லாமே ஸ்மூத்தா தொட்டதெல்லாம் சக்ஸஸாதான் போய்க்கிட்டிருந்துச்சு. அதுக்கப்புறம்தான் வினையே ஆரம்பிச்சுது. தமிழ்ல அருள்நிதி நடிச்ச மௌணகுரு படத்தை ஹிந்தியில சோனாக்சி சின்கா நடிப்புல அகிரான்னு ரீமேக் பண்னாரு. ஆனா படம் அங்க ஃபிளாப் ஆச்சு. அதுக்கப்புறம் 2017-ல மகேஷ் பாபுவை வெச்சு தமிழ், தெலுங்கு ரெண்டு மொழிகள்ல இவர் ஆரம்பிச்ச ஸ்பைடர் படமும் ஃபிளாப் ஆச்சு. தமிழ்ல மகேஷ்பாபு புதுமுகம், தெலுங்குல அவர் சூப்பர் ஸ்டார் அப்படிங்கிற இமேஜ் குழப்பம் இருந்ததும் திரைக்கதையும் ரொம்ப வீக்கா இருந்ததும் படம் தோல்வியடைய மிகப்பெரிய காரணமா இருந்துச்சு. இதுக்கப்புறம் வெற்றிக்கூட்டணியான விஜய் முருகதாஸ் கூட்டணி மூணாவது முறையா சர்க்கார் மூலமா இணைஞ்சாங்க. விஜய் ஆடியோ லாஞ்ச் ஸ்பீச், அரசியல் எதிர்ப்புகள், சோலோ ரிலீஸ், பிரம்மாண்ட ப்ரோமோசன், சர்ச்சைகள்னு ஒரு மாதிரி சர்க்கார் படம் பரபரப்போ வெளியாகி வசூலை வாரிக் குவிச்சாலும் விஜய் ரசிகர்களுக்கே அந்தப் படம் ஒரு நிறைவைக் கொடுக்கலைங்கிறதுதான் எதார்த்தம். சர்க்காருக்கு அப்புறம் முருகதாஸ் தன்னோட ஃபேவரிட் ஹீரோவான ரஜினிகூட தர்பார் மூலம் இணைஞ்சாரு. ஆனா டைட்டில் தொடங்கி, ரஜினி லுக், ஸாங்க்ஸ், புரோமோசன்ஸ்னு எதுலயுமே அந்தப் படம் மேல ஒரு பெரிய ஹைப் கிரியேட் ஆகாமலேயே ரிலீஸ் ஆகி, படமும் ஃபிளாப் ஆச்சு.

Also Read – `லியோ’ சினிமோட்டோகிராஃபர் மனோஜ் பரமஹம்சா-வின் அட்டகாசமான சினிமா ஜர்னி!

இப்படி முருகதாஸ் தொடர்ந்து சறுக்கல்கள்ல இருந்தாலும் விஜய் நான்காவது முறையா அவரோட இணைய ரெடியாதான் இருந்தாரு. ஆல்மோஸ்ட் எல்லாம் ஓகே ஆகி, இதோ அறிவிப்பு வரப்போகுதுங்கிற மாதிரியான சிச்சுவேசன்ல சம்பளப் பிரச்சனை, பட்ஜெட் பிரச்சனை, சன் பிக்சர்ஸோட கருத்து வேறுபாடுன்னு பல காரணங்களால அந்த ப்ராஜெக்ட்ல இருந்து முருகதாஸ் விலகவேண்டிய நிலைமை வருது.

அதுக்கப்புறம் என்ன செய்றதுன்னே தெரியாம அவர் இருந்தப்போதான் தான் முதன்முதலா படம் பண்ன நினைச்ச அந்த குரங்கு கதையை இப்போ உள்ள டெக்னாலஜிக்கும் மார்க்கெட்டுக்கும் ஏத்த மாதிரி ஒரு வேர்ல்ட் வைட் ப்ராஜெக்டா பெருசா பண்ணிடலாம்னு ப்ளான் பண்ணாரு முருகதாஸ். அதுக்கேத்தமாதிரி ஒரு ஹாலிவுட் சிஜி கம்பெனிகூட டை-அப் பண்ணி, அவங்களுக்கு ஸ்கிரிப்ட் சொல்லி இம்ப்ரெஸ் பண்ணி சத்தம் இல்லாம வேலைகள் தொடங்குனுச்சு. ஆனா அதுக்கப்புறம் ஏனோ அந்த சிஜி கம்பெனி பெருசா ஆர்வம் காட்டாம இழுத்தடிக்க ஆரம்பிச்சாங்க. ஏற்கெனவே விஜய் படத்துக்கான கதை தயாரிப்புல ஒரு வருசம், இந்த ப்ராஜெக்டுக்காக 2 வருசம்னு மூணு வருசம் ஓடியிருக்க.. இனிமே வெயிட் பண்ணா வேலைக்காகதுன்னுதான் சிவகார்த்திகேயனை அப்ரோச் பண்ணி கதை சொல்லியிருக்கிறாரு முருகதாஸ். தன்னோட சினிமா கரியர் தொடங்கும்போது ஷங்கர், முருகதாஸ் இந்த ரெண்டு பேர் டைரக்சன்ல எப்படியாவது நடிச்சுடனும்னு சிவகார்த்திகேயன் லட்சியமா வெச்சிருக்கிறதால உடனே அவரும் அதுல நடிக்க ஆர்வம் ஆனாரு. இந்தக் கதை ஹிந்தி கஜினிக்கு அப்புறம் ஷாரூக் கானை வெச்சு ஹிந்தியில பண்ணலாம்னு முருகதாஸ் எழுதுன கதையாம். ரொமாண்டிக்காவும் அதேசமயம் ஆக்சனாவும் இருக்குற இந்த கதை தமிழ்ல சிவகார்த்திகேயனுக்குதான் பக்காவா இருக்கும்ங்கிறது முருகதாஸோட கணிப்பு.

இன்னைக்கு தேதிக்கு தான் யாருன்னு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துல முருகதாஸ் இருந்தாலும் இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு ஆக்சன் ஹீரோவா நெக்ஸ்ட் லெவல் போக ஒரு சரியான படம் அமையலங்கிற குறைய நீக்குற ஒரு படமாவும் இது இருக்கணும்ங்கிற எதிர்பார்ப்பும் அதிகமா இருக்கு. இந்த ப்ராஜெக்ட் மூலமா இது ரெண்டுமே கண்டிப்பா நடக்கும்னு எல்லாருமே நம்புவோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top