என்னைத்தையாவது சொல்லுங்க.. இந்தி கத்துக்கிட்டா இவ்வளவு நன்மைகளா?

“இந்தி படிக்க  என்ன கேடு?”, “சரவண பவன்ல சாப்பிட இந்தி தெரியணும்”, “இந்தி பேசுனா பாலியல் வன்கொடுமை செய்ய மாட்டாங்க” – இப்படி அரிய கருத்துகளை பா.ஜ.க ஆதரவாளர்கள் சொல்லிருக்காங்க. இந்தி கத்துக்கிட்டா என்னலாம் நன்மை இருக்கு, அரசியல் தலைவர்கள் என்னலாம் சொல்லிருக்காங்க. மீம்ஸ்லலாம் என்ன பேசிக்கிறாங்க. இதெல்லாம்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

அலிஷா அப்துல்லா - இந்தி
அலிஷா அப்துல்லா – இந்தி

பா.ஜ.க மாநில விளையாட்டுப் பிரிவு செயலாளர் அலிஷா அப்துல்லா (நான் ரோஸ்ட் வீடியோ போடுறேன்னு வைங்க. அந்தக் கட்சில போய் சேர்ந்தா, எனக்கு ரோஸ்ட் வீடியோ செயலாளர்னு ஒரு பதவி கொடுப்பாங்க) சரி, அவங்க, இந்தி ஏன் கத்துக்கணும்னு சமீபத்துல காரணம் ஒண்ணு சொல்லியிருந்தாங்க. “தமிழ்நாட்டுல பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கு. மேல நம்ம போகும்போது பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா, இல்லையானு நமக்கு தெரியாது. டெல்லில நீங்க நடந்து போகும்போது 4 பசங்க வந்து டார்ச்சர் பண்றாங்கனா, உங்களுக்கு இந்தி தெரியும்னா, நீங்க கெட்ட வார்த்தை பேசலாம், கத்தலாம், எஸ்கேப் ஆகலாம்”னு சொல்லுவாங்க. கத்துறதுக்கு எதுக்கு லாங்குவேஜ். சரி, அதை விடுவோம். மேல, அதாவது நீங்க சொல்ற வடமாநிலங்கள்ல பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைனா, இந்தி கத்துக்கணுமா? அங்க இருக்குற அரசுகள் பெண்களோட பாதுகாப்புக்காக நடவடிக்கைகள் எடுக்கணுமா? எல்லாத்தையும்விட அதிகமான பாலியல் வன்கொடுமை வழக்குகள் இந்தி தெரிஞ்ச வடக்கு பக்கத்துல வாழுற பெண்களுக்கு நடக்குறதாதான் சொல்லப்படுது. தமிழ்நாட்டுல வந்து இந்த மாநிலத்துலயே பதவில இருந்து, தமிழுக்கு அதிகமான ஃபோகஸ் கொடுக்காதீங்கனு சொல்றாங்க. தமிழ்நாட்டுல தமிழ் படிக்கிறதை கட்டாயமாக்கக்கூடாது. இந்தி படிக்கிறதை கட்டாயமாக்கணும்னு சொல்றாங்க. இந்த கொடுமையெல்லாம் எங்கப் போய் சொல்ல?

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

அலிஷா அடுக்கடுக்கா அடிச்சு விட்டதும், நம்ம எஸ்.வி.சேகர் சொன்னதுலாம் தஞ்சாவூர் கல்வெட்டுல அழியாமல் அப்படியே இருக்குறது நியாபகம் வந்துச்சு. தமிழ்நாட்டுல இந்தி படிக்கிறதுக்கு என்ன கேடுனு எஸ்.வி.சேகர் கேட்ட கேள்வியை அவ்வளவு சீக்கிரம் யாராலயும் மறந்திருக்க முடியாது. அதுமட்டுமில்ல ஒரு நேர்காணல்ல, “நம்மள அடிமை படுத்துன ஆங்கிலேயர்களோட மொழியை வெட்கம் இல்லாமல் படிக்கிறோம். இந்தியால நிறைய பேருக்கு தெரிஞ்ச இந்தியை படிக்கிறதுல என்ன தப்பு? வடமாநிலங்கள்ல சக்ஸஸா இருக்குற நபர்களைப் போய் கேளுங்க. இந்தி படிக்காதீங்கனு சொன்னா, கண்ணத்துலயே அறைவாங்க”னு பேசியிருப்பாரு. அவர் சொன்னதுலயே  ஹைலைட் விஷயம், சரவண பவன்ல போய் எக்ஸ்ட்ரா சட்னி, சாம்பார் வாங்கணும்னாகூட இந்தி தெரியணும்னு சொன்னதுதான். மனுஷனை அடுத்த கொஞ்ச நாளைக்கு இந்த ஸ்டேட்மென்டுக்காக வைச்சு செஞ்சாங்க. இந்தி மொழியை ஏன் கத்துக்கணும்னு கவித்துவமா ஒண்ணு சொல்லுவாரு. “தாய்மொழி கண் போன்றது. மற்ற மொழிகள் கண்ணாடி போன்றது. கண்ணாடி இல்லாமல் மனுஷனால பார்க்க முடியும். (பார்க்க முடியும்ல அப்புறம் எதுக்கு கண்ணாடி?) தமிழ்நாட்டுலயே வாழப்போறேன்னு சொன்னா தமிழ் மட்டும் போதும். நீங்க எந்த மாநிலத்துக்குப் போறீங்களோ அந்த மாநில மொழியை கத்துக்கோங்க. 4 மொழியை கத்துக்கிட்டா, ட்ரெயின்ல போகும்போது 4 பேரு துணைக்கு இருக்குற மாதிரி இருக்கும்”னு பேசுவாரு. ரொம்ப சரியான விஷயம். ஆனால், எதுக்கு கண்ணு, கண்ணாடினு பேசி சேம் சைட் கோல் போட்டுட்டு இருக்கீங்க?

தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழிசை சௌந்தர்ராஜன்

இந்தி மொழியை கத்துக்கணும்னு சொல்றதுக்கு எதிரா யாரும் கருத்து தெரிவிக்க மாட்டாங்க. இந்தி மொழியை திணிக்கிறதுக்கு எதிராதான் கருத்துகள் சொல்லப்படுது. இந்தி படிங்க, இந்தி படிங்கனு சொல்றவங்க காதுல இந்த விஷயம் விழவே இல்லை. வடமாநிலங்களுக்கு போகும் தேவை ஏற்பட்டா, கண்டிப்பா இந்தி கத்துக்கதான் போறாங்க. ஆனால், தமிழ்நாட்டுல இருக்குற மைல் கல்லுல இந்தியை எழுதுறது, தமிழக ரயில் நிலையங்களோட போர்ட்ல இந்தில பெயர் எழுதுறது, பேங்க்ல, போஸ்ட் ஆஃபிஸ்ல வட இந்திய மக்களை மட்டுமே அதிகளவில் வேலைக்கு வைக்கிறதுனு இவங்க பண்ற அட்டாகசம்தான் கொடூரமானது. கேட்டா, இந்தி படிங்கன்னு சொல்லுவாங்க. தமிழ்நாட்டுல ஏதோ கிராமத்தின் மூலைல இருக்குற படிப்பறிவில்லாத ஒரு பெரியவர் பேங்க்குக்கு போனால், அங்க இந்தி பேசுற அலுவலர் இருந்தா, அவர் எப்படி பேங்க்ல பணம், எடுக்கவோ, போடவோ முடியும்? இதுல டிஜிட்டல் இந்தியானும் பயங்கரமா கத்திட்டு இருக்காங்க. எவ்வளவு பிற்போக்கான செயல்களாக இதுலாம் இருக்குன்றதுதான் பலருக்கும் கேள்வியே! இந்தி மொழி அழியாமல் பாதுகாக்கணும்னு பா.ஜ.க தலைவர்கள் மேடைல பேசுறாங்க. இந்தியால பெரும்பாலான  மாநிலங்கள் தாய்மொழியைதான் பேசுறாங்க. அவங்க எல்லாரும் இந்தி மொழியைக் கத்துக்கிட்டு இந்தியை காப்பாத்துனா, அவங்க தாய்மொழியை யார் காப்பாத்துறது? மத்திய அரசின் கீழ் இயங்குகிற கல்வி நிலையங்கள்ல இந்தி மொழியை கட்டாமாக்க வேண்டும்னு அமித்ஷா தலைமையிலான அலுவல் ஆய்வு மொழிக் குழு பரிந்துரையும் பண்ணிச்சு.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

ஜிப்மர்ல இந்தி மொழியை திணிக்கிறாங்கன்ற பிரச்னை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டுச்சு. இந்த விவகாரத்துக்கு மறுப்பு தெரிவித்து பேசுன தமிழிசை, “எங்களைவிட தாய்மொழி மேல பற்று உள்ளவங்களை பார்க்கவே முடியாது. தமிழில்தான் நான் பதவியேற்றேன். இன்னொரு மொழி மேல வெறுப்பு இருக்கக்கூடாது. ஏன்னா, அது வேற ஒருத்தருக்கு தாய்மொழி. படிக்கிறமோ இல்லையோ முதல்ல மதிக்கணும்”னு பேசியிருந்தாங்க. ஹெச்.ராஜா  பொது நிகழ்ச்சி ஒண்ணுல பேசும்போது, “தமிழை வெறும் பேசுமொழியாக மட்டும்தான் திமுக மாத்தி வைச்சிருக்காங்க. தமிழோட பெருமையை உணர்ந்து செயல்படும் கட்சி பா.ஜ.க மட்டும்தான்”னு சத்தமா பேசியிருந்தாரு. பா.ஜ.க தமிழ் மொழி மேல எவ்வளவு அக்கறையோட இருந்தாங்கன்றதை சமீபத்துல நடந்த போராட்டத்துல இருந்து நாம தெரிஞ்சுக்கலாம். திமுகவிடம் இருந்து தமிழை பாதுகாக்கணும்னு நாமக்கல்ல போராட்டம் நடத்துனாங்க. அந்த போராட்டத்துக்கு பயன்படுத்துன போர்ட்ல “தமிழை கட்டயமாக்கு, கட்டயாமாக்கு”னு தப்பு தப்பா எழுதி தமிழை காப்பாத்திட்டு இருந்தாங்க. எல்லாத்தையும் சொல்ற அண்ணாமலை, எஸ்.வி.சேகர், தமிழிசை யாருக்கும் இந்தி தெரியாது. இதுல நம்மள படிக்க சொல்றாங்க.

அமித் ஷா
அமித் ஷா

இந்தி மொழியை கொண்டாடும் விதமா செப்டம்பர் 14 இந்தி திவாஸ் தினம் கொண்டாடுவாங்க. கர்நாடகால அதை கொண்டாடும் போது அந்த மாநிலத்துல உள்ள மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு எப்பவும் எழும். கர்நாடகாவோட முன்னாள் முதல்வர் குமாரசாமி சமீபத்துல இதுதொடர்பா தற்போதைய முதல்வருக்கு எழுதுன கடிதத்துல, “கர்நாடகால கன்னட மொழியை கொண்டாடுவதை தவிர்த்துவிட்டு, இந்தி மொழி தினத்தை கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது”னு குறிப்பிட்டிருந்தாரு. அமித்ஷாவோட அலுவல் மொழி அறிக்கையை சுட்டிக்காட்டி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “இந்தியைத் திணிப்பதற்கான மத்திய அரசின் முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை. நாட்டினை பிளவு படுத்தும் தன்மை கொண்டவை. வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். அனைத்து மொழிகளும் அலுவல் மொழி நிலையை எட்ட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா உட்பட பல திரைப்பட கலைஞர்களும் ‘இந்தி தெரியாது போடா’னுலாம் டீ ஷர்ட் போட்டு டிரெண்ட் பண்ணிட்டு இருந்தாங்க. இந்தி திணிப்பு சம்பந்தமா வேடிக்கையான பல மீம்ஸ் வந்துச்சு.

Also Read: விஜய் கரியரில் காதலுக்கு மரியாதையின் வசூல் சாதனை தெரியுமா? #SilverJubilee #TNNYoutube

சோஷியல் மீடியால போட்ட போஸ்ட்லாம்தான் அல்டிமேட், “இந்தி மொழியை திணிக்க நினைப்பவனுக்கு நான் ஒன்னு சொல்லிக்கிறேன். 400 வருசமா திணிச்சு பார்த்தும் இங்கிலீஷே முழுசா இன்னும் எறலடா அப்ரண்டிஸ்களா”னு கலாய்ச்சிருந்தாங்க. அதேமாதிரி, சென்னைல இருந்து ராஜஸ்தான் உயிரியல் பூங்காக்கு புலி ஒண்ணு கொண்டு போய்ருக்காங்க. அந்தப் புலி தமிழ்ல கட்டளைகள் சொன்னாதான் கேட்குது. இந்தி மொழி தெரியாமல் திணறுதுனு செய்தி பரவிச்சு. அதை ஷேர் பண்ணி, “புலி பசிச்சாலும் இந்தியில் சாப்பாடு கேட்காது”னு போட்ருந்தாங்க. இந்தி தெரிஞ்சா என்னலாம் பலன் இருக்குனு ஒரு போஸ்ட் பார்த்தேன். “இந்தி தெரிஞ்சதால டாக்ஸி டிரைவர்கிட்ட பேச முடிஞ்சுது, இந்தி தெரிஞ்சதால சாம்பார் நிறைய வாங்க முடிஞ்சுது, இந்தில திட்டுனதால பாலியல் வன்கொடுமை செய்ய வந்தவன் கையெடுத்து கும்பிட்டுட்டு ஓடிட்டான்”ன்னு போட்ருந்தாங்க. அடேய், இருந்தாலும் ரொம்ப பாவம்டா. உங்களுக்கு இங்கிலீஷ் வராதுனு, எங்களை இந்தி படிக்க சொல்றீங்க. என்ன ரங்கா நியாயமா?”னும் நிறைய பேர் கேட்ருந்தாங்க.

மொழி என்பது கம்யூனிக்கேஷனுக்கான வழி. அறிவு இல்லை. இதை முழுமையா ஏத்துக்கலாம். அதே சமயம் அந்த மொழியை திணிக்க நினைச்சாலோ, அரசியல் பண்ண நினைச்சாலோ, மக்கள் மனசுல மொழி, எமோஷனா மாறும். அதை வைச்சு அரசியல் பண்றவங்களுக்கே ஆப்பாகதான் போய் முடியும். குறிப்பா, தென்னிந்திய மாநிலங்கள்ல. பா.ஜ.க தலைவர்கள் பேசுறதை பார்த்தா உங்களுக்கு என்ன தோணுதுனு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top