தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆரின் Thuglife சம்பவங்கள்

தமிழ் சினிமா காட்டிய மதுரைக்காரர்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானவர் இந்த நபர். அதே சமயம் அந்த மண்ணுக்கே உரிய கெத்தோடு வலம்வருபவர். எதிராளியை அடிக்க ஆரம்பிப்பதற்கு முன் தலைக்கு மேல் கைகளைத் தூக்கி நெட்டி முறித்துவிட்டு அடிக்க… ச்ச்சே பேச, ஆரம்பித்தால் அடுத்த பதினைந்து நாள்களுக்கு இந்தியா முழுக்கவே அவர் செய்த சம்பவம் தான் பேசுபொருளாக இருக்கும். அந்த மதுரைக்காரர் தமிழக நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன். கடந்த ஒரு வருட காலத்துக்குள்ளாகவே இந்திய அளவில் அவர் செய்த தக்லைஃப் சம்பவங்கள் பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்…

PTR in & As வீரபாண்டிய கட்ட பொம்மன் சிவாஜி

புகழ்பெற்ற சிவாஜி பேசிய கட்டபொம்மன் வசனத்தின் நவீன ஆங்கில வெர்ஷனாக, “பொருளாதாரத்தில் Phd முடிச்சிருக்கியா..? நோபல் பரிசு வாங்கி இருக்கியா..? அப்படி என்ன சாதிச்சிருக்க…? நீ சொல்றதை ஏன் நாங்க கேக்கனும்..?” என அந்தப் பேட்டியில் அவர் செய்ததெல்லாம் ருத்ரதாண்டவம். அதிலும் அவரிடம் கேள்வி கேட்கும் போது பதில் சொல்ல தயாராகும் விதமும், பதிலளிக்கத் துவங்கும் போதே, “ஏழிலிருந்து, ஏழரை வரைக்கும் தான் நேரம் கொடுத்திருந்தேன். ஆனா…” என ஆரம்பிக்கும் போதே இன்னைக்கு ஏழரையைக் கூட்டப்போறேன் என சொல்லாமல் சொன்னார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, பார்க்க சாதுவான, பாய்ந்தால் புலியைப் போல பாஜகவினரை அடித்து துவைக்கும் மஹூவா மொய்த்ராவின் நாடாளுமன்ற உரைகளுக்கு நம்ம ஊர்ல இருந்து நம்ம பசங்க Fire விட்டுகிட்டிருந்தா, PTR-ன் சமீபத்திய பேட்டிக்கு மஹூவா மொய்த்ராவே Fire விட்ட சம்பவமெல்லாம் நடந்தது.

PTR in & As தெறி விஜயகுமார் ஐ.பி.எஸ்

வானதி ஶ்ரீனிவாசன்

GST Council கூட்டத்தில் பி.டி.ஆர் பேசின பேச்சுக்காக, வானதி ஶ்ரீனிவாசன் ட்விட்டரில் கொஞ்சம் கடிந்து அவருடைய நடத்தை பற்றி ட்வீட் போட்டார். அதற்கு பதிலாக ஒரு கேள்வியுடன் பிடிஆர் பதிவிட்ட ட்வீட் என்னவெல்லாம் செய்தது தெரியுமா? இரண்டு சம்பவங்களை மட்டும் சொல்றேன்.

சம்பவம் 1

பல பேரை அவர் பதிவிட்ட “Congenital Liar” என்ற வார்த்தைக்கான பொருள் என்ன என கூகுளில் தேட வைத்தது. Google Search -ல் ஒரு கீவேர்ட் தேடப்படும் அளவை வைத்து அந்த கீவேர்டுக்கான interst மதிப்பிடப்படும். அது 0 முதல் 100 வரை அளவிடப்படும். அந்த கீவேர்டின் interest 100 தொடும் சமயத்தில் மற்ற கீவேர்டுகளை விட அந்தக் குறிப்பிட்ட கீவேர்ட் பரவலாக அதிகமானோரால் அதிகம் தேடப்பட்டது என பொருள். PTR பதிவிட்ட May 30, 2021 அன்றுதான் அந்த கீவேர்ட் interest 100 தொட்டது, அதற்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை. எங்கெல்லாம் அதிகம் தேடி இருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள்.

அதற்குப் பிறகு “பொய்யாப் பேசிகிட்டுத் திரியுறான்யா” வடிவேலு வசனத்திற்கு இணையாக தமிழ் கூறும் ட்விட்டர் சந்தில் Congenital Liar என்ற வார்த்தை பரவலான புழக்கத்திற்கு வந்தது.

சம்பவம் 2

“ஆமா, இப்போ நீ என்ன கேட்ட?” என்ற தமிழ் சினிமா வசனத்தைப் போல PTR-ன் இந்த ட்வீட்டின் இரண்டாவது வரியை படித்தவர்கள் மீண்டும் மீண்டும் படித்தார்கள். மூன்றாவது வரியிலேயே அதற்கு ஒரு பன்ச்சும் வைத்தார். நான்காவது வரியில் அந்த வெடிகுண்டு வெடித்தபோதுதான் பலருக்கு இரண்டாவது வரியில் அவர் புதைத்து வைத்த வெடிகுண்டே புரிந்தது.

PTR in & AS Hulk

சுமந்த் சி ராமன்

Hulk smash mode-ற்குச் சென்று PTR அடித்துத் துவைக்கும் ஒரு நபர் நம்ம முன்னாள் Sports quiz master சுமந்த் சி ராமன். பார்க்க நமக்கே கொஞ்சம் பாவமா இருக்கும், ஆனா வம்படியா வாயைக் கொடுத்து புண்ணாக்கிக்குறதுனால சுமந்த்தை யாராலும் காப்பாத்த முடியாது. இந்த வீடியோவை நீங்க இன்னும் 5 வருஷம் கழிச்சுப் பார்த்தாக் கூட, “கடந்த வாரம்தான் சுமந்தை வறுத்தெடுத்தார் PTR”-ன்ற வார்த்தை அவுட்டேட் ஆகாம இருக்கும்.

சுமந்த் மட்டுமல்ல, இன்னும் சிலரையும் சம்பவம் செய்திருக்கார் மனுஷன்.

ஜக்கி வாசுதேவ் ஒரு பிசினஸ் மேன், அவர் கேக்குறதுக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை…

தகுதியுள்ள மனுஷன் பேசுற பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லலாம். நாய் குரைக்குறதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என H.ராஜாவையும் போகிற போக்கில் ஒரு எத்து விட்டிருப்பார்.

பாஜக தமிழகத் தலைவருடைய பெயரை PTR எப்பவுமே ட்விட்டரில் முழுசா சொன்னதே இல்லை, வெறும் 🐐 இந்த எமோஜி மட்டும்தான்…

இன்னும் பல பேரை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்… ஆனால், வீடியோவில் நீளம் கருதி இங்கயே முடிச்சிகிட்டு, வேற ஒரு சம்பவம் பத்தி அடுத்து பார்ப்போம்.

PTR in & as Shakespeare

கடந்த பத்து ஆண்டுகாலமாக இந்தியர்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாத, ஏன் ஷேக்ஸ்பியர் மற்றும் சாமுவேல் ஜாக்சனின் கொள்ளுப்பேரன்களுக்குக் கூட அதிகம் பரிச்சயமில்லாத வார்த்தைகளைப் போகிற போக்கில் சர்வசாதாரணமாகப் பயன்படுத்திவிட்டுப் போவார். அப்படி அவர் அறிமுகப்படுத்திய சில வார்த்தைகள் இங்கே…

Hippopotomonstrosesquipedaliophobia

Floccinaucinihilipilification

Lalochezia

Kakistocracy

Scripturient

இந்த வார்த்தைக்கெல்லாம் உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க.

சமீப காலமா, சசி தரூருக்கு சமமா இப்படியான ஆங்கில வார்த்தைகளை அறிமுகப்படுத்தும் இரண்டாவது இந்தியர் PTR தான். PTR English Dictionary-னு ஒன்றை நான் தொகுக்கலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன்.

மேலே சொன்ன Congenital Liar வார்த்தை மட்டுமல்ல, சமீபத்துல ஒரு பேட்டியில் “I am an educated thoughtful person. What do I know what goes on in the minds of these riff raff” என போகிற போக்கில் சொல்ல, முன்னாடியே சொன்ன மாதிரி நம்ம சுமந்த் வந்து அதுக்குப் பதில் சொல்ல, அதேதான். PTR திரும்ப அடிக்க என தமிழ் ட்விட்டர் உலகம் கொஞ்சம் மகிழ்ந்திருந்தது.

PTR செய்த சில தக்லைஃப் சம்பவங்கள் மட்டும் தான் இந்த வீடியோவில் பார்த்தோம், தலைவன் இன்னும் எக்கச்சக்கமா பண்ணியிருக்காரு, உங்களுக்கு டக்குனு சிரிப்பு வர மாதிரியான சம்பவத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top