திருநெல்வேலி மக்கள் வேறலெவல் யுனீக் பீஸ்.. ஏன் தெரியுமா?

“உங்க ஊருல பத்து பேரு அருவா எடுத்தா, எங்க ஊர்ல மொத்த பேரும் அருவா எடுப்போம்”னு மாஸா டயலாக் பேசுவாங்க, திருநெல்வேலிகாரங்க. மத்த ஊர் காரங்க, “திருநெல்வேலி பக்கம் மட்டும் போய்டாதீங்க, வாய்லயே வெட்டுவாங்க”னு பேசி பில்டப் கொடுத்து, கொஞ்சம் பயந்து போய்தான் பார்ப்பாங்க. லேய், பைய, சிரை, செத்த நேரம், செம்பு நக்கி, சேக்காளி, சோமாரிக்கியா, மூடு இப்படி கேட்டதும் கடுப்பாகுற மாதிரியான வார்த்தைக்குலாம் அர்த்தம் தெரியுமா? திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வரலாறு என்ன? திருநெல்வேலி மக்கள்னாலே ரக்கர்ட் பாய்ஸாதான் இருப்பாங்களா?

Tirunelveli
Tirunelveli

தமிழ்நாட்டுல ஃபேமஸான ஆள் ஒருத்தர் சென்னை சட்டக் கல்லூரில படிச்சிட்டு இருந்துருக்காரு. மந்தவெளில இருந்து தினமும் பஸ்ல அந்த காலேஜ்க்கு போவாரு. அவரு படிக்கிற சமயத்துல பஸ் டிக்கெட் விலை 40 பைசா. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடிகாரங்களை பார்த்தாலே ஈஸியா கண்டுபிடிச்சிடலாம். ஏன்னா, முகத்துலயே எழுதி ஒட்டியிருக்கும். அப்படியில்லைனா வாய திறந்த கண்டுபிடிச்சிடலாம். நான் சொல்ற அந்த செலிபிரிட்டி பஸ்ல ஒருநாள் போகும்போது முன் சீட்ல திருநெல்வேலிகாரர் ஒருத்தர் இருந்துருக்காரு. பஸ்ல கண்டெக்டர் ஒவ்வொருத்தர்கிட்டயா டிக்கெட் கேட்டுட்டு வந்துட்டு, இவர்கிட்டயும் வந்துருக்காரு. 40 பைசா டிக்கெட்டுக்கு 10 ரூபாய் எடுத்து நம்ம திருநெல்வேலிகாரர் நீட்டியிருக்காரு. கண்டெக்டர் கடுப்பாகி, சில்லறை கொடுங்க, இல்லைனா பஸ்ஸ விட்டு கீழ இறங்குங்கனு சொல்லியிருக்காரு. சில்லறை இல்லாட்டி இறங்குனா நீயும் சேர்ந்துதான் இறங்கனும்னு சொன்னதும், கண்டெக்டர் கடுப்பாகி டிக்கெட் ஒண்ணை எரிச்சல்ல கிழிச்சு நம்ம ஊர் காரர் கையில கொடுத்துருக்காரு. அதுக்கப்புறமும் சில்லறை இல்லைன்றல்ல, அப்புறம் என்னனு கோவப்பட்டு கத்தியிருக்காரு. உடனே, திருநெல்வேலிகாரர் ஒண்ணும் பிரச்னை இல்லை பைய தாயேன்னு அமைதியா சொல்லியிருக்காரு. நான் சில்லறை இல்லைனு சொல்றேன், நீ பைய தான்னு கேக்குற, சில்லறை இல்லைனு சொன்னா நம்ம மாட்டியா, எவ்வளவு கொழுப்பு உனக்குனுனு கண்டெக்டர் சொன்னதும், இவருக்கு கொஞ்சம் சிரிப்பு வந்துருக்கு. “நான் அப்படி என்னத்த கேட்டேன், பையதான்னு தான சொன்னேன். அதுக்கு இவ்வளவு கோவப்படுக?” அப்டின்றுக்காரு. உடனே, நம்ம செலிபிரிட்டி எழுந்துபோய், “பைய தான்னா, மெதுவா கொடு அப்டினு அர்த்தம். உன்னோட பைய கொடுன்னு அவர் கேக்கலை”னு எக்ஸ்பிளைன் பண்ணதும் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துருக்கு. அந்த செலிபிரிட்டி சுகிசிவம். ஒரு மேடைல பேசும்போது சொல்லுவாரு.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி தமிழ் எல்லாமே கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் இருக்கும். அந்த ஊர்காரங்க வேற ஊருக்குலாம் வந்தாங்கனா, ஃப்ரெண்ட்ஸயே லேய் இங்க வாலனு தான் கூப்பிடுவாங்க. அதுல அன்புதான் இருக்கும். ஆனால், என்ன இவன் நம்மள இப்படி திட்றான், முரட்டு ஆளா இருப்பான் போல அப்டி, இப்படினு குறை சொல்லி புலம்ப ஆரம்பிச்சிருவாங்க. மக்கானா அன்பா கூப்பிடுறது. மக்கா லே இந்த வார்த்தையைவிட அன்பான வார்த்தை சவுத் தமிழ்நாட்டுல வேற கிடையாது. சேக்காளினாலும் நண்பன்னு தான் அர்த்தம். சிரையா இருக்குனு சொல்லுவாங்க. அப்டினா, கடுப்பா இருக்குனு அர்த்தம். செத்த நேரம்னு சொல்லுவாங்க, அப்டினா சாகுற நேரம் இல்லை கொஞ்சம் நேரம் இருனு அர்த்தம். செம்பு நக்கின்றது திட்ட பயன்படுத்துற வார்த்தை. நம்மள பார்த்ததும் சோமாரிக்கியானு கேப்பாங்க. அப்டினா நல்லாருக்கியானு அர்த்தம். மூடு அப்டினா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. மரத்தடினு அர்த்தம். இப்படி ஏகப்பட்ட தமிழ் வார்த்தைகளை திருநெல்வேலிகாரங்க பயன்படுத்துவாங்க. திருநெல்வேலினு சொன்னாலே அல்வாவோட நியாபகம்தான் வரும். யாரு திருநெல்வேலிக்கு போனாலும், அல்வா வாங்கிட்டு வந்தியானுதான் கேப்பாங்க. அந்த இருட்டுக்கடை அல்வாக்கு செமயான வரலாறு இருக்கு. நெல்லை ஜமீன் ஒருத்தர் வடக்கு பக்கம் டூர் போய்ருக்காரு. ராஜஸ்தான்ல இருந்த கிருஷ்ணா சிங்னு ஒருத்தர் சூப்பரா ஸ்வீட்லாம் செய்றதப் பார்த்துட்டு அவரை கூட்டிட்டு வந்துருக்காரு. இங்க வந்து அவர் பண்ண இனிப்புகள் எல்லாம் மக்கள் மத்தில பெரிய அளவில் வரவேற்பு பெற்றுருக்கு. அவர் இறந்த பிறகு அவரோட மகன் பிஜிலி சிங் இனிப்புகளை செய்து விற்க ஆரம்பிச்சிருக்காரு. குறிப்பா அவங்க பண்ண அல்வா மக்களோட ஃபேவரைட்டா மாறிச்சு. நெல்லையப்பர் கோவில் பக்கத்துலயே கடை போட்டு நான்காவது தலைமுறையா நடத்திட்டு வர்றாங்க.

இருட்டுக் கடை அல்வா
இருட்டுக் கடை அல்வா

இருட்டுக்கடை அல்வானு ஏன் பெயர் வந்துச்சுனு உங்களுக்கு சந்தேகம் வரலாம். கடை ஆரம்பிச்ச காலத்துல காண்டா விளக்கு மட்டும்தான் அந்தக் கடைல எரியுமாம். எப்பவும் இருட்டா அந்தக் கடை இருக்குறதால, இருட்டுக்கடை அல்வானு பெயர் வந்துருக்கு. இன்னைக்கும் பெருசா ஒண்ணும் மாறலை. காண்டா விளக்கு மின் பல்பா மாறியிருக்கு. அந்த இருட்டு இன்னும் அப்படியேதான் இருக்கு. கடைகூட அதே பழைய கடையா தான் இன்னைக்கு வரைக்கும் இருக்கு. சாயங்காலம் 5 மணிக்கு கடையை திறப்பாங்க. 7 மணிக்குலாம் அல்வா வித்து முடிஞ்சிருமாம். கோதுமை மாவை இன்னும் கைகளால அரைக்கிறதுதான் அந்த அல்வாவோட டேஸ்டுக்கு காரணம்னு சொல்றாங்க. ஞாயிற்றுக்கிழமை கடை விடுமுறை. எப்பவும் கூட்டமாவே இருக்குற இந்த அல்வா கடை பெயர்ல போலியான கடைகள் எல்லாம் வந்துச்சு. அதை எதிர்த்து வழக்குலாம் அவங்க போட்டாங்க. அல்வா மட்டும் இங்க ஃபேமஸ் இல்லை. வாழைக்காயை தேங்காய் மாதிரி துருவி போட்டி வாழைக்காய் புட்டு பண்ணுவாங்க. அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். புளியில்லா குழம்பு, சொதி குழம்புலாம் வைப்பாங்க. சூடான சாதத்துல அதை ஊத்தி சாப்பிட்டா, அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். இட்லி, தோசைக்கு பெரும்பாலும் சட்னி, சாம்பார் வைச்சுதான சாப்பிடுவோம். ஆனால், திருநெல்வேலில கத்திரிக்காய் துவையல்னு ஒண்ணு வைப்பாங்க. டேஸ்ட் சும்மா பிச்சுக்கும். எக்ஸ்ட்ரா ரெண்டு இட்லி, தோசை உள்ள போகும். கார வடை, கடலை பருப்பு பாயாசம், சுரைக்காய் அடை, நீத்தண்ணி சோறு, வெந்தய மிளகாய், கருப்பு உளுந்தங்கஞ்சி, மாங்காய் தொக்குனு எக்கச்சக்கமான வெரைட்டியான உணவுகள் திருநெல்வேலில கிடைக்கும். 1961-ல நல்லவன் வாழ்வான்னு எம்.ஜி.ஆர் படம் ஒண்ணு வந்துச்சு. அதுக்கப்புறம் வடிவேலு ஒரு படத்துல பாடுவாரு. இப்போ லவ்டுடே படத்துல அதே குத்தால அருவி பாட்டு வந்துருக்கு. இப்படி குத்தால அருவி உலக லெவல் ஃபேமஸ்.

Also Read – விஜய் ஆடியோ லாஞ்ச் ஏன் ஸ்பெஷல்?

புலியை பார்க்கணும்னா முண்டந்துறைக்கு போனால் போதும். மரத்துல சிறுத்தை புதர்ல புலினு எல்லாமே பார்க்கலாம். கூந்தன்குளம் பறவைகள் பிரியர்களுக்கான இடம். எக்கச்சக்கமான பறவைகளை இங்க நீங்க பார்க்கலாம். மாஞ்சோலை செமயான ஏரியா. நிறைய பேர் அங்க போக மாட்டாங்க. அங்க வாழும் மக்கள்கூட பயணம் பண்ணனும், அவ்வளவு த்ரில்லிங்கா இருக்கும். மாஞ்சோலை படுகொலையும் வரலாற்றுல அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாத விஷயம்தான். அகத்தியர் அருவியும் ரொம்பவே ஃபேமஸ். தாமிரபரணி தண்ணி குடிச்சு வளர்ந்தவன் துப்பாக்கிக்குலாம் எப்பவும் பயப்பட மாட்டான்னு டயலாக்ஸும் இருக்கு. அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். எப்பவும் தண்ணியை இங்க பார்க்கலாம். ஆன்மீகவாதிகளுக்கு எக்கச்சக்கமான இடங்கள் இங்க இருக்கு. நெல்லையப்பர் கோயில், கிருஷ்ணாபுரம் கோயில் எல்லாம் கட்டிடக்கலை முதல் அங்க இருக்குற சிற்பங்கல் வரை எல்லாமே ஈர்க்கும். கடலும் அங்க இருக்கு. இப்படி குறிஞ்சு, முல்லை, மருதம், நெய்தல்னு பாலையை தவிர எல்லாமே திருநெல்வேலில இருக்கும். திருநெல்வேலியை மையமாக வைச்சு நிறைய படங்கள் வந்துருக்கு. திருநெல்வேலினே படம் வந்துருக்கு. அந்தப் படங்கள் எல்லாத்துலயும் திருநெல்வேலிகாரங்களை கரடு முரடு காரங்களாதான் காமிச்சிருப்பாங்க. ஆனால், பழகிப்பார்த்தா வழக்கம்போல ரொம்பவே பாசமானவங்களாதான் இருப்பாங்க. எக்ஸாம்பிள்க்கு தென்கச்சி சுவாமிநாதன் வாழ்க்கைல நிஜமாவே நடந்த சம்பவத்தை சொல்றேன்.

Tirunelveli
Tirunelveli

திருநெல்வேலி ரேடியோ ஸ்டேஷன்ல தென்கச்சி சுவாமிநாதன் வேலை பார்க்கும்போது, திருநெல்வேலி அரசு மருத்துவமனைல இருந்து டீன் ஃபோன் பண்ணியிருக்காரு. பாளையங்கோட்டைல வடநாட்டு பஸ்ஸும் லாரியும் மோதி ஸபாட்ல சிலர் இறந்துட்டாங்க. மீது பேர் உயிருக்கு போராடுறாங்க. எங்கக்கிட்ட ரத்தம் இல்ல. நீங்க ரேடியோல ரத்தம் வேணும்னு அறிவிப்பு கொடுத்தீங்கனா, அவங்களை காப்பாத்திடலாம்னு டீன் சொல்லியிருக்காரு. இவரும் அதை ஏற்றுக்கொண்டு, பாடல்களுக்கு நடுவுல, “நேயர்களே! ஒரு முக்கிய அறிவிப்பு. சற்று முன் நேர்ந்த விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களைக் காப்பாற்ற ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள் உடனடியாக பாளையங் கோட்டை மருத்துவமனைக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்”னு அறிவிக்கிறாங்க. ரெண்டு தடவை கேப் விட்டு இந்த அறிவிப்பை வெளியிடுறாங்க. கடைசி ரெண்டு பாடல் வெளியிட டைம் இருக்கு. அந்த நேரத்துல இன்னொரு ஃபோன் வருது. அதே டீன்தான். “தயவு செய்து மேற்கொண்டு யாரும் ஹைகிரவுண்ட் ஆஸ்பத் திரிக்கு ரத்ததானம் செய்ய வர வேண்டாம்னு சொல்லணும்”னு சொல்றாரு. என்னாச்சுனு கேட்டதும், “ஏகப்பட்ட பேர் ரேடியோ அறிவிப்பைக் கேட்டுட்டு ரத்தம் கொடுக்க இங்கே வந்துட்டாங்க… கூட்டத்தை எங்களாலே சமாளிக்க முடியலே. அவ்வளவு பேர்கிட்டே ரத்தம் கலெக்ட் பண்ணவும் இப்ப இங்கே வசதி இல்லே. ப்ளீஸ்”னு டீன் சொல்லியிருக்காரு. அந்த அறிவிப்பும் வெளியாகுது. அடுத்தநாள், இவங்க மருத்துவமனைக்கு போகும்போது அங்க இருந்த எல்லார் கண்ணுலயும் பாசம் தெரிஞ்சிருக்கு. இப்போ, நான் திருநெல்வேலிகாரம்லனு நீங்க மார்தட்ட்சி சொல்லிக்கலாம்.

திருநெல்வேலி பத்தி அவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தாலும், இந்த சாதிய தாக்குதல்கள் அதிகமுள்ள ஊர் பெயர்கள்லயும் அந்த ஊரை பார்க்க முடியும். அதையும் தவிர்த்துட்டாங்க அப்டினா, பாசமுள்ள நெஞ்சங்களா எல்லார் மனசுலயும் திருநெல்வேலிகாரங்க இடம் புடிச்சிருவாங்க. உங்களுக்கு திருநெல்வேலி பெயரை சொன்னதும் என்ன டக்னு நியாபகம் வரும்னு கமெண்ட்ல சொல்லுங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top